May 2024
31 May 2024
அன்பின் எதிர்பார்ப்புகள் பணமோ பொருளோ இல்லை.... பாசத்துடன் ஒரு பார்வை.... அக்கறையுடன் ஒரு வார்த்தை.. அவ்வளவே!!! காலை வணக்கம்...
30 May 2024
உங்க கவலைகளை நெனச்சு, உங்கள நீங்களே பூட்டி வைத்து கொள்ளாதீங்க.... உங்க சந்தோஷத்துக்கான சாவி உங்க கிட்ட தான் இருக்கு... காலை வணக்கம்..
29 May 2024
ஆற்று நீரை போன்றது தான் வாழ்க்கை... ஆர்ப்பாட்டத்தை தடுக்க சில வளைவுகளும், நெளிவுகளும், மலைகளும் தேவை.. இதை மீறி ஆர்ப்பரித்து அருவியாய் கொட்டும் அழகு பிரம்மாண்டம்.. காலை வணக்கம்..
28 May 2024
கற்பனை நிறைந்த உலகத்தில், மகிழ்ச்சியை கொஞ்சம் கூட்ட வேண்டுமானால், குழந்தையாக மாறுவோம்... குறும்புகள் செய்வோம்.... குதூகளிப்போம்... வாழ்வின் இனிமையை கூட்டுவோம்.... காலை வணக்கம்...
27 May 2024
அறிவியல் அனைத்துக்கும் காரணம் தேடும்..அறியாமை அனைத்துக்கும் கதை கட்டும்.. காலை வணக்கம்...
26 May 2024
நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும், வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும், உறுத்திக்கொண்டே தான் இருக்கும்... நாம் அவற்றை உதறித்தள்ளும் வரை... காலை வணக்கம்...
25 May 2024
காலமும், கண்ணீரும், கொஞ்சம் கவிதையும், சொல்லிக் கொடுக்காத பாடத்தயா ,காற்றும் கடலும் சொல்லிக் கொடுக்கப் போகிறது?? காலை வணக்கம்....
24 May 2024
தண்ணீர் அமைதியாய் இருக்கும் போது அழுக்குகள் அடியில் தானாகவே தங்கிவிடும்... வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது அமைதியாய் இருந்தால் போதுமானது.. பிரச்சனைகள் தானாகவே அடியில் தங்கிவிடும்... காலை வணக்கம்...
23 May 2024
பிடிவாதங்களை விட்டுப் பாருங்கள்.. பிடித்தவர்கள் உங்களுடனே இருப்பார்கள்... காலை வணக்கம்...
22 May 2024
குடைக்கு தெளிவாகத் தெரியும்.. தேவை என்றால் மட்டுமே இந்த சமூகம் நம்மை தூக்கி பிடிக்கும் என்றும், தேவையில்லை என்றால் மடக்கி வைத்து விடும் என்றும்.... காலை வணக்கம்....
21 May 2024
என்னை கடந்து சென்ற இறந்த காலத்தை பற்றி ஒரு கவலையும் இல்லை....... என் கூட வர போகும் எதிர் காலத்தை பற்றியும் ஒரு கவலையும். இல்லை..... என்னுடன் இருக்கும் என் நிகழ் காலத்தோடு மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் .... நீங்க?? காலை வணக்கம்...
20 May 2024
பக்குவம் என்பது யாதெனில்... நாம் வெளியில் கிளம்பும் பொழுது பூனை குறுக்கே வந்தால், நம்மைப் போலவே பூனைக்கும் ஏதோ வேலை இருக்கிறது என்று நினைத்து நம் பயணத்தை தொடர்வது.... காலை வணக்கம்....
19 May 2024
இந்த உலகத்தில் ஒருவனுக்கு எது இருக்கிறதோ இல்லையோ, முக்கியமாக அவன் புலம்பல்களை கேட்க பக்கத்தில் ஒரு ஆள் இருக்க வேண்டும்... அப்படி ஒரு ஆள் இருந்தால் நீங்கள் பாக்கியசாலி... காலை வணக்கம்...
18 May 2024
நிம்மதி வேண்டுமா?பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாதீர்கள். விரும்பாத விஷயங்களில் தலையிடாதீர்கள்.. தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாதீர்கள்.. நிம்மதியாய் இருக்கலாம்.. காலை வணக்கம்.
17 May 2024
தோல்வியின் அடையாளம் தயக்கம்.. வெற்றியின் அடையாளம் துணிச்சல்.. துணிந்தவர் தோற்றதில்லை.. தயங்கியவர் வென்றதில்லை.. காலை வணக்கம்...
16 May 2024
விட்டுவிடு என்பவர்களை போக விடுங்கள்.... அவர்களுக்கான விரல்கள் எங்கேயோ இருப்பது போல், நம் விரல்களுக்காகவும் யாரோ ஒருவர் இருப்பார் தானே!!!! காலை வணக்கம்....
15 May 2024
நம்பிக்கை தரும் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால், பயம் தரும் கற்பனைகள் தானாகவே விலகி விடும்... காலை வணக்கம்.....
14 May 2024
தேவையானது தேவையற்றது என்று எதுவும் இல்லை... காலம் அறிந்து தேடுதல் தேவையானது... காலம் தவறிய தேடுதல் தேவையற்றது...! காலை வணக்கம் ....