முருகு சிட்டு

10 March 2024

Next →

மகளுக்கான ..மயில் செய்தி

நேற்று கானகத்து வண்ண மயில் ஒன்று என் இல்லம் தேடி வந்தது என் தங்க மயிலை காண காத்திருந்தது.. காண இயலாமல் அவள் கண்டம் விட்டு சென்றது தெரியாமல்….. காத்திருப்பின் வலி தெரிந்த கானகத்து வண்ண மயில் வந்து சென்றதின் அடையாளமாய் ஒரு சிறிய அன்பு பரிசை உனக்காய் விட்டுச் சென்றது.. அது என்னிடத்தில் இப்போது… எப்போது மீண்டும் வருவாய் அதைப் பெற்றுக் கொள்ள?