January 2025
31 Jan 2025
வாய் தவறி விழும் வார்த்தைகள், கை தவறி விழும் கண்ணாடியை விட, கூர்மையானவை…
30 Jan 2025
அறிவு என்பது, புதியவற்றை தெரிய வைக்கும்... புத்தி என்பது, தெரிந்தவற்றை தெளிய வைக்கும்...
29 Jan 2025
ஏதேனும் ஒரு கணத்தில், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, எங்கேயாவது சென்றுவிட வேண்டும் எனும் மன நிலைக்குத் தள்ளப்படுபவர்கள், ஒருபோதும், எங்கேயும் சென்று விடுவதில்லை .... அங்கேயே உழல்வதுதான் அவர்களின் நிலை...
28 Jan 2025
தேவை எது என்பதில், தெளிவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எது தேவையில்லை என்பதில், தெளிவாக இருந்தால் போதும்....
27 Jan 2025
நிறைய உழைக்கத் தெரிந்த அளவுக்கு, கொஞ்சம் போல், நடிக்கத் தெரிந்திருந்தால், வாழ்வின் சில பள்ளங்கள், மேடாகியிருக்கும்.
26 Jan 2025
வாழ்க்கை குறுகியது.. வாழுங்கள்... கோவம் தேவையற்றது.. அதை தூக்கி எறியுங்கள்... பயம் மோசமானது.. அதை எதிர்கொள்ளுங்கள்... நினைவுகள் இனிமையானவை.. அதை ரசியுங்கள்...
25 Jan 2025
பிறரை நீங்கள் மதிப்பவராக வாழ்ந்தால் மட்டுமே, பிறர் உங்களை மதிக்கின்ற நிலை வந்து சேரும்...
24 Jan 2025
பேச வார்த்தைகள் இல்லாத போது மௌனமாவதில்லை... பேசி எந்த பயனுமில்லாத போதே மௌனமாகிறோம்..
23 Jan 2025
ஒழுக்கம் இருந்தால் கவலை இல்லை.. அறிவாளியானால் குழப்பம் இல்லை.. துணிவு இருந்தால் அச்சம் இல்லை..
22 Jan 2025
யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம்.. அழுகிய பழங்கள் தானாகவே உதிர்ந்துவிடும்...
21 Jan 2025
கோபம் எல்லோருக்கும் திமிராகத்தான் தெரியும்.. ஆனால், கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்பதை புரிந்தவர்களுக்கு மட்டுமே, அதன் அர்த்தம் புரியும்..
20 Jan 2025
ஆசைகளுக்கு தான் எதிர்காலம் தேவை... ஆனந்தமாக வாழ்வதற்கு, நிகழ்காலமே போதும்...
19 Jan 2025
ஒருவரை பக்குவமான மனிதனாக மாற்றுபவை உதவிகளோ வசதிகளோ அல்ல.. இடையூறுகளும் துன்பங்களுமே..
18 Jan 2025
பந்தியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொன்றையும், கேட்டுக் கொடுங்கள்..... பசியோடு இருப்பவர்களுக்கு எதையும், கேட்காமல் கொடுங்கள்....
17 Jan 2025
நாம் கடந்து செல்லும் பாதையை விட கடினமானது, நம்முடன் பயணம் செய்யும் மனிதர்கள்.. தடுமாற்றம் கூடாது.. கவனம் தேவை..
16 Jan 2025
வாழ்க்கை பல சமங்களில், பெருந்துரோகங்களை மறக்கச் செய்து விடுகிற அளவிற்கு, சின்னச்சின்ன ஏமாற்றங்களை, மறக்கச் செய்வதில்லை.....
15 Jan 2025
அனுபவம் என்பது தவறுகளை திருத்திக் கொள்வது..... ஆணவம் என்பது தவறுகளை நியாயப்படுத்துவது. . ஆணவம் வாழ விடாது.... அனுபவம் வீழ விடாது....
14 Jan 2025
இல்லாததை தேடுங்கள் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். இழந்ததை மட்டும் தேடாதீர்கள். அது நிச்சயம் வேறொருவர் கைகளில் கிடைத்திருக்கும்.
13 Jan 2025
எவ்வாறு பேச கற்றுக் கொண்டுள்ளோமோ, அதைப்போலவே, மௌனத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்... பேச்சு வழிகாட்டும்.. மௌனம் சில நேரங்களில் பாதுகாக்கும்... காலை வணக்கம்....
12 Jan 2025
எவ்வாறு பேச கற்றுக் கொண்டுள்ளோமோ, அதைப்போலவே, மௌனத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்... பேச்சு வழிகாட்டும்.. மௌனம் சில நேரங்களில் பாதுகாக்கும்...
11 Jan 2025
சிரித்த முகம், சில வலிகளை போக்கும்... அன்பான ஒரு பார்வை, அமைதியை தரும்... ஆறுதலான வார்த்தை, ஆனந்தத்தை தரும்.. மூன்றும் கிடைப்பது தான் கடினம்...
10 Jan 2025
தூக்கிஎறிய இரண்டு நொடிகளே, போதும்.. தூக்கி எறிந்ததை, திரும்பஎடுத்து மடியில் வைக்கலாம் என நினைக்கும் போது , ஈகோவும்,பிடிவாதமும் சேர்ந்து கொள்வதால், அதன் எடைகூடிவிடுகிறது..
9 Jan 2025
முள் குத்திவிட்டது என்று முள்ளை குறை கூறாமல், தவறான இடத்தில் காலை வைத்து விட்டோம் என, பாதை மாற்றுபவர்களே புத்திசாலிகள்…
8 Jan 2025
சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள், புத்தகத்திலும் இருப்பதில்லை...
7 Jan 2025
மூடர்களிடம் ஆலோசனை கேட்பது, இரு கண் இழந்தவர்களிடம் திசை வழி கேட்பது போல...
6 Jan 2025
அறிவு தேடலின் ஆர்வத்தை, முட்டாள்களிடம் விவாதிக்கக்கூடாது...
5 Jan 2025
அழகானவை எல்லாம் கண்களில் குடியேறலாம்.. ஆனால் அற்புதமானவைகள் மட்டுமே இதயத்தில் குடியேறும்...
4 Jan 2025
மனமும் மூளையும் குழப்பவாதிகள்... இந்த இரண்டில் ஒன்று ஏதோ ஒன்றின் அடிமை... அதுதான் சித்தன் போக்கு சிவன் போக்கு...
3 Jan 2025
நிஜத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமல் , என்ன இருக்க வேண்டும் என்பதையே பார்த்துக்கொண்டும் , யோசித்துக்கொண்டும், கற்பனை செய்து கொண்டும் இருப்பது , பயத்திற்க்கும், விரக்திக்கும் கொண்டு செல்லும்.
2 Jan 2025
புல்லாங்குழலில் நுழைந்த காற்று, வெளிவர மறந்த போது, இசை மரணித்து விடுகிறது... அந்தப் புல்லாங்குழலின் மௌனம் புரிந்தால் மரணம் கூட சுகமே....
1 Jan 2025
பாதங்கள் சிறியதாக இருந்தாலும், பாதைகள் பெரிதாக இருக்கட்டும்... பார்வைகள் அதைவிட பெரிதாகட்டும்...