முருகு சிட்டு

28 February 2026

Next →

கதிர் மரணித்த காலை..

கதிர் மரணித்த காலை.. என் வாழ்வு கூட என்னுடையதானது அல்ல எனும்போது எது எனக்கு சொந்தம் வாழ்வு தாய் தந்தது கல்வி தந்தை தந்தது மழலைகள் மனைவி தந்தது செல்வம் ஊர் தந்தது பின் எது எனது? மூச்சுக்காற்று கூட இயற்கை தந்தது “கதிர் போய்விட்டான்” வாழ வேண்டிய வயதில், அனாதரவாக.. வாழப்போன இடத்தில் மாண்டு விட்டான். மரணம் மட்டுமே நிரந்தரம் எங்கும் எப்போதும். வாழும்போது வாழ கற்றுக் கொள்வோம். 28.02.2026