குறிஞ்சிட்டு

September 2024

  1. 30 Sept 2024

    மனம் எப்போதும் தன்னை அறிவாளியென்றே நினைத்து, கிரீடம் சூட்டிக் கொள்கிறது. வாய் தான் அவ்வப்போது அது உண்மையில்லை என்பதைச் சொல்லிச்சொல்லி, காட்டிக்கொடுத்தும் விடுகிறது....

  2. 29 Sept 2024

    அளவுக்கு மீறிய நம்பிக்கையோ, அல்லது, உரிமையோ தான், எல்லா அவமதிப்புக்களுக்கும் காரணமாகிறது... எதிலும் அளவோடு இருந்தால், எவ்விதமான பாதிப்புக்களும் இல்லை...

  3. 28 Sept 2024

    இன்றைய உலகில், சரியாய் இருப்பவன் சங்கடத்தை அனுபவிக்கிறான்... நரியாய் இருப்பவன், சந்தோசத்தை அனுபவிக்கிறான்...

  4. 27 Sept 2024

    இயற்கையாகவே அந்த துன்பம் கடந்து போகும்... நாம்தான் அதற்கு மேலும் மேலும் உணவளித்து உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறோம், நினைவுகளால்...

  5. 26 Sept 2024

    நமக்கான நியாயத்தை, வேறு யாரிடமும் எதிர்பார்க்கக் கூடாது.... ஏனெனில் அவர்களிடம் இருப்பது, அவர்களுக்கான நியாயங்கள் மட்டுமே...

  6. 25 Sept 2024

    எதுவும் இங்கு சுலபம் இல்லை.... ஆனால் எல்லாமே சாத்தியம் தான்...

  7. 24 Sept 2024

    புரிந்து கொள்ள மறுப்பவர்களை பற்றிய கவலை இல்லை... ஆனால், இவர்கள், புரிந்துகொண்ட வர்களை, குளப்பிவிடாமல் இருக்க வேண்டும் என்கிற கவலை எனக்கு உண்டு.. உங்களுக்கு??

  8. 23 Sept 2024

    யாரிடமும் ஏமாறாமல் வாழும் வாழ்க்கையை விட, யாரையும் ஏமாற்றாமல் வாழும் வாழ்க்கையே சிறந்தது...

  9. 22 Sept 2024

    வாழ்வின் இறுதிவரை நாம் எதை எதையோ தேடி அலைகிறோம்.. இறுதியில் தேவைப்படுவது மன அமைதியும் ஓய்வும் மட்டுமே.. இதை புரிந்தவர்கள் வாழ்கிறார்கள், புரியாதவர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள்...

  10. 21 Sept 2024

    வெற்றிக்குத் தன்னையும், தோல்விக்குப் பிறரையும், அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்... காலை வணக்கம்...

  11. 20 Sept 2024

    நாம் எதிர்கொள்கின்ற எல்லாவற்றையும் நம்மால் மாற்றிவிட முடியாது.... ஆனால் ஒன்றை எதிர்கொள்ளும்வரை அதை நம்மால் மாற்ற முடியாது.... காலை வணக்கம்...

  12. 19 Sept 2024

    முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறனே, முட்டுக்கட்டைகளை தகர்த்து, முன்னேற்ற வாசல் திறக்கும் திறவுகோல் ... .... காலை வணக்கம்...

  13. 18 Sept 2024

    எல்லா மனிதனும் மனநோயாளி தான்... சிலர் கிழிந்த உடையுடன்... பலர் கிழிந்த மனதுடன்....!! காலை வணக்கம்

  14. 17 Sept 2024

    எங்கே நாம் அதிகமாக காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கை பாடத்தின் முதல் அத்தியாயம் துவங்குகிறது என்பதை அறிக.. காலை வணக்கம்...

  15. 16 Sept 2024

    அலைபாயும் மனது, கரைத்தொட நினைக்கும் கடல் அலையை போல்... தொடவும் முடியாமல், திரும்பிச் செல்லவும் மனம் இல்லாமல்.. கிடைப்பதென்னவோ கிளிஞ்சல்கள் மட்டுமே... அமைதியான மனது, ஆழ்கடலை போல்... கடல் செல்வமனை த்தையும் தன்னகத்தே கொண்டு... காலை வணக்கம்...

