28 July 2026
Next →இரங்கல் பா …
இது கையறு நிலையில் இயற்றிய இரங்கல் பா … போய் வாருங்கள் என்று சொல்லிவிடலாம் தான் — ஆனால் வரமாட்டீர்கள் என்பதே உண்மை… ஐம்பது வருடங்கள் என் இதய வீட்டின் ஒளி விளக்கு இன்று அணைந்தது — இருட்டில் நாங்கள்… இனி கைப்பிடித்து அழைத்துச் செல்ல, கரம் கோர்த்து நடக்க, எட்டாத தூரத்தையும் எட்டிக் கடக்க — என்றென்றும் எம் புகழ் பரப்ப ஏழை நான் என்ன செய்வேன்? மறவேன் என் தலைவனை என் இறுதி மணித்துளி வரை. அவன் பாதம் படிந்து தொடர் நடனம் புரிவேன் — அவன் நினைவை நெஞ்சில் ஏந்தி… இது கையறு நிலையில் பிறந்த இரங்கல் பா. யுவராஜ் சம்பத்...