November 2024
30 Nov 2024
ஒரு நாள் மகாராஜாவாக சிம்மாசனத்தில் அமர வைப்பதிலும், மறுநாளே, திருவோடு தந்து வீதிக்கு துரத்துவதிலும் கைதேர்ந்தது இந்த வாழ்க்கை.. மகாராஜாவாக இருந்தபோது கிடைத்த திருவோட்டை பத்திரமாய் வைத்திருப்பதில் இருக்கிறது, நம் சாமர்த்தியம்..
29 Nov 2024
நம் எல்லை எது என்பதை நாமே உணர்ந்து, அங்கேயே நின்று விட்டால் ,கௌரவம்... அந்த இடத்தில் நம்மை அடுத்தவர்கள் கொண்டு வந்து நிறுத்தினால் அது அவமானம்....
28 Nov 2024
பிடிவாதக்காரர்களிடம் வாதாடாமல் இருப்பதும், முடிவு எடுத்தவர்களிடம் விவாதிக்காமல் இருப்பதும், புரிந்து கொள்ளாதவர்களிடம் பேசாமல் இருப்பதும், சிறப்பு..
27 Nov 2024
புரிதலும், நிதானமும், ஒரு மனிதனுக்கு தவறும் போது, அவனுடன் சேர்ந்து பயணிக்கும், அத்தனை பேருக்கும், நிம்மதி இருக்காது.....
26 Nov 2024
பசுவைப் போல் சாந்தமாக இருந்துவிட்டுப் போக ஆசைதான்.. ஆனால், நரிகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணரும் போது ,கர்ஜனை செய்யாமல் கடந்து செல்ல முடிவதில்லை...
25 Nov 2024
நல்லதை கூட சில இடங்களில், பேசாமல் இருப்பது நல்லது....
24 Nov 2024
தண்ணீரை போல இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.... ஏனென்றால் அதற்கு ஒதுங்கி போகவும் தெரியும், அடித்து கொண்டு போகவும் தெரியும்!
23 Nov 2024
கடைசி தீக்குச்சியை, பற்ற வைப்பதில் உள்ள கவனம், முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால், வாழ்க்கையை எளிதில் ஜெயித்து விடலாம்....
22 Nov 2024
தேடும்போது தொலைந்து விடுகிறது, நிம்மதி.. தேடினாலும் கிடைக்காத ஒன்றும்,அதுதான்..
21 Nov 2024
ஒவ்வொரு நாளும் அழகுதான்... அனுபவிக்க தெரியாமல் தான், அலைந்து கொண்டு இருக்கிறோம்..... இன்றைய நாளில் புதிதாய் என்னசெய்யப் போகிறோம் ??
20 Nov 2024
பார்க்கின்ற அனைத்தையும் மனதிற்கு கொண்டு செல்லவும் கூடாது,, மனதில் நினைப்பது அனைத்தையும் பேசிவிடவும் கூடாது, இரண்டும் பிரச்சனைதான்.....
19 Nov 2024
தைரியம் என்பது, ஆண்களுக்கு வீரமாகவும், பெண்களுக்கு மட்டும், திமிராகவும் பார்க்கப்படுகிறது...
18 Nov 2024
ஏமாற்றங்களையும் துரோகங்களையும் அதிகம் சந்தித்தவர்களுக்கு, வாழ்க்கையில் தத்துவம் மட்டுமல்ல, சாமர்த்தியமும் தானாகவே வரும்.. காலை வணக்கம்.
17 Nov 2024
ஏமாற்றங்களையும் துரோகங்களையும் அதிகம் சந்தித்தவர்களுக்கு, வாழ்க்கையில் தத்துவம் மட்டுமல்ல, சாமர்த்தியமும் தானாகவே வரும்..
16 Nov 2024
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டு வழிகள்... ஒன்று, சூழ்நிலையை மாற்ற வேண்டும்... இல்லையெனில், சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்... சரிதானே ??
15 Nov 2024
வெளிச்சம் உள்ள இடத்தில் அலங்கார விளக்காக இருப்பதைவிட இருள் சூழ்ந்த இடத்தில் மெழுகுவர்த்தியாய் இருப்பதே சிறப்பு.
14 Nov 2024
கடைசி காலத்திற்கு தேவைப்படும் என்று ஓடி ஓடி உழைக்கிறோம், அந்த கடைசி காலம் எப்போது என்று தெரியாமல்... காலம் ஒழித்து வைத்திருக்கிற அந்த ரகசியம் புரியாமல்...
13 Nov 2024
சில சூழ்நிலைகளில், அமைதியாக இருப்பது, பேச தெரியாமல் அல்ல, தவறாக எதையும், பேசி விடக்கூடாது, என்பதற்காகத்தான்!!
12 Nov 2024
வாழ்வை எளிதாக்க பல வழிகள்.. அதில் ஒன்று, நடந்தவை நடந்தவை ஆகவே இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்..
11 Nov 2024
என்னவென்றே தெரியாத கேள்விக்கு, பதில் சொல்ல முயல்வது தான் வாழ்க்கை.. அதனால் தானோ என்னவோ,ஒரே கேள்விக்கு, பல்லாயிரக்கண க்கான பதில்கள், ஒரே நேரத்தில்...
10 Nov 2024
விரல்கள் விரியும்போதுதான், உள்ளங்கையில் இருப்பது வெளியில் தெரியும்.... உதடுகள் விரியும் பொழுது தான், உள்ள கிடக்கையில் இருப்பது என்னவென்பது புரியும்...
9 Nov 2024
எவ்வளவு நெருக்கமான உறவாய் இருந்தாலும், அலட்சியப்படுத்தும் போது, ஒதுங்கிப் போவதில், தவறில்லை… காலை வணக்கம்....
8 Nov 2024
எவ்வளவு நெருக்கமான உறவாய் இருந்தாலும், அலட்சியப்படுத்தும் போது, ஒதுங்கிப் போவதில், தவறில்லை…
7 Nov 2024
சிக்கல் விழுந்த நூல் கண்டில்தான், பறக்க வேண்டிய பட்டத்தின் நீளம் இருக்கிறது... சிக்கலை சரி செய்தால் பட்டம் தானே பறக்கும்...
6 Nov 2024
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனம், இழப்புக்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை... நல்லதோர் மாற்றத்திற்கு தயாராகுங்கள்...
5 Nov 2024
ஒருவரை 'அவர் ஒரு லெஜண்ட்' என்று குறிப்பிட்டால், அவருக்கு வயதாகி, வேலையில்லாமல் அலைகிறார் என்று அர்த்தமாமே!!! அப்படீங்களா???
4 Nov 2024
பிரச்சனைகளுக்கு ஆறுதல் தேடுவதை விட, தீர்வை தேடுவதே புத்திசாலித்தனம்.. ஆறுதல் அப்போதைக்கு நிம்மதி தரலாம்... தீர்வுதான் நிரந்தர நிம்மதியைத் தரும்...
3 Nov 2024
வாழ்வதற்குப் பொருள் தேடினால், பொருள் இருக்கும் வரை வாழலாம்.... வாழ்க்கைக்கு பொருள் தேடினால், இறந்த பிறகும் வாழலாம்...
2 Nov 2024
உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் விஷயம் ஒன்றைக் கண்டுபிடியுங்கள்... அதை யாரிடமும் சொல்லாமல் மனதில் பூட்டி வையுங்கள்... கடைசி வரை உங்களை சந்தோஷமாக வைக்க போவது அந்த இரகசியம் தான்...
1 Nov 2024