  16. 15 Sept 2024

    பலர் புன்னகைக்கு நாம் காரணமாக இல்லா விட்டாலும்... சிலரது கண்ணீருக்கு நாம் காரணமாக இல்லாமல் இருப்பதே சிறந்தது... ! காலை வணக்கம்..

  17. 14 Sept 2024

    நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை... காலை வணக்கம்...

  18. 13 Sept 2024

    நம் திறமையை மற்றவர் அறிந்து கொண்டால் தொழிலாளி… நாமே அறிந்து கொண்டால் முதலாளி… அவ்வளவுதான் வாழ்க்கை.. காலை வணக்கம்...

  19. 12 Sept 2024

    பதவி,பணம்,புகழ் ஆகிய மூன்றையும் பெறுவதற்காக அதிக சிரத்தை எடுத்து கொள்வதற்கு மிகுந்த கவனம் தேவை... ஒரு நாள் இவை எதன் மீதும் கவனம் செலுத்தாத ஒருவரை சந்திக்க நேரிடும். அப்போது தெரியும் நாம், இருந்தும் இல்லாத ஏழை என்று... காலை வணக்கம்..

  20. 11 Sept 2024

    சில பயணங்களுக்கு பாதைகள் தேவையில்லை... வழித் தடங்களும் தேடல்களும் அவசியமில்லை... செல்ல வேண்டும்.. சென்று அடைய வேண்டுமென்ற ஆர்வமும், உந்துதலும் கூடிய இதயம் போதும்.... பாதைகள் தானாய் கண் முன் விரிந்து பயணத்தின் இலக்கு வானம் எனினும் வசப் பட்டுவிடும்... காலை வணக்கம்...

  21. 10 Sept 2024

    இருக்கின்ற தன்னம்பிக்கையை நம்பாமல்... இல்லாத மூடநம்பிக்கயை நம்பி கெட்டவர்களே இங்கு அதிகம்...!! காலை வணக்கம்

  22. 9 Sept 2024

    சிந்தித்து செய்தால் கிடைப்பது வெற்றி..... செய்துவிட்டு சிந்தித்தால் கிடைப்பது அனுபவம்...... காலை வணக்கம்..

  23. 8 Sept 2024

    எது ரசிக்கப்பட்டதோ, அதுவே ஒரு நாள் சலிப்பாகும்.... அற்புதமானது என்று போற்றப்பட்டதும் ஒரு நாள் குப்பையாகும்..... அவ்வளவுதான் மனித மனம்... காலை வணக்கம்...

  24. 7 Sept 2024

    அசையும் சொத்தானாலும், அசையா சொத்தானாலும், நம் உடல் அசையும் வரை தான் பயன்படும்!! காலை வணக்கம்...

  25. 6 Sept 2024

    ஞாபக சக்தி மூளைக்கு நல்லது... ஞாபக மறதி இதயத்துக்கு நல்லது...!! காலை வணக்கம்...

  26. 5 Sept 2024

    இங்கு யாருக்கும் யாரைப் பற்றியும் கவலை இல்லை.. ஏனென்றால், எல்லோருக்கும் ஏதோ கவலை ஒன்று இருக்கிறது தூக்கி சுமக்க...!! காலை வணக்கம்....

  27. 4 Sept 2024

    அகந்தையும் ஆணவமும் முன்னே சென்றால், அவமானம், பின்னால் தானே வரும்... காலை வணக்கம்...

  28. 3 Sept 2024

    “எப்போதும் அளவுக்கதிகமாக எச்சரிக்கையாக நடந்து கொள்கின்றவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதி, சலிப்பூட்டும் ஒரு வாழ்க்கை மட்டுமே” காலை வணக்கம்...

  29. 2 Sept 2024

    இழந்ததை விடுங்கள்... மிச்சம் என்ன இருக்கிறது என்று பாருங்கள்... அதிலிருந்து தொடருங்கள்... இன்னும் இருக்கிறது வாழ்க்கை, நீங்கள் வாழ்வதற்கு.... காலை வணக்கம் ....

  30. 1 Sept 2024

    நான் என்ன சொல்றேன்னா!! இன்றைய நிஜங்களை விட, வாழ்ந்து முடித்தவனின் நினைவுகள், நல்லவை... வல்லவை.... காலை வணக்கம்...