முருகு சிட்டு

14 August 2024

Next →

இ. சுதந்திரம் வயது 78.

நான் உங்களிடம் இருந்து தொலைந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை தேடி கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரிந்தும், நான் உங்களிடம் இருந்து தொலைந்து கொண்டு இருக்கிறேன்.. அந்தி மாலை நேரத்தில் கடற்கரை மணல் வெளியில் உலாவிக்கொண்டிருக்கிறீர்களா ? சற்று தலையை உயர்த்திப் பாருங்கள். மறைந்து கொண்டிருக்கும் சூரியனில் என் நினைவு உங்களுக்கு தோன்றலாம்.. மலையை, மழையை, ரசிப்பவர் தானே நீங்கள்? உங்களை தழுவுகிற மேகங்களின் ஊடே என்னை காணும் போதெல்லாம், நம் கடந்த கால, இனிய நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் மகிழ்வேன் தானே? வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகளில் உலாவுகிறீர்களா? வண்ணத்துப் பூச்சியை காணும் போதும், வண்டுகளின் ரீங்காரத்தை கேட்கும் போதும், அவை சுதந்திரமாய் இருப்பதாய் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தேடுதலை வேகப்படுத்துங்கள். நான் உங்களிடமிருந்து நிரந்தரமாய் பிரிவதற்கு முன்!!! இப்படிக்கு மரணத்திற்கு பின் நினைவேந்தல் நிகழ்ச்சி கொண்டாடுகிற உங்களின் உறவினன் இ. சுதந்திரம் வயது 78.