July 2025
31 Jul 2025
அன்போடு கொடுக்கப்படும் நஞ்சுகளுக்கு, விஷ முறிவு இல்லை ....
30 Jul 2025
புரிஞ்சவங்களுக்கு, சொல்லவேண்டிய அவசியம் இல்ல..... புரியாதவங்களுக்கு , சொல்லியும் ப்ரயோஜனமில்ல.... அனுபவமே சிறந்த ஆசான்..
29 Jul 2025
தாக்குப்பிடிப்பது, தப்பி பிழைக்கும்... எந்த சூழ்நிலையிலும்...
28 Jul 2025
மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை... மாறாக, பிறருக்குக் கொடுப்பதில்தான் இருக்கிறது.....
27 Jul 2025
வாழ்க்கையின் சிறப்பான அனுபவ பாடத்தை கற்றுக் கொள்வதற்கு, எதிரிகளை விட, துரோகிகளையே நாடுங்கள் ... அவர்களை விட சிறப்பாக யாரும் அதை கற்றுத் தர முடியாது ...
26 Jul 2025
இதுவும் , அதுவும், எதுவும், கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது.... நாம் தான் எதையும் மறக்காமல், சுமந்து கொண்டே திரிகிறோம்....
25 Jul 2025
செத்த பிறகு, சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று , எண்ணி இருப்பர் பித்த மனிதர் ... அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதடா சங்கே ..... பாரதி....
24 Jul 2025
நீங்கள் சரியாக இருந்தால், கோபப்படுவதற்கு அவசியமில்லை.. நீங்கள் தவறாக இருந்தால், கோபப்படுவதற்கு அர்த்தமில்லை..
23 Jul 2025
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, நாம் மூன்றாவது மனிதர்கள்தான், யாருக்கும்.....
22 Jul 2025
எல்லாவற்றிலும் இயந்திரத்தனமாய் இருக்க பழகிக் கொண்ட மனிதன், அன்பையும், இயந்திரத்தனமாய் தான் பெறுகிறானா,? தருகிறானா,,?
21 Jul 2025
எங்கே உதடுகள் மௌனிக்கின்றனவோ, அங்கே , இதயம் ஆயிரம் நாவுகளுடன் பேச ஆரம்பிக்கும்....
20 Jul 2025
துடைக்க யாருமில்லா தருணங்களில் வரும் கண்ணீர் கூட, சுமைதான்…
19 Jul 2025
வாழ்க்கையைப் பற்றியே மனிதன் இன்றுவரை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை... பிறகு எப்படி இவர்கள் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள்? -கன்பூசியஸ்
18 Jul 2025
வெகு சிலருடைய சேமிப்பில், என் முகமும், இருக்கக்கூடும்..... அதன் பொருட்டே, எப்பொழுதும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்..... அல்லது அப்படி இருப்பது போல் காட்டிக் கொள்கிறேன்....
17 Jul 2025
எல்லா மௌனங்களும் திமிர் அல்ல ... சில மௌனங்கள் சொல்ல முடியாத காயங்கள்...
16 Jul 2025
மனிதனுக்கு, பலவீனம் என்ற நோய் வந்தால்தான், பக்தி என்ற மருந்து தேவைப்படும். ~ ஜெயகாந்தன் ~
15 Jul 2025
யாருக்காகவும், யாரும் இல்லை, என்னும் யதார்த்தம் புரிந்தால், தேவையற்ற எதிர்பார்ப்பு, குழப்பம், கவலை எல்லாம் தவிர்க்கப்படும்...
14 Jul 2025
கிடைத்ததை எல்லாம் "வரம்" என கொண்டாடாதீர்கள் ... காலம், அதனை "சாபமாய்" மாற்றி உங்களின் காலடியில் சமர்ப்பிக்க காத்திருக்கும்....
13 Jul 2025
அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, எதிர்பார்ப்புகள் பொய்த்து போகும் தருணங்களை.....
12 Jul 2025
காலம் எல்லாவற்றையும் உள்வாங்கும்... தவறாமல் சரியான பதிலும் சொல்லும் ஒரு காலத்தில்....
11 Jul 2025
எதையும் ஏற்காமல், நான் சொல்வதே சரி என்று நம்புகிற மனிதனிடம், எதைச் சொல்வதும் கால விரையமே..
10 Jul 2025
எல்லோருடைய மனதிலும், யாரோ ஒருவருடைய நினைவுகள், நிரந்தரமாக இருந்து கொண்டேதான் இருக்கும்....
9 Jul 2025
முடியும் என்பதற்கு செயல்களும்... முடியாது என்பதற்கு விளக்கங்களும்... தேவைப்படுகின்றன.....
8 Jul 2025
அவமானப்படுத்தியதை மறந்த போதிலும், அதைக் கண்டு ஏளனம் செய்தவர்களைத்தான், மறக்க முடிவதில்லை எந்நாளும்......
7 Jul 2025
இளமை... தவறான பலவற்றை நம்பும், தன்னம்பிக்கை இருப்பதால்.... முதுமை... சரியான பலவற்றை சந்தேகிக்கும், தன்னம்பிக்கை இழப்பதால்...
6 Jul 2025
பெரிதினும் பெரிது கேட்பது அல்ல அறிவு... சிறிதினும் சிறிதிணை உணர்தலே அறிவு...
5 Jul 2025
புலிகள் வாய் திறந்து பேசாத வரை, வேடன்களை மட்டுமே கொண்டாடும், இவ்வுலகு..... காலை வணக்கம் ....
4 Jul 2025
புலிகள் வாய் திறந்து பேசாத வரை, வேடன்களை மட்டுமே கொண்டாடும், இவ்வுலகு.....
3 Jul 2025
குறுக்கு வழியில் கிடைக்கும், குபேர வாழ்வை விட, நேர் வழியில் கிடைக்கும் குசேல வாழ்வு சிறந்தது...
1 Jul 2025
ரிதன்யா மரித்த நாளில்.. ஊர் முழுக்க மணம் வீசி, நெடிதுயர்ந்த செண்பக மரம் , ஒரு மழை நாளில், மண் பிளக்க, வேர் அறுந்து, சாய்ந்தது... அடிமரத்து கரையான் என்றது ஊர் பெருசு.... காலை வணக்கம் .