குறிஞ்சிட்டு

June 2024

  1. 30 Jun 2024

    நம் வாழ்வில் நீ செய்யக்கூடிய மிகப்பெரும் கொடை, வாழ்வில் நம்பிக்கை இழந்துபோன ஒருவனுக்கு, மீண்டும் அந்நம்பிக்கையை பெற்றுக்கொடுப்பது தானே?? காலை வணக்கம்..

  2. 29 Jun 2024

    இறுதிவரை இப்படியே இருக்க வேண்டும் என்கிற கவலை ஒரு சிலருக்கு... இப்படியே இருந்து விடுமோ என்கிற கவலை பலருக்கு... இக்கரைக்கு அக்கரை பச்சை... காலை வணக்கம்...

  3. 28 Jun 2024

    மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, தடைகளற்ற வாழ்க்கை அல்ல... தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.... காலை வணக்கம்....

  4. 27 Jun 2024

    அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடமிரிந்து பெறவும் கூடாது.. பிறருக்கு கொடுக்கவும் கூடாது.. இரண்டுமே வேதனையைத் தான் தரும்.. காலை வணக்கம் ....

  5. 26 Jun 2024

    இங்கு இருப்பது ஒர் உலகமில்லை.... எவ்வளவு மனிதர்கள் உண்டோ , அவ்வளவு உலகம் உண்டு..... ஒவ்வொருவரும், அவருக்கே உரிய உலகில் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை.... காலை வணக்கம்...

  6. 25 Jun 2024

    வென்றதை விட, தோற்றதைச் சொல்ல அதிக மனத் துணிவு வேண்டும்.... அடித்ததை விட, அடி வாங்கியதைச் சொல்ல மன உறுதி வேண்டும்.... சில தவறுகள் ஈடுகட்டப்படுவதில்லை, அவற்றை அப்படியே கடந்துவர வேண்டி இருக்கிறது.. ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.... காலை வணக்கம் ..

  7. 24 Jun 2024

    வாழ்க்கை அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எந்த தத்துவத்தையும், சாவதுவரையிலும் சுமந்துகொண்டிருப்பது, பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பது , முதுமையில் தான் புரிகிறது.... காலை வணக்கம்...

  8. 23 Jun 2024

    தடைகள் இல்லாத பாதையில் நடக்கிறேன்... என் முன்னே சென்ற யாரோ, எனக்கான தடைகளை உடைத்ததற்காக, அவர்களுக்கு நன்றி சொல்லி..... காலை வணக்கம்...

  9. 22 Jun 2024

    தன் வலியை தானே உணர்ந்தால், உயிரோடு இருக்கிறோம் என்று பொருள்.... பிறர் வலியை தான் உணர்ந்தால், மனிதனாக இருக்கிறோம் என்று பொருள்... நாம் எப்படி இருக்கிறோம்?? காலை வணக்கம்.

  10. 21 Jun 2024

    வாழ்க்கை,விநோதமான ஒரு கேள்வி.... யாருமே பதில் அளிக்க முடியாதது... மரணம் .. யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு விடை.... காலை வணக்கம்...

  11. 20 Jun 2024

    உருவாக்கப்படுவது அல்ல அன்பு.... தன் இயல்பில், சுயம்புவாக, தானே உருவாவது தான் அன்பு.. ஒரு வானவில்லை போல.... காலை வணக்கம்...

  12. 19 Jun 2024

    யாருக்கோ வாழ்ந்து காட்ட இந்த வாழ்க்கை ஒன்றும் பரீட்சையில்லை... நமக்காக வாழ்ந்து விட்டு போவதற்காக ஒரு வாய்ப்பு மட்டுமே ... காலை வணக்கம்...

  13. 18 Jun 2024

    அன்பின் அழகு அதனதன் இடங்களை பறிக்காதிருத்தல் ! அறிவின் அழகு அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல்.... காலை வணக்கம்....

  14. 17 Jun 2024

    அம்மாவின் அன்பு கடல் அலை போன்றது... ஆர்ப்பரித்து கொட்டும்.. மீண்டும் மீண்டும் கால் நனைக்கும்... இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கும்.... அப்பாவின் அன்பு நடுக்கடல் போல்... அமைதியாக ... ஆனால், ஆழமானதாக இருக்கும்... உங்களின் அன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது?? காலை வணக்கம்..

