6 July 2024
Next →மகளுக்கான ..செய்தி
அது ஒரு காலம் நிலவில் கால் பதித்து நடந்து கொண்டிருந்த காலம் தனியனாய்… நிலவைக் காட்டி சோறு ஊட்டிய அன்னை இல்லாமலும் கைப்பிடித்து நடக்க கற்றுக் கொடுத்த தந்தை இல்லாமலும் தனியனாய் நடந்து கொண்டிருந்த காலம்…. உடன்பிறந்தோறும் கைவிட உடன் வந்தவளும் மறுத்திட தனியனாய் நடந்து கொண்டிருந்த காலம்.. பிஞ்சுப் பாதங்கள் பட்டு மெத்தையில் நடந்த உணர்வு வானவில்லும் ஒரு சில வசந்த பூக்களும் என் தேவதையும் என்னோடு இருந்த காலம்….. இரவுகள் சூழாத நிலவு என்று எண்ணிக் கொண்டிருந்த காலம்.. இயற்கையின் கணக்கை யார் மாற்ற இயலும்? பகல் கழிந்தது இரவு வந்தது அதன் பின்னொரு இருண்ட காலம் 25 ஆண்டுகள் வசந்தம் துளிர்க்குமா காலம் பதில் சொல்லட்டும்…. காத்திருப்பேன்…