15 August 2026
2026.. விடுதலை நாள் வாழ்த்து ...
இந்திய சுதந்திர தினம் 2026 ... தொலைந்துபோன சாவி கிடைத்தால் அளப்பரிய மகிழ்ச்சி கொள்ளும் பாழும் மனம், தொலைத்தவனை விடுவதில்லை! தொலைந்துபோன சாவியை யாரும் சபிப்பதில்லை... பூட்டுக்கு மட்டும்தான் சம்மட்டி அடி! தொலைந்துபோன சாவிதான் காசா மக்களின் சுதந்திரம்... அதைத் தொலைத்தவன் எவனோ? அவதியுறும் அவர்களிடம் போய் சுதந்திர வாழ்த்து என்று எப்படிச் சொல்வது? ஆகஸ்ட் 15 ஆவது... அடுப்பங்கரையாவது! பூட்டிய பூட்டுக்குச் சுதந்திரம் சாவியால் கிடைக்கும் என்றால், என் இதயக் கூட்டில் பூட்டிவைத்திருக்கும் பாவப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் யாரால் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? எதனால் கிடைக்கும்? ஆதிக்க வெறிபிடித்தவர்களே... உங்கள் அன்பை அழகான மலர்களால் வெளிப்படுத்தும் உங்களுக்கு, ஏன் காசாவில் மலர்ந்த ரோஜாக்கள் மனதுக்குள் வர மறுக்கின்றன? பாலஸ்தீனத் தோட்டத்தில் மலரும் ரோஜாக்கள் பாவப்பட்டவை என்பதாலா? மலர்களுக்குள்ளும் வேறுபாடு உண்டா? அங்கு மலரும் பூக்கள் மணம் வீசாதா? ஒருவேளை சந்தேகம் இருந்தால், உங்கள் ஆன்மாவையே கேட்டுப்பாருங்கள்! பாலஸ்தீனம் சுதந்திரம் பெறும் வரை, நாங்கள் இங்கு சுதந்திரத்தைக் கொண்டாடுவது பொய் முகமூடி அணிந்த போலி மனிதர்களாகவே எங்களை காட்டும் இருக்கும்! 2026 இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்... கொண்டாடும் யாவருக்கும்… ==================