குறிஞ்சிட்டு

August 2025

  1. 31 Aug 2025

    சரியான புரிதல், தவறான புரிதல் என்றெல்லாம் எதுவுமில்லை..... வேண்டும் என்றால் சரியாக புரியும், வேண்டாம் என்றால் தவறாக புரியும்..... அவ்வளவு தான்!!!

  2. 30 Aug 2025

    தாழ்மைக்கு தாளாத தலை என்ன தலை??? இங்கு எவன் தலைவன்??

  3. 29 Aug 2025

    எந்த கையை குலுக்கி நகர வேண்டும் என்பதும், எந்த கையுடன் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், கற்றுக் கொண்டாலே போதும்..... வாழ்வது எளிதாகி விடும்...

  4. 28 Aug 2025

    வழக்கமான டீக்கடையில், நான்கு டீ என்றார்கள் மூன்று முதியவர்கள்... இறந்த தோழனை மறந்து...

  5. 27 Aug 2025

    இங்கு, சிலவற்றை, தேவைகள் தீர்மானிக்கின்றன..... பலவற்றை, தேவையில்லாதவர்கள் தீர்மானிக்கிறார்கள்....

  6. 26 Aug 2025

    காது குத்திய அடையாளமும், மூக்கு குத்திய அடையாளமும், தெரிந்து விடுகிறது.. முதுகில் குத்திய அடையாளம் தான், தெரிவதே இல்லை...

  7. 25 Aug 2025

    செய்த பல உதவிகளை விட, செய்யாத ஒரு உதவியைக் கொண்டு தான், மனிதர்களின் மதிப்பு எடை போடப் படுகிறது.....

  8. 24 Aug 2025

    சில உறவுகள் யோசித்துப் பேச வைக்கும்... சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும்.... சில உறவுகள் பேசவே யோசிக்க வைக்கும்...!!

  9. 23 Aug 2025

    நான் முட்டாளாக நடிக்கும்வரைதான், நீ அறிவாளி... நான் சற்று நடிப்பதை நிறுத்திவிட்டால், நீ நடைபிணம்...

  10. 22 Aug 2025

    கேட்கப்படும் எல்லா கேள்விக்கும், அது அப்படித்தான், என, பதிலளிக்கிறது வாழ்க்கை.....

  11. 21 Aug 2025

    ஓடுகிறவனுக்குத்தான், பாதை பற்றி கவலை.... துரத்துபவனுக்கு அல்ல....

  12. 20 Aug 2025

    வேடமிட வேண்டிய அவசியம் இருப்பதில்லை... உங்களை உள்ளபடியே நேசிப்பவரிடத்தில்..

  13. 19 Aug 2025

    புரியாதவர்களுக்குத்தான், ஆயிரம் சொல்லி, புரிய வைக்க வேண்டும்... புரிந்தவர்களுக்கு, ஒரு புன்னகையே போதும்... அது புரிய வைக்கும், ஆயிரம் விஷயங்களை...

  14. 18 Aug 2025

    என்ன பெரிதாக செய்துவிடப்போகிறது ,இந்த வாழ்வு ?? எதையாவது, வலுக்கட்டாயமாக கொடுக்கும்.... எதையாவது, அனுமதியின்றி எடுத்துச் செல்லும் . அவ்வளவு தான்....

  15. 17 Aug 2025

    மனதின் குறை சொற்கள் எனில், மனதின் மௌனம்?? பெயரிடப்படாத ஓவியம் என்றான் பித்தன்..

  16. 16 Aug 2025

    நல்லதொரு அவமானத்திற்கு பிறகு தான், என் சொல்பேச்சு கேட்கிறது , இந்த மனது...

  17. 15 Aug 2025

    ஒவ்வொரு நாளும், மனிதனை, பட்டியில் அடைக்க இயலாமல், தடுமாறுகின்றன, மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்லும் நினைவுகள்.......

  18. 14 Aug 2025

    “அந்நிய விலங்கை அவிழ்த்துவிட்டு சொந்த விலங்கை பூட்டிக் கொண்ட நாள்” சி. ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி).... இந்திய விடுதலை நாள் வாழ்த்துக்கள்..

  19. 13 Aug 2025

    எல்லாவற்றையும் உணர்ந்து என்ன பயன்? உடைந்தவை ஒட்டவா போகின்றன?

  20. 12 Aug 2025

    ஆறுதல் எல்லாம், நம் வலியை சுமந்தாலும், எந்த வலியும், நம் ஆயுளை சுமக்காது... வலியை தவிர்ப்போம்....

  21. 11 Aug 2025

    துரோகம் செய்தவர்களும், தவறு செய்தவர்களும், சாதனை படைத்தவர்கள் போல பவனி வருகிறார்கள்... பாதிக்கப்பட்ட நாம் தான், காலம் பதில் சொல்லும், கர்மா பாடம் புகட்டும் என காத்திருக்கின்றோம் ...

  22. 10 Aug 2025

    உங்கள் குறைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவைகளை உங்களுக்கு எதிராக யாரும் பயன்படுத்த முடியாது.

  23. 9 Aug 2025

    காரணம் இன்றி, யாரையும், யாரோடும், சேர்ப்பதில்லை காலம்... காலம் கடந்த பின் பிரிப்பதில், காரணமும் பார்ப்பதில்லை காலம்..

  24. 8 Aug 2025

    வாழும் போதும் சரி, வீழும் போதும் சரி, நிமிர்ந்து நில்லுங்கள்…... குனிந்து கொடுக்கத் தொடங்கி விட்டால், நிமிர விடாது இந்த சமூகம்…..

  25. 7 Aug 2025

    கிடைத்ததை எல்லாம் "வரம்" என கொண்டாடாதீர்கள்...... காலம் அதனை "சாபமாய்" மாற்றி, உங்களை சாய்க்க காத்திருக்கும்....

  26. 6 Aug 2025

    வெறுக்கும் கண்கள், வேடிக்கை பார்க்கட்டும்..... தனித்து நின்றாலும், தனித்துவமாய் நிற்பது சாலச் சிறந்தது.....

  27. 5 Aug 2025

    பொய்களுக்கு தான் சொற்கள் தேவை... உண்மைகளுக்கு மௌனம் போதும்..

  28. 4 Aug 2025

    அறிவு என்பது ஆனந்தம் தான்.... ஆனால், பகுத்தறிவே பேரானந்தம்....

  29. 3 Aug 2025

    இப்போதெல்லாம் எவ்விதமான புதிய பாரத்தையும் , ஏற்றுக் கொள்வதில்லை.... பழைய பாரத்தை இறக்கி, எடை குறைத்து, பூஜ்ஜிய அளவில், விடுதலையாவதில் தான் கவனம்......

  30. 2 Aug 2025

    பிரச்சினைக்கான தீர்வை சொல்வது எழுத்தாளனின் பணியல்ல..... பிரச்சினை என்னவென்று சரியாக சொல்வதுதான் எழுத்தாளனின் பணி. ~ செகாவ் ~

  31. 1 Aug 2025

    சொத்து சேர்த்து வைக்காத தகப்பனின், கருப்பு வெள்ளை புகைப்படத்தை, பழைய வாடகை வீட்டிலேயே, மறதியாக, வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள் சந்ததியினர்...