குறிஞ்சிட்டு

June 2026

  1. 30 Jun 2026

    தொலைந்து போன நிமிடங்களைத் தேடிக் கொண்டிருப்பதை விடவும் , தொலைந்து போன நினைவுகளை தேடிப்பிடித்து மகிழ்வது சுகம்…

  2. 29 Jun 2026

    நம்மைப் பற்றி தவறாகப் புரிந்து கொள்பவர்களைப் பற்றி தவறாக நினைக்க வேண்டாம்.... தங்களை போலவே தான் விண்மீன்களும் என்று , மின்மினிப் பூச்சிகள் நினைத்தால் நாம் என்ன செய்வது...

  3. 28 Jun 2026

    சந்தேகத்துக்கு பிறகு வரும் நம்பிக்கை ஆழமானது... நம்பிக்கைக்கு பிறகு வரும் சந்தேகம் ஆபத்தானது...

  4. 27 Jun 2026

    பிரமிப்பூட்டுவபை கோபுரங்கள் மட்டுமல்ல .. மனிதர்களின் நல்ல பண்புகள் கூட..

  5. 26 Jun 2026

    பலரின் புன்னகைக்கு நாம் காரணமாக இல்லாவிட்டாலும், சிலரது கண்ணீருக்கு நாம் காரணமாக இல்லாமலிருப்பதே சிறந்தது..

  6. 25 Jun 2026

    கிடைக்காத ஒன்று தான் சிறந்தது என்று ஏங்கிக் கொண்டிருந்தால் , கிடைத்தது எதுவும் சிறப்பாக தெரியாது ..

  7. 24 Jun 2026

    கழுகு சில நாட்கள் பறக்கவில்லை என்பதற்க்காக , வானம் ஒரு நாளும் காக்கைகளுக்கு சொந்தமாகி விடாது…

  8. 23 Jun 2026

    தட்டிக் கொடுக்க ஆயிரம் வழிகள்.. தட்டிக் கழிக்க ஆயிரம் காரணங்கள் …

  9. 22 Jun 2026

    ஒரு முட்டாளை பாராட்டுபவன், இன்னொரு முட்டாளாகத்தான் , இருக்க முடியும்.

  10. 21 Jun 2026

    என்ன நடந்தது என்பதை விட, அதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளுகிறோம் என்பதே , வாழ்க்கை….

  11. 20 Jun 2026

    அடுத்தவரை காயப்படுத்தும் நம்முடைய வார்த்தைகள் , ஒரு நாள் மன்னிக்கப்படுமே தவிர மறக்கப்படுவதில்லை!...

  12. 19 Jun 2026

    எத்தனை சிறகுகள் இருந்தால் என்ன? கூண்டு பறவையின் உலகம் சிறை தான் ..

  13. 18 Jun 2026

    இரண்டு வகை மனிதர்கள் தான் இவ்வுலகில். … ஒன்று அயோக்கியர்கள், மற்றொன்று , யோக்கியன் போல் வாழ்பவர்கள்….

  14. 17 Jun 2026

    முட்டாள் கோபப்படுவான்…. புத்திசாலி நன்றி சொல்லுவான்.. எப்பொழுது தெரியுமா ? நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று மற்றவர்கள் சொல்லும் போது.. நினைவில் கொள்வது நலம்...

  15. 16 Jun 2026

    முடியாது என்பதை பிறகு யோசிப்போம் ... எப்படி முடிப்பது என்பதை முதலில் யாசிப்போம்..

  16. 15 Jun 2026

    முன்பெல்லாம் மனிதர்கள் இயல்பாய் இருந்தார்கள்.. நடிப்பது சிரமமாக இருந்தது.... இப்பொது எல்லோரும் நடிக்கிறார்கள் .. இயல்பாய் இருப்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு...

  17. 14 Jun 2026

    பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்காதீர்கள்... விழும் போதெல்லாம் தாங்கிப் பிடித்துக் கொள்ள , ஒரே ஒரு அன்பை மட்டும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.... அது போதும் வாழ்வின் முழுமைக்கும் ....

  18. 13 Jun 2026

    நாம் எதயோ நோக்கி நகர்கிறோம்… வாழ்க்கை நம்மை வேறு எதயோ நோக்கி நகர்த்துகிறது..

  19. 12 Jun 2026

    எல்லோருடைய வலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை.. அவர்களுக்கும் வலிக்கும் என்பதை புரிந்து கொண்டால் போதும்.. அதுவே நல்லது...

  20. 11 Jun 2026

    காணாமல் போனவர்களை தேடலாம்.. தவறில்லை... ஆனால், நம்மை கண்டும் காணாமல் போகிறவர்களை, தேடி ஓடுவது, தேவையில்லை....

  21. 10 Jun 2026

    தோற்றவர்களை பார்த்து, சிரிக்க, பார்வையாளர்க்கு எந்த தகுதியும் இல்லை…

  22. 9 Jun 2026

    ஏமாற்றுவதற்கு அறிவு வேண்டும் .. ஏமாறுவதற்கு ? அன்பே போதும் !

  23. 8 Jun 2026

    அறிவும் அனுபவமும், இணைய முடியாத நேர் கோடுகள்.... இணைப்பு பாலம் கேள்விகள், அதனால் பெரும் ஞானம் .. எதையும் கேள்வி கேளுங்கள் ..

  24. 7 Jun 2026

    வார்த்தைகள் பூக்களைப் போல .. உணர்ந்தால் மணம்பரவும்… அலட்சியம்செய்தால் வாடும்..

  25. 6 Jun 2026

    உதடுகள் சிரிப்பது ஊருக்கு தெரியும்… உள்ளம் பேசுவது யாருக்கு தெரியும்?

  26. 5 Jun 2026

    நதிகள் திசை மாற மனித சம்மதம் தேவை இல்லை. மனிதன் மனம் மாற ?? யோசியுங்கள் ..

  27. 4 Jun 2026

    தனி ஒரு மனிதனுக்கு உதவுவதால், இந்த உலகம் தலைகீழாக மாறுவதில்லை... மாறாக, அந்த தனி மனிதனின் உலகம், தலைகீழாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.. சரிதானே??

  28. 3 Jun 2026

    காலம் .. காத்திருக்கும் போது மெதுவாகவும் , சோகத்தில் நீண்டதாகவும் , மகிழ்வில் குறுகியும் , அதுதான் காலம்..

  29. 2 Jun 2026

    எது கிடைத்தாலும் பரிசென ஏற்கும் பழக்கம், நிமிர்ந்து நிற்பதற்குப் பதில், வாழ்நாள் முழுவதும் குனிந்தே இருக்கக் கற்றுக் கொடுக்கிறது…

  30. 1 Jun 2026

    முறிந்த கிளைகளை கண்டும், உதிர்ந்த இலைகளை கண்டும், கவலைப்படுவதில்லை மரங்கள்... ஏதோ ஒரு கிளையில் கூடுகட்டி, தன் குஞ்சுகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவையின் மீதுதான், அதன் கவனம், கரிசனம் எல்லாம்.. உங்களுக்கும் அப்படித்தானே??