November 2025
30 Nov 2025
யாத்திரிகன் வீடு அடைவது, இரை தேடி சென்ற பறவை, கூடு அடைவது போல....
29 Nov 2025
சிலவற்றை விட்டு விடுவதை விட, பிடிவாதமாய் பிடித்துக் கொள்வது, அதிக சேதத்தை ஏற்படுத்தும், மனதிற்கு....
28 Nov 2025
கையளவு களிமண்ணில், நட்டு வைத்தது தெரியாமல், கெட்டியாக வேர்விடும் ஒரு தொட்டிச்செடியின் மனசு போதும், வாழ்வு செழிக்க...
27 Nov 2025
நான் பயணிப்பது புதிதாக எதையும் காண அல்ல.. தினம் தினம் பார்க்கும், ஆனால் பார்க்க நினைக்காத சில முகங்களை, பார்க்க விரும்பாமல்... காலை வணக்கம்...
26 Nov 2025
நான் பயணிப்பது புதிதாக எதையும் காண அல்ல.. தினம் தினம் பார்க்கும், ஆனால் பார்க்க நினைக்காத சில முகங்களை, பார்க்க விரும்பாமல்...
25 Nov 2025
உப்பாவோம் என்று தெரிந்த பின்னும் ஓடி சலிக்கிறது நதி.. சருகாவோம் என்று தெரிந்த பின்னும் பூக்க மறுப்பதில்லை மரங்கள்.. யாருக்காக கூவுகிறது இந்த குயில்கள்? கேள்விகளுக்கு நடுவில் ஓடுகிறது வாழ்க்கை..
24 Nov 2025
தூரங்களை நிர்ணயிப்பது, சாலைகள் மட்டுமல்ல.... வார்த்தைகளும் தான்......
23 Nov 2025
விதைத்தது தான் முளைக்குமே தவிர, விரும்பியதெல்லாம் முளைக்காது..
22 Nov 2025
உடைபட்ட நினைவுகளை ஓவியமாக்குவதில், இயற்கையின் பங்கு, அதன் கண்கள் வழி..... அதுதான் கண்ணீரின் மொழி.....
21 Nov 2025
காத்திருப்பவனுக்கு மட்டுமே தெரியும், காத்திருத்தலின் சுகம்... காணக் கிடைக்கும் காட்சியின் அற்புதம்..... காத்திருங்கள் எதற்காக வேனும்....
20 Nov 2025
உங்கள் மௌனம் பேசும் மொழி, சோகங்களை கடந்து செல்லும் புன்முறுவல், அதீத அன்பின் வெளிப்பாடாய் கோபம், புரிந்தவர்கள் உற்ற துணையாதல் பெருமகழ்ச்சி...
19 Nov 2025
செடியில் ஈரம் இருக்கும் வரை, இலைகள் உதிர்வதில்லை...... நெஞ்சில் ஈரம் இருக்கும் வரை, மனிதம் உதிர்வதில்லை......
18 Nov 2025
ஆவேசமாக பதிலளிப்பது பலம் அல்ல ,பலவீனம்... சில நிலைமைகளில், மௌனமே சிறந்த பதிலாகும்...
17 Nov 2025
என்றாவது ஒருநாள் பெய்யும் மழையை கொண்டாடும் மனது தான், ஓயாமல் பெய்யும் போது சலித்துக் கொள்கிறது..... பேரன்பும் அப்படித்தானா??
16 Nov 2025
தெளிவாக முடிவு எடுக்கத் தெரிந்தவர்கள், எதற்கும் தயாராகிக் கொள்கிறார்கள்..... அது, வானம் பறப்பதாகினும் சரி, அல்லது , அதல பாதாளத்தில் விழுவதாகினும் சரி...
15 Nov 2025
அன்பு, பாசம் , நேசம் , காதல் , எல்லாமே ஒரு உண்மையான இதயத்தின் பேசு மொழி ... அதை, களங்கமற்ற இதயம் மட்டுமே புரிந்து கொள்ளும்.. உணர்ந்துகொள்ளும் ...
14 Nov 2025
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன... ஆனால், உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை...
13 Nov 2025
முக்கியமானவர்கள் என்பதெல்லாம் காலத்தின் தீர்மானங்கள்.. இன்று யாரோவாகி போனவர்கள் எல்லாம், ஒரு காலத்தில், முக்கியமானவர்களே...
12 Nov 2025
கல் மனம் படைத்தவர்கள் என்று, யாருமில்லை ... இங்கு அனைவரும் , ஏதோ ஒரு நபரால், மனம் கல்லாக்கப்பட்டவர்களே .....
11 Nov 2025
ஏதோ ஒன்றை அடைவதில் மட்டும்தான் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள்... சிலவற்றை இழந்தால் கூட, நிம்மதி கிடைக்கும்..
10 Nov 2025
சாணிய மிதிச்சா கால கழுவிட்டு போயிட்டே இருக்கனும்.... எருமைக்கு அட்வைஸ் பண்ண கூடாது... அது எருமை. நாம் மனிதர்கள்...
9 Nov 2025
தொலைந்து போன சில்லறை நாணயங்களை போல், சில சில்லறை மனிதர்களையும், பொறுக்கி எடுத்து, பத்திரப்படுத்துவது முட்டாள் தனம்.. அப்படி பத்திரப்படுத்தும் அளவிற்கு, அவர்கள் , சிறந்தவர்கள் அல்லர்... சில்லறைகள் சில்லறைகளே ..
8 Nov 2025
பற்றியதை விடாமல், உயர பறக்க முடியாது.....
7 Nov 2025
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் இருப்பதைவிட, ஒன்றும் அறியாத சப்பானியாக இருப்பது மேல்..... இப்பொழுது......
6 Nov 2025
உண்மை கனமானது, சுமையானது, எளிதில் பரவாது... பொய் மெலிதானது, சுவையானது, வேகமாய் பரவும்.... புரிதல் நன்று...
5 Nov 2025
உயரத்தில் ஏறி நின்றால் உலகமே கண்களுக்கு தெரியும்.... உயர வளர்ந்தால் மட்டுமே உலகத்திற்கு நம்மை தெரியும்...
4 Nov 2025
காற்றினால் இலைகள் உதிர்வதில்லை... உதிர விரும்பும் இலைகள், காற்றுக்காக காத்திருக்கின்றன....
3 Nov 2025
வாழ்க்கையில் தோற்றவர்கள், இரண்டு வகை.... ஒருவர் , யார் பேச்சையும் கேட்காதவர் ... மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்...
2 Nov 2025
சில சுகங்களுக்கு பழகிய பின், அதனின்று விலகி இருத்தல், அவ்வளவு சுலபமானது அல்ல...
1 Nov 2025
எந்த நல்ல செயலையும் தள்ளி போடாதீர்கள்..... குப்பைதொட்டியில் குப்பை போடும் போது கூட....