April 2026
30 Apr 2026
முதுமையில், கற்றுக் கொள்வதை விட, ஏற்றுக்கொள்வது தான், அதிகமாக இருக்கும்...
29 Apr 2026
நிமிர நிமிர குட்டும் உலகம், நிமிர்ந்து நின்று விட்டால் , கைதட்டி ரசிக்கும்..
28 Apr 2026
மற்றவர்களின் இசைக்கு நீங்கள் ஆடுவதை விட, உங்களின் இசைக்கு நீங்களே ஆடிப்பாருங்கள்... வாழ்க்கை சுவையானதாக இருக்கும்...
27 Apr 2026
பணம் நல்லதுதான். ….. பணத்தால் வாங்கக்கூடிய பொருள்களை வைத்திருப்பதும் நல்லதுதான்…… பணத்தால் வாங்க முடியாத பொருள் எதனையும் இழந்து விட்டோமா என்று , அடிக்கடி சரி பார்த்துக் கொள்வதும் நல்லதுதான்……
26 Apr 2026
பூவிற்கு வண்ணத்தை போல, காலுக்கு செருப்பை போல, மழைக்கு குடையை போல , இருப்பது தான் நட்பு...
25 Apr 2026
பறவை கடந்த தூரம், பிரிந்த அந்த ஒற்றை சிறகுக்கு , எப்படி தெரியும் ..??
24 Apr 2026
எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று தெரிந்தும், மனிதன், ஏனோ எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிறான்.. வேடிக்கை மனிதர்கள்..
23 Apr 2026
பெரிதினும் பெரிது வேண்டும் என்றால் , அரிதினும் அரிதான செயலை செய்ய வேண்டும் ..
22 Apr 2026
செத்தவனின் ஆசையை , காலம் தாழ்த்தி , நிறைவேற்றினான் இறைவன் …. செத்தவனுக்கு உயிர் வந்தது .. தூக்கி வந்தவனை சேர்த்து நான்கு பேர் .. மீண்டும் செத்துப் போனான், வாழ்ந்த வாழ்க்கையை நொந்து..
21 Apr 2026
யாருடைய வலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.. ஆனால் எல்லோருக்கும் வலிக்கும் என்ற புரிதல் இருந்தாலே போதும்...
20 Apr 2026
தெரிந்தால் பேசுங்கள்.... இல்லையெனில் தெரிந்ததை பேசுங்கள்...... அதுவும் இல்லையெனில் தெரிந்து கொண்டு பேசுங்கள்...... ஆனால் தெரிந்த மாதிரி மட்டும் பேசாதீர்கள்..... நிச்சயம் அவமானப்படுவீர்கள்.....
19 Apr 2026
பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது….. பெருமை என்பது , உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது….
18 Apr 2026
தொட்டு உணரும் வரை தெரியாது , கானல் நீருக்கும் , கண்ணீருக்கும் உள்ள வித்தியாசம்….
17 Apr 2026
காலம் சரியான நேரத்தில் , சரியான மனிதர்களை சந்திக்க வைக்கும் …. அவர்கள் உங்களுக்கு நண்பனாகவோ, வழிகாட்டியாகவோ, ஆறுதல் கூறுபவர்களாகவோ, கற்று தருபவர்களாகவோ கூட இருக்கலாம்..... மனிதர்கள் வியப்பானவர்கள்......
16 Apr 2026
திட்டமிட்டபடி எதுவும் நடப்பதில்லை என்பதுதான் வாழ்வின் பேரழகு .. வாழ்தலின் மகத்துவம் ..
15 Apr 2026
ஒரு மனிதனுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம் ஆகும்பொழுது, அமைதியும் பொறுமையும் தேவை….
14 Apr 2026
மின் மயானத்தில் , எரியூட்டும் தகன மேடைக்கு எதிரில் , காத்திருப்போர் அமர நாற்காலிகள் .. நானும் அமர்ந்திருந்தேன் , என் நாள் எந்த நாள் என்று தெரிந்திடாமல் ..
13 Apr 2026
எதிரி தவறிழைக்கும்போது மௌனித்திருங்கள் ..
12 Apr 2026
நாம் சம்பாத்தித்தது நம் சொத்து அல்ல .. மாறாக , அனுபவித்தது மட்டுமே நம் சொத்து ..
11 Apr 2026
ஆலமரத்தில் முத்தமிட்டு கொண்டிருக்கும் இரு இலைகளில் , யார் முதலில் வீழ்வது என்பதை, யார் முடிவு செய்வது?
10 Apr 2026
யாரையும் முழுவதும் சார்ந்து இருக்காதீர்கள்... காலம் மாறும்போது கைவிடப்பட்டால் கலங்கி போவீர்கள்...
9 Apr 2026
சிதறிச் சென்ற சில வார்த்தைகளால் , கோர்க்க முடியாமல் , பதறி ,சிதறிக் கிடக்கிறது , பலரது வாய்ப்பும் , கனவு வாழ்க்கையும்...
8 Apr 2026
வாழ்க்கை என்பது யாதெனில், சில நேரம் அன்புக்கும், சில நேரம் பணத்திற்கும், சில நேரம் நிம்மதிக்கும் , கடைசியில் , இறப்புக்கும் ஏங்க வைக்கும் புரியாத புதிர்...
7 Apr 2026
யாரிடமும் கையேந்தி நிற்க கூடாத இரண்டு தருணங்கள்.. ஒன்று இளமையில், பணத்திற்காக.... மற்றொன்று முதுமையில், அன்புக்காக ...
6 Apr 2026
சொற்கள் விதைகளைப் போன்றவை…. விதைத்து விட்ட பின் , நாம் மறந்துவிட்ட பின்பும், அவை நமக்குத் தெரியாமல் வளர்ந்து நிற்கும்…. சில நல்லவையாக.. சில மிகக் கெட்டவையாக…
5 Apr 2026
எங்கே வாழ்க்கை தொடங்கும் , அது எங்கே எவ்விதம் முடியும் ? இதுதான் பாதை , இதுதான் பயணம் என்பது , யாருக்கும் தெரியாது….. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்… மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்…. கண்ணதாசன்…….
4 Apr 2026
எல்லா உறவுகளும் கண்ணாடி போல் தான்... உடையாத வரை ஒரு முகம் காட்டும்... உடைந்து விட்டால் பல முகம் காட்டும்...
3 Apr 2026
நீங்கள் யாரையாவது விரும்பினால், அவர்களை போகவிடுங்கள்…. அவர்கள் திரும்பி வந்தால், உங்களுக்குரியவர்கள்…. வரவில்லையென்றால், ஒருபோதும் உங்களுக்குரியவரல்ல. … -கலீல் ஜிப்ரான்-
2 Apr 2026
1 Apr 2026
அடுத்தவர்கள் மனதையும் புரிந்து கொள்ளப் பாருங்கள். நாம் நினைப்பது மட்டுமே சரி என நினைத்து செயல்படாதீர்கள்……