முருகு சிட்டு

13 January 2020

Next →

2020 தமிழ் புத்தாண்டும் புதிய இந்தியாவும்..

2020 தமிழ் புத்தாண்டும் புதிய இந்தியாவும்.. ======================= பேராண்டி ஊர் ஊற்றிக் காட்டுகிறேன் .வா. உற்சாகத்துடன் ஓடிவந்தான் அமெரிக்க பேராண்டி அப்பா Is it safe? அம்மா என்பவள் அப்படித்தான் பேராண்டி..காவி கலர் தொப்பி போட்டுக்கோ. கருப்பு கலர் வேண்டவே வேண்டாம். பச்சை கலர் டீசர்ட் ஆகாது. சிவப்பும் கூட அவர்களுக்கு ஆகாது தானே மாப்பிள்ளையின் குரல் சற்று உரத்துக் கேட்டது.. குடிக்க தண்ணி எடுத்துட்டு வரவா? வேண்டாம் இன்றைய இந்தியாவின் ஆங்கீகரிக்கப்பட்ட குடி நீரான சூடான கோமியம் உண்டு என்னிடம்.. சரி கிளம்பலாம்.. அப்பா உங்கள் கைத்தடி மகள் கையளித்தார் இது எதுக்கு தாத்தா? பேராண்டி முகத்தில் அத்தனைஆச்சரியம் .. இது மூன்று தலைமுறையாய் எங்களைக் காத்தது இன்னும் நான்கு தலைமுறையை காக்கப் போகிற அந்தக் கிழவன் பெரியாரின் கைத்தடி இதைவிட ஒரு பேராயுதம் எங்களுக்கு கிடைக்காது. நிஜமாவா தாத்தா? இது கொம்பரக்கு,சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணை சேர்த்து,அரச்சு தஞ்சாவூர் பெருவுடயானுக்கு சாத்துர காப்பைவிட உயர்ந்ததுடா பேராண்டி… சரி வா போகலாம் .. எங்கே நான் சொல்லிக்கொடுத்ததை திரும்பச் சொல் பிழையின்றி பேரன் ஒப்புவித்தான் இன்று யாரை எதிரில் சந்தித்தாலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் என்று உரக்கச் சொல்வேன்..தாத்தா.. வாரி அணைத்து முத்தமிட்டேன். அந்த வாழ்த்து உங்களுக்கும் தானே தோழர்களே தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க இன்று போல் என்றும் யுவராஜ் சம்பத்..