10 January 2024
Next →பொங்கல்..2024
இன்று கலர்கராய் கயிறு கட்டிக் கொண்டு திரிபவர் எல்லோரும் நாளை காலன் கழுத்தில் மாட்டப் போகும் கயிறு ஒரே கலர்தான் என்பதை எப்போது உணரப் போகிறார்கள்? இடுப்பு கயிறையும் சேர்த்து வெட்டியான் அறுத்து புதைக்க போகிறானே அன்றா? காலன் வீசிய சுறுக்கு கயிறு அம்மணமாய் நிற்க வைத்திருக்கிறது எத்தனை கயிறுகள் மஞ்சள் கயிறு மங்களம் என்பாய் கருப்பு கயிறு துக்கம் என்பாய் சிவப்பு கயிறு துணிச்சல் என்பாய் நீலத்தை ஒதுக்கி வைப்பாய் ஒவ்வொரு கலருக்கும் என்னென்ன கதைகள் சொன்னாய். துணைக்கு தொப்புள் கொடியோடு பிறந்த நாம் போகும்போது கொண்டுபோகப்போவது என்ன? புகழ்ச்சி இகழ்ச்சி இந்த ரெண்டில் ஒன்றை தவிர?? யுவராஜ் சம்பத்.. பொங்கல்..2024