குறிஞ்சிட்டு

June 2025

  1. 30 Jun 2025

    ரிதன்யா மரித்த நாளில்.. ஊர் முழுக்க மணம் வீசி, நெடிதுயர்ந்த செண்பக மரம் , ஒரு மழை நாளில், மண் பிளக்க, வேர் அறுந்து, சாய்ந்தது... அடிமரத்து கரையான் என்றது ஊர் பெருசு....

  2. 29 Jun 2025

    தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டவன், இன்று கோமாளியாய்..... உன்னையும் என்னையும் பார்த்து ரசித்தபடி, வித்தைகள் செய்கிறான்... மனநோயாளி என்கின்றனர், சிலர்... கோபம் தவிர்....

  3. 28 Jun 2025

    வலிமை உடலில் இருந்து வருவது அல்ல ... அசைக்க முடியாத மன உறுதியிலிருந்து வருவது... மனத்தூய்மை அதிகம் இருந்தால், வலியும் அதிகமாகவே இருக்கும், ஆனால் வெற்றி வேகமாய் கை கூடும்...

  4. 27 Jun 2025

    சில சமயம், ஞாபக சக்தியே நமக்கு மோசமான எதிரி..... மறக்க வேண்டிய பலவற்றை, மீண்டும், மீண்டும், ஞாபகப்படுத்துவதால்...

  5. 25 Jun 2025

    இழப்பின் வலி பழகாதவரை, இந்த வாழ்க்கை, பயமுறுத்திக்கொண்டு தான் இருக்கும்.... காலை வணக்கம்.....

  6. 24 Jun 2025

    இழப்பின் வலி பழகாதவரை, இந்த வாழ்க்கை, பயமுறுத்திக்கொண்டு தான் இருக்கும்....

  7. 23 Jun 2025

    வெற்று மனதை, மகிழ்ச்சிகளால் நிரப்பிக் கொண்டால், கவலைகள் தானாகவே வெளியேறும்..

  8. 22 Jun 2025

    சிறு துணிவு போதும், செய்து காட்ட.. பெரும் பணிவு வேண்டும், சாதித்துக் காட்ட...

  9. 21 Jun 2025

    ரோஜாவை ரசிக்கும் அதே வேளையில், ரோஜாவின் முள்ளையும் ரசித்தால், வலிகள் பழகிப்போகும்..

  10. 20 Jun 2025

    முக்கியத்துவம் இல்லாத இடத்தில், மீண்டும் மீண்டும் தலை காட்டுவது, அடி முட்டாள் தனம்.. மதியாதார் தலைவாசல் மிதியாதே....

  11. 19 Jun 2025

    சிந்திய கண்ணீரை துடைப்பதும் நட்பு... மறு துளி வராமல் தடுப்பதும்நட்பு...

  12. 18 Jun 2025

    இறந்த காலம் நினைவுகளில்... நிகழ்காலம் செயல்களில்... எதிர்காலம் கனவுகளில், வாழ்கிறது...

  13. 17 Jun 2025

    வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தால், முட்டாளைக் கூட, ஞானி, என்று கருதும் உலகம் இது....

  14. 16 Jun 2025

    ஏதோ ஒன்றை, ஏதோ ஓர் மூலையில், ஏதோ ஒருவகையில், நிரப்பிக்கொள்கிறது பழுதடைந்த இதயம்...

  15. 15 Jun 2025

    நேர்மையின் கனத்தை தூக்கி சுமக்க முடியாததால் தான், பலர் நேர்மையற்றவர்களாகவே வாழ்ந்து மடிகிறார்கள்..

  16. 14 Jun 2025

    குயிலின் கூவலில், மகிழ்ந்து திளைக்க, கூண்டுகள் தேவையில்லை.... ஒரு மரக்கிளை இருந்தால் போதும்.. உங்கள் வீட்டில்... காலை வணக்கம்...

  17. 13 Jun 2025

    குயிலின் கூவலில், மகிழ்ந்து திளைக்க, கூண்டுகள் தேவையில்லை.... ஒரு மரக்கிளை இருந்தால் போதும்.. உங்கள் வீட்டில்...

  18. 12 Jun 2025

    தேடும் அனைத்தும் கிடைப்பதில்லை .... கிடைத்து எல்லாம் தேடி கிடைத்ததும் இல்லை ... எதையோ தேடி, எதையோ தொலைத்து, வெளியே சிரித்து உள்ளே தவித்து ...... பலருடைய வாழ்க்கை இப்படித்தான்....

  19. 2 Jun 2025

    நீங்கள், நீங்களாக இருங்கள்..... பிடித்தவர்கள் நேசிக்கட்டும்... பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்.... காலை வணக்கம்..