அன்னம்

28 November 2025

Next →

மரணத்தை நேசிப்போம்.

மரணம் உன்னதமானது.

அதை உணரும் போதுஉயிர் உடலில் இருக்காது.

ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்.

இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்.

உலகின் வேறு எதுவும் மனிதனை இத்தனை அசைத்துப் பார்ப்பதில்லை.

 

நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மை தோளில் சுமந்த தந்தை,

நாம் தூக்கி வளர்த்த பிள்ளை,

நாம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை,

நம்முடன் சுற்றித்திரிந்த நண்பன்,

இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்.

 

ஒருநாள் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணமே

நம்மை ஆட்டிப்பார்க்கிறது.

 மனதுக்கு நெருங்கியவரை

குழிக்குள் இறக்கி

மண்ணிட்டு மூடும் போது

வரும் வெறுமை.

 

நாம் தலையில் சேர்த்து வைத்திருக்கும்  புகழ்,

அகந்தை, கர்வத்தையும்

சேர்த்து மண்ணோடு மூடிவிடும்.

 

ஒரு மரணத்தை காணும் போது  மனம் இறங்க வேண்டும்.

 "மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம் தான்

ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

 

பணம் மீது தீராத வெறி,

பதவி மீது தீராத வேட்கை,

இவையெல்லாம்

மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.

 

மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.

காரணம் மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது,

நம் மனமும் ஒரு முறை அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.

 

மரணத்தை நேசிப்போம்.

நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்ட பரிசாக மரணம் இருக்கிறது.

 

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்

நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்

எண்கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே.

 

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.

ஆனால் .....

நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள்.

இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே....

இந்த பாடல் நினைவில் வந்தால் மகிழ்ச்சியே..