முருகு சிட்டு

28 October 2020

Next →

குஷ்பு..

பன்னெடுங்காலமாய் பல்வேறு நூல்கள் நிரம்பியிருந்தன இங்கே ... தாடிக்கார கிழவன் வந்தான் கொஞ்சகாலம் பொறுப்பிலிருந்தான் பரண்மீதேறி தேடிப்படித்து தேவையற்றவை என புறம் தள்ளினான் பலவற்றை ..... நல்லவற்றை மட்டும் படித்த நாங்கள் உருவனோம் ஒரு புதிய தலைமுறை. புதிதாக ஒருவன் பொறுப்புக்கு வந்தான். வண்ணத்திலும் , வர்ணத்திலும் வேறுபட்டான் எங்களிலிருந்து. வெறுத்து ஒதுக்கினோம் சிலகாலம்.... இன்று ஒருத்தி வந்தாள் எங்களவள்தான்.. உடன் பிறந்தாள்தான்... கிழவனின் பேத்தி எனச் சொல்லிக் கொண்டாள்... ஈன்ற பரம்பரைக்கு துரோகம் செய்தாள்... ஈனப்பிறவியோ?? கோழையை பெற்றவள் முலை அறுத்த மண் இது பாவி அவள் இதை மறந்தாள். முரசரைந்தான் தம்பி மடமையை கொளுத்த... அணி திரள்வோம் அவன் பின்னால்... பெண்மையை போற்றுவோம். வாழ்த்துக்கள் .. Oct 26, 2020,