முருகு சிட்டு

31 July 2026

Next →

யாரோ

கடந்து போகும் யாரோ ஒருவர் நாம் மறக்க நினைக்கிற யாரோ ஒருவரை நினைவு படுத்திக் கொண்டே கொண்டே செல்லுகிறார்..... உறவென சொன்னாய் காயா கனியா பழமா பூவா இலையா வேறு என்ன சொன்னாய்? இலையா சில காலம் இருந்து விட்டுப் போ கிளையாயின் இருக்கும் வரை உறவு உளுத்தபின் பிரிவு ஓஹோ பூவோ என்னால் மலர்ந்து மணம் வீசி மாலையில் மரணிக்கிற சிறுவாழ்வு .. நீ பிறத்தலும் இருத்தலும் , பின் பிரிதலும் உறவென்றாபின் இன்றென்ன நாளை என்ன