December 2025
31 Dec 2025
ஆங்கில புத்தாண்டு அழகாய் பிறக்கவும், ஆழ் கடல் திரவியங்கள் அனைத்தையும், இந்த ஆண்டில், உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கவும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
30 Dec 2025
துயருற்றோரின் கைகளை கொஞ்சம் அழுத்தமாய் பற்றிக் கொள்ளுங்கள்.... எதுவும் பேச வேண்டியதில்லை..... வார்த்தைகள் என்பது, உணர்வுகள் மென்று உமிழ்ந்த சக்கைதான்...
29 Dec 2025
குளத்தில் சேறு இருந்தால் தாமரை மலரும்.. மனதில் சேறு இருந்தால்?? மகிழ்ச்சி தொலையும்....
28 Dec 2025
பட்ட காயங்கள் ஆறிய பின்பும், அந்த பாளும் தழும்பு, நினைவூட்டிக் கொண்டிருக்கிறது பட்ட காயத்தை....
27 Dec 2025
நம் சொல், யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது... ஆனால் எழுத்து? அப்படி இருக்கக் கூடாது....
26 Dec 2025
முயற்சிகளை, வாய்ப்புகள் சந்திக்கிற அந்த புள்ளிதான், அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகிறது ...
25 Dec 2025
தொலைந்து போன உறவுகளுக்கு இடையேயான, தொலைந்து போகாத நினைவுகள் வந்து உறுத்துவது தான், வாழ்வா??
24 Dec 2025
வசந்தம் வந்து வாசலுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது... நாம் தான் இதய கதவுகளை மூடிக்கொண்டு அதை எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறோம்....
23 Dec 2025
உறுதியாக இருக்க முடியாது என, தெரிந்து கொண்டே, எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும், தேவையற்ற ஒன்று....
22 Dec 2025
நின்று நிலைத்திருக்க மட்டுமே பேரன்பு தேவை... விட்டு விலகி விட ஒரு வசைச்சொல் போதும்...
21 Dec 2025
கொடுக்கும் கரங்களை, தடுக்கும் கரங்கள் பல உண்டு இவ்வுலகில்... தடுக்கும் கரங்களைத் தகர்த்தெறிந்து, கொடுக்கும் மனிதரும் உண்டு காண்...
19 Dec 2025
பொதுவாகவே விலகிச் செல்வதை, பிரிந்துச்செல்வதென தவறாகக்கொள்கிறோம் ..... பிரிந்துச் செல்வது வெறுப்பினாலானது..... விலகிச் செல்வது காயப்படுவதிலிருந்து தப்பித்து செல்வது… பிரிந்தது திரும்பாது.. விலகியது திரும்பலாம்..
18 Dec 2025
காலத்திற்கும் - சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு, மனிதர்கள், மாறிக்கொண்டுதான் இருப்பார்கள்... கடந்து செல்லுங்கள்.....
17 Dec 2025
நான் தனி ஆள் என்று யார் சொன்னது?? என்னோடு எப்போதும் கூடவே இருப்பது நான்தானே! ஏகாந்தத்தில்...!!
16 Dec 2025
சக மனிதனொரு சல்லிப் பயல், அவனை நம்பக் கூடாது என்று, முடிவு எடுத்து போது தான், மிகவும் நம்பிக்கை கூறிய தோழனும், அருகில் இருந்தான்.... மனம் ஒரு குரங்கு.....
15 Dec 2025
ஆடு கோழியை பலியிடும் மனிதன் ஏன் சிங்கத்தையும் புலியையும் விட்டு வைத்தான்?? சிறு புல்லைத்தான் பிடுங்க முடியும். மரத்தை வேரோடு பிடுங்கத்தான் முடியுமா? வலியது வெல்லும்.. எளியது தோற்கும்...
14 Dec 2025
இன துரோகிக்கு இரண்டு சமாதிகள்... ஒன்று, இனத்தின் மனங்களில்.... மற்றொன்று, வரலாற்று குப்பைமேடுகளில், எப்பொழுதும்.....
13 Dec 2025
வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலெடுப்பான். ~ சாக்ரடீஸ் ~
12 Dec 2025
நம்மையும் அறியாமல், ஓசை இன்றி சில உறவுகள், நம்மிடமிருந்து விலகிக் கொள்கிறார்கள், ஒரு காலகட்டத்தில்..... மொட்டு அவிழ்ந்த மலர் தரை விழுதல் போல...
11 Dec 2025
சூடி தொடுத்த மாலையில் இருந்து, இரண்டு பூக்கள் தவறி விழுந்தன.. திசைக்கு ஒன்றாய்.... பாத்திருந்த காற்று கொஞ்சம் திருப்ப நினைத்தது.. உணர்ந்த பூக்கள் ஏனோ அதற்குள் வாடிவிட்டன.. இணைதலின் சுகம் பிரிதலில் இல்லை.. பிரிந்தபின் இணைதல் சுகமே இல்லை....
10 Dec 2025
தேவையான சந்தர்ப்பத்தில், முட்டாளாய் நடந்து கொள்வது கூட, ஒரு விதத்தில் புத்திசாலி தனமே....
9 Dec 2025
கடந்து போவதுதான் வாழ்வு.. யாரை , எப்போது, என்பதில் தான், பழியும் ஏமாற்றமும்...
8 Dec 2025
சிங்கமும், புலியும் சாதுக்கள்... இந்த மானும், மாடும்தான் கொடூரமானது... புல்லின் சொல்லில்.... சொல்லை விடவும் சொல்பவர் யார் என்பது முக்கியம்....
7 Dec 2025
காத்திருப்பதில் அப்படி என்ன சுகம் இருக்கிறது என்கிறாய்... சரிதான்.. உனக்காக காத்திருப்பதில் தான், என் உலகமே இருக்கிறது என்பதை, உனக்கு எப்படி சொல்ல.. காலை வணக்கம் ..
6 Dec 2025
எழுத்துப் பிழை இருப்பின் எளிதாக திருத்த முடிவது போல, எண்ணங்களில் பிழை இருப்பின், திருத்துவது அவ்வளவு எளிதாக இல்லை.....
5 Dec 2025
ஒருவரை அலட்சியப்படுத்துவது, எவ்வளவு பெரிய தவறு என்று, இழப்பு ஏற்படும் வரை தெரியாது.
4 Dec 2025
நிம்மதி பெற இரண்டு வழி... ஒன்று, சிறு குழந்தையுடன் வாயாடுதல்...... இரண்டு, வயது முதிர்ந்த பெரியவருடன் கதைத்தல்...... முதலாமவனுக்கு உலகம் தெரியாது... இரண்டாமவருக்கு அது போதுமாகி விட்டது.....
3 Dec 2025
சிலருடன் உரையாடும்போது மட்டுமே, அந்த குரல், செவி தாண்டி இதயம் தாக்கும்....
2 Dec 2025
1 Dec 2025