10 January 2026
Next →கே பி ஜி கிட்டண்ணன் மரணித்த காலை ..
இன்னமும் உயிர் உழைத்திருப்பவர்களுக்கு நான் பிணம்.. என் மீது கோபம் கொண்டவர்களுக்கு நான் ஒரு துரோகி.. என் மரணத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு நான் பிறவிப் பெருங்கடலை நீந்தி தாண்டியவன்.. என்னால் பேச முடியாது இப்பொழுது ஆனால் ஊன்றி கவனிப்பேன்.. என்னை நீங்கள் காண முடியாது.. ஆனால் நுகர முடியும். மலை முகட்டில் நின்று தலை வருடும் மேகங்களை அவதானித்த பொழுதும், நீங்கள் கால் நனைத்து கடற்கரையில் நின்று உங்கள் பாதங்கள் மணல் துகள்களை எண்ணிய போதும் , நீங்கள் உலாவிய மலர் தோட்டத்தில் உங்கள் நாசி நுனி நுழைந்த அமுதம் நான்.. இன்று பிணமாய் உயிரற்ற ஜடமாய்... உயிர்த்திருந்தபோது நீங்கள் காட்டிய அன்புகளுக்கும் பரிவுகளுக்கும் அளப்பரிய நன்றி சொல்லி அசையாமல் படுத்திருக்கும் பிணம் நான். போய் வருகிறேன் ... கொண்டாடுங்கள் நிர்வாணம் நிரந்தரம்.. யுவராஜ் சம்பத்….. KPG Kittu is gone today.. 10.01.2026