February 2025
28 Feb 2025
கேலிக்குரியவராய் இருப்பதை விட, கேள்விக்குறியாய் இருப்பதே கெத்து...
27 Feb 2025
வாழ்க்கை என்பது ஒரு பயணம் தான் ... பந்தயம் அல்ல, மற்றவரோடு போட்டி போட்டு ஜெயிக்க.... வாழ்க்கையை ரசித்துக்கொண்டே பயணித்து கடக்கலாம்...
26 Feb 2025
நல்லவர்களுடன் பழகினால், ஏமாற்றாமல் இருக்கக் கற்றுக் கொள்ளலாம்..... கெட்டவர்களுடன் பழகினால், ஏமாறாமல் இருக்கக் கற்றுக் கொள்ளலாம்....
25 Feb 2025
எத்தனை காலம் கடந்தாலென்ன? சில நினைவுகளுக்கு நரை விழுவதேயில்லை...
24 Feb 2025
நீங்கள் வளர்க்கும் நாய், உங்களைப் பார்த்தே குரைக்க ஆரம்பித்தால், வேறு ஒருவன் அதற்கு தீனி போடுகிறான் என்றறிக!
23 Feb 2025
எதார்த்தமான நல்ல மனிதர்கள், வாழ்க்கையில் எளிதில் காயமடைகிறார்கள்... ஏனெனில், அவர்கள் தவறான மனிதர்களை நம்புகிறார்கள்...
22 Feb 2025
நமக்கு இருக்கும் சூடு, சொரணையைத் தான், பலர், ஈகோ எனச் சொல்லி விமர்சிக்கின்றனர்...
21 Feb 2025
தன்னிலிருந்து உதிர்ந்த இலைகளை கண்டு மனம் வருந்துவதில்லை மரங்கள்.... அது இலைகளின் விடுதலை என்று நம்புவதால்....
20 Feb 2025
புன்னகை அகத்தின் அழகை மட்டுமே காட்டும்... அகத்துள் மறைத்து வைத்திருக்கும் வலிகளை அது ஒரு போதும் காட்டுவதில்லை..
19 Feb 2025
செருப்பில் புகுந்த கல்லும், வெறுப்பில் சொன்ன சொல்லும், கடைசி வரை உறுத்தி கொண்டே தான் இருக்கும்…
18 Feb 2025
சொல்ல முடியாத கஷ்டங்களை விட, சொல்ல விரும்பாத கஷ்டங்களே அதிகம், இங்கு...
17 Feb 2025
நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுவதில்லை.... ஆனால் நீங்கள் தேடுவதை நிறுத்தப்போவதில்லை... அது விலகி ஓடுவதையும் நிறுத்தப் போவதில்லை....
16 Feb 2025
அந்த நாள் வந்தா எல்லாம் மாறிடும், இந்த நாள் வந்தால் எல்லாம் மாறிடும்னு இருக்காதீங்க... நீங்கள் மாறும் வரை எந்த நாள் வந்தாலும் எதுவும் மாறாது..
15 Feb 2025
ஏன் எனக்கு இப்படி நடக்கிறது என்பதற்குப் பதிலாக, இது எனக்கு என்ன கற்பிக்க நினைக்கிறது என்று நினையுங்கள்... அப்போது எல்லாம் மாறும்…
14 Feb 2025
மொழிகள் ஆயிரம் இருப்பினும், மௌனம் மட்டுமே அழகாய் பேசுகிறது...
13 Feb 2025
பொறுமை வாழ்க்கையை வாழ வைக்கும்... பொறாமை வாழ்க்கையை வாழ விடாமல் வைக்கும்....
12 Feb 2025
நாம் எப்போதுமே வாழ்வதற்கு முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்... ஆனால் வாழ்வதில்லை....
11 Feb 2025
விரும்பும் ஒன்று அழகாய் தெரிவது, அடைவதற்கு முன்பும்... இழந்ததற்கு பின்பும்...
10 Feb 2025
வலிகளும், வடுக்களும், அன்பால், அனுபவத்தால், சிரித்துக்கொண்டே கற்றுக்கொடுக்கும்... கற்றுக்கொள்ளும்.
9 Feb 2025
நாவிற்கு எலும்புகள் இல்லை... ஆனால் அது ஒரு இதயத்தை உடைக்கும் அளவுக்கு வலிமையானது... எனவே சொற்களை கவனமாக பயன்படுத்துங்கள்..
8 Feb 2025
மகிழ்ச்சியாக வாழ்கிறோமோ இல்லையோ, கௌரவத்துடன் வாழ்வதுதான் இனிய வாழ்வு...
7 Feb 2025
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தால், அனாதரவான போதும், ஆதரிக்க இரு கரங்கள் நீளும்....
6 Feb 2025
நம்மை விழ வைக்கவும், அழ வைக்கவும், எல்லோராலும் முடியும்... ஆனால் நம்மை மீண்டும் எழ வைக்க , நம் தன்னம்பிக்கை ஒன்றால் மட்டுமே முடியும்...
5 Feb 2025
"இப்படி எல்லாம் பேசாதீங்க" என்று அவர்கள் சொன்ன போதும், "பின்ன எப்படி பேசுவாங்கலாம்" என்று நாம் எதிர் கேள்வி கேட்கும் போதும், தொலைந்து போனது என்னவோ, நம்முடைய மதிப்பும், மரியாதையும் தான்...
4 Feb 2025
நம்பிக்கை என்பது, வார்த்தைகளில் அல்ல... மனதில் இருக்க வேண்டும்....
3 Feb 2025
குருடன் பார்வை பெற்ற முதல் நாள் தூக்கி எறிவது, இதுவரை அவனை வழி நடத்தி வந்த ஊன்று கோலைதான்... வாழ்க்கை கொடுமையானது...
2 Feb 2025
வலித்தால் அழவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை... சிரித்துக்கொண்டு நகர்தல் கூட நன்று...
1 Feb 2025
நேர்மை என்பது ஒரு போதை... பழகிவிட்டால் விட்டுவிடுவது சிரமம்....