குறிஞ்சிட்டு

January 2026

  1. 31 Jan 2026

    பேசுவதற்கு பல நூறு வார்த்தைகள் உள்ளன,அவனிடம் .. ஆனால் காது கொடுத்து கேட்கத்தான் ஆளில்லை ..

  2. 30 Jan 2026

  3. 29 Jan 2026

    எளியவர்கள் ஜெயிக்கும் போது, சாமானியர்கள் கூட நிற்பார்கள்...

  4. 28 Jan 2026

    மகன்களுக்கு தெரிவதில்லை அப்பாவின் தேவை... மகள்கள் மட்டுமே எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறார்கள்....

  5. 27 Jan 2026

    எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று தெரிந்தும், மனிதன், ஏனோ எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிறான்..... வேடிக்கை மனிதர்கள்..

  6. 26 Jan 2026

    தாங்கள் தவறு செய்யும்போது, மூடி மறைக்க வழி தேடுகிறார்கள்.... ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது, அந்த அவமானத்தைப் பரப்புவதற்கு ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள்.....

  7. 25 Jan 2026

    எல்லோர் மனதிலும், சொல்ல முடியாத கதைகளும், சொல்லி தீராத கதைகளும், ஏராளம் உண்டு….. அதை, பகிர அனுமதிக்கிற நண்பர்கள் கிடைத்தவர்கள் , பாக்கியவான்கள்..

  8. 24 Jan 2026

    பல ஆதாரங்களுடன் நாம் சொன்ன உண்மையை விட, ரகசியமாய், யாரோ சொன்ன பொய்கள் தான் நம்பப்படுகிறது, இந்த வேடிக்கையான உலகத்தில்...

  9. 23 Jan 2026

    வெள்ளிச் சிமிழில் பால்.. வெள்ளித்தட்டில் சாப்பாடு.. மண் சட்டி உடைத்து தண்ணீர் தெளித்து தகனம்.. இரண்டுக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை...

  10. 22 Jan 2026

    போராடும்போது வீண் முயற்சி என்பார்கள்...... வென்றுவிட்டால், விடாமுயற்சி என்பார்கள், இந்த பாழும் மனிதர்கள்.....

  11. 21 Jan 2026

    ஒருவரையும் நம்பாதவர்களை, மற்றவர்கள், எதற்காகவும், நம்பப் போவதில்லை....

  12. 20 Jan 2026

    ஆணி நிமிர்ந்து நின்றால் சுத்தியலுக்கு பிடிக்காது.. நாம் நிமிர்ந்து நின்றால், சுற்றியுள்ளவர்களுக்கு பிடிக்காது..

  13. 19 Jan 2026

    பிறந்த ஊரிலிருந்து மண்ணெடுத்து வந்து தொட்டிச்செடி வளர்த்தேன். மலர்ந்த பூக்களில் எல்லாம் தாய்ப்பாலின் வாசம். ~ வீரமணி ~

  14. 18 Jan 2026

    கோபத்திற்கு ஆயுள் குறைவு.... கோபத்தில் பேசிய வார்த்தைகளுக்கு ஆயுள் அதிகம்....

  15. 17 Jan 2026

    மனம் தண்ணீர் போன்றது... கொந்தளிப்பாக இருக்கும்போது, பார்ப்பது கடினம்... அமைதியாக இருக்கும்போது எல்லாம் தெளிவாகிவிடும்...

  16. 16 Jan 2026

    திறந்திருக்கும் போதும், மூடப்படும் போதும் உன் கை இருப்பதைப் போலவே இரு...! அது எப்போதும் திறந்தே இருந்தால், தன் வலிமையை இழந்து விடும்; எப்போதும் மூடியே இருந்தால், அது வாழ்க்கையின் உணர்வை இழந்து விடும். சர்வ ஞானமும் சமநிலையில் தான் உள்ளது...! மௌலானா ரூமி --

  17. 15 Jan 2026

    பெரும்பாலும், சாக்கடைகளும், தங்களை, ஒரு ஜீவநதி என்று நினைத்துக் கொண்டுதான், ஓடுகின்றன....

  18. 14 Jan 2026

    எல்லோருடைய வலியையும் புரிந்து கொள்ள தேவையில்லை.... எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும்...

  19. 13 Jan 2026

    பொய்யை, புனை கதைகளை, நம்பும் முட்டாள்களின் முன், பேருண்மைகள், எப்பொழுதும் மண்டியிடுவதில்லை...

  20. 12 Jan 2026

    விட்டுச் சென்றவர்களும், விலகிச் சென்றவர்களும், வீசி எறிந்து விட்டுப் போனதை, சுமந்து கொண்டு, வாழ்நாள் முழுதும் திரிய, நாம் என்ன குப்பைத் தொட்டியா? இல்லை.....

  21. 11 Jan 2026

    உலகிலேயே, சுமக்கவியலா அளவிற்கு கனம் கூடியது, ஏதேனுமொரு ஒற்றைச் சொல்லாகவும் இருக்கலாம்......

  22. 10 Jan 2026

    இடையில் இறங்கிவிடுவோம் என தெரிந்தே ஒரு பயணம்.... ஒருநாள் இறந்துவிடுவோம் என தெரிந்தே ஒரு வாழ்க்கை.... எதுவுமே நிரந்தரம் இல்லா இவ் வாழ்க்கையில், நிரந்தரமில்லா சிலருக்காக வருத்தம் ஏனோ??? தெரியவில்லை........

  23. 9 Jan 2026

    தூண்டிலுக்கு தப்பும் மீன் சொல்லும் செய்தி என்ன? வாயை மூடிக்கொண்டு இருந்தால் ஆயுள் நீளும்..

  24. 8 Jan 2026

    உங்களை வழி நடத்த, அறிவை பயன் படுத்துங்கள்.... மற்றவர்களை வழி நடத்த, அன்பை பயன் படுத்துங்கள்....

  25. 7 Jan 2026

    வாழ்க்கையில், சில மனிதர்களிடம் கேள்வியையும், சில மனிதர்களிடம் பதில்களையும், எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது...

  26. 6 Jan 2026

    எதுவும் சில காலம் தான் என்பதை அறிய, பல காலங்கள் ஆகிவிடுகிறது....

  27. 5 Jan 2026

    எதையும், யாரிடத்திலும், எதிர்பார்ப்பது நிற்பதை விட, அவர்கள் எதிர்பார்க்கும் இடங்களில், நம்மை நிறுத்துவது தான், சிறந்த வாழ்வு...

  28. 4 Jan 2026

    எப்போதெல்லாம் உணர்வு விருப்பத்துடன் முரண்பட்டு நிற்கிறதோ, அப்போதெல்லாம் உணர்வுதான் வெற்றி பெறும். emotion prevails...

  29. 3 Jan 2026

    வாய்ப்புகளே இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை... பயம் தான் நல்ல வாய்ப்பைக்கூட இழந்து விட செய்கிறது...!

  30. 2 Jan 2026

    வேண்டாம் என்கிற இடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள்.... இல்லையேல், முதலில் அவமதிப்பார்கள் ..... அடுத்தது வெறுப்பார்கள் ... அடுத்து தவறானவன் என்ற பட்டம் சூட்டிவிடுவார்கள்....

  31. 1 Jan 2026

    எதிர்க்க ஆளில்லையென மார்தட்டாதீர்கள்.... தவிர்த்து ஒதுங்குவதற்கும், பயந்து ஓடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.....