  15. 16 Jun 2024

    வெளியிலிருந்து திறக்கும் கதவு, என்றும், கூண்டுக்கானது..... உள்ளிருந்து திறக்கும் கதவு, பறத்தலுக்கானது.... காலை வணக்கம் ....

  16. 15 Jun 2024

    வாழ்வை மகிழ்வாக்க இரண்டு வழிகள்.. ஒன்று மற்றவரிடத்தில் அன்பாக இருப்பது... மற்றொன்று அன்பானவர்களோடு இருப்பது... காலை வணக்கம்...

  17. 14 Jun 2024

    பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள், எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாக குடியிருப்பார்கள்... காலை வணக்கம்...

  18. 13 Jun 2024

    வேலை மகிழ்ச்சி தரும் போது, வாழ்க்கை சந்தோஷமாகிறது. வேலை கடமையாகும் போது, வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது. காலை வணக்கம்..

  19. 11 Jun 2024

    கிடைக்கும்போது ரசிக்க, ருசிக்க தயங்கினால், வேண்டும் போது, பல விஷயங்கள் கிடைக்காது.... காலை வணக்கம்...

  20. 10 Jun 2024

    தனிமை துரோகமில்லா சிறந்த தோழன்... மௌனம் தண்டனையில்லா சிறந்த பாதுகாப்பு... காலை வணக்கம்...

  21. 9 Jun 2024

    நினைவுகள் அந்தரங்கமானவை... அவற்றை மதிக்கும் சூழலில் மட்டும் வெளியிடுங்கள்... நெருக்கமானவர்கள் ஆனாலும், அதை பகிரவேண்டுமென்பதில்லை.. காலை வணக்கம்...

  22. 8 Jun 2024

    அவர்கள் நம்மை மதிப்பிடுவது இரண்டு வகையில்... ஒன்று, இவர் நம்மைவிட புத்திசாலி போல... மற்றொன்று, இவன் நம்மைவிட கிறுக்கன் போல... இதில் நாம் யார்??? காலை வணக்கம்.

  23. 7 Jun 2024

    சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்.... அதுவே நீங்கள் செய்யும் பெரிய தவறாகி விடும்... காலை வணக்கம் ....

  24. 6 Jun 2024

    சில நேரங்களில், நம் முடிவுகளில் உறுதியாக இருந்தால், சில நண்பர்களை இழக்க வேண்டிவரும்.. உறவுகளையும் கூட... ஆனால், அது நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள உதவும் .... காலை வணக்கம்....

  25. 5 Jun 2024

    ஒரு சாதாரண மனிதனின் சக்தியை ஒருபோதும் 'குறைத்து' மதிப்பிடாதீர்கள்..- Youtuber துருவ் ரதீ! இதுதான் இன்றைய காலை வணக்க செய்தி...The man who turned the table in north india in election.

  26. 4 Jun 2024

    புத்திசாலியிடம் வாதிடலாம்..! முட்டாளிடம் புரிய வைக்கலாம்..!! தான் மட்டும் தான் புத்திசாலி என்று நினைப்பவரிடம் இருந்து?? விலகிதான் இருக்கணும்..!!! காலை வணக்கம்...

  27. 3 Jun 2024

    வெற்றியும், தோல்வியும், உறவும், பகையும், அறிவு சார்ந்ததல்ல. உணர்வு சார்ந்ததும் அல்ல . நம் செயல் சார்ந்தது... நற்குடி ,பிறப்பு சார்ந்தது.... காலை வணக்கம்...

  28. 2 Jun 2024

    தானாக சாத்தும் கதவை தட்டலாம்.. மீண்டும் தட்டலாம்.. தவறில்லை... ஆனால் தெரிந்தே சாத்தப்படும் கதவுகளை தட்டாதீர்கள் .. அது அவமானம்... காலை வணக்கம்....

  29. 1 Jun 2024

    மனதின் துயரமான நிலை என்னவென்றால் அது சில விஷயங்களுக்கு ஆசைப்படுகிறது. பல விஷயங்களுக்குப் பயப்படுகிறது காலை வணக்கம்....