குறிஞ்சிட்டு

August 2024

  1. 31 Aug 2024

    இல்லை என்ற வார்த்தையை சொல்லாமல் இருந்தாலே, தேவையானது உடன் இருக்கும்... தேவையற்றது விலகி செல்லும்.... காலை வணக்கம்....

  2. 30 Aug 2024

    குதிரையை கண்டதும் பயணி நொண்டியாகி விடுகிறான்.... அது நொண்டி குதிரை என்பதை அறியாமல்!!! பயணம் போவது எப்படி??? காலை வணக்கம்....

  3. 29 Aug 2024

    நம்மை வீழ்த்த தடைகள் ஏற்படுத்தினால், தடைகளை தவிர்க்க நமக்கு தெரியும் தானே?? காலை வணக்கம்...

  4. 28 Aug 2024

    ஒரு தோல்விக்கு, இன்னொரு தோல்வி ஆறுதலாய் இருக்கும்... ஆனால் வெற்றிக்கு??? முன் தோல்வி மிக பெரிய ஆயுதமாய் உடனிருக்கும்.... காலை வணக்கம்... லாவோஸ் தலைநகரத்திலிருந்து....

  5. 27 Aug 2024

    பென்சில் பின்னாடி இருக்கிற ரப்பர் போல தான் , பல  பிரச்சனைகளுக்கு தீர்வு அதிலயே அடங்கி இருக்கிறது.. நாம் தான் அதை விட்டு விட்டு எல்லா இடத்திலும் தேடிக் கொண்டிருக்கிறோம்... காலை வணக்கம்...

  6. 25 Aug 2024

    தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுகிற அறிவு, தன்னைத்தானே நேசிக்கிற அறிவு, தன்னை தானே விமர்சிக்க ஏன் தயங்குகிறது? யோசிப்போமா? காலை வணக்கம்...

  7. 24 Aug 2024

    ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது மனதின் அமைதித்தன்மையைப் பொறுத்தது.. பொறுமை தேவை... கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை..... காலை வணக்கம் ..

  8. 23 Aug 2024

    ஏன் ஓடுறம் என்றும் தெரியல, யாருக்காக ஓடுறம் என்றும் தெரியல.... ஓடுறவனும் சந்தோசமா இல்லை, யாருக்காக ஓடுறோமோ அவங்களும் சந்தோசமா இல்லை... காலை வணக்கம்...

  9. 22 Aug 2024

    புகழ்ச்சியில் வளர்பவனுக்குத்தான் பிறர் துணை தேவை.. முயற்சியில் வளர்பவனுக்கு தானே துணை... காலை வணக்கம்....

  10. 20 Aug 2024

    தெரிந்த விசயத்தை, தெரிந்த அளவுதான் பேச முடியும்.... தெரியாத விசயத்தைத் தான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.... காலை வணக்கம்...

  11. 19 Aug 2024

    சப்தமாக வாசிக்க இயலாத கடந்தகாலம் எனும் ஒரு பக்கம், எல்லோர் வாழ்விலும் இருக்கத்தான் செய்யும்.... காலை வணக்கம்.....

  12. 18 Aug 2024

    உடைந்து அழுகிற மனிதர்களுக்கு, ஒரு தொடுதல் போதும்.... அவர்களின் அழுகையை நிறுத்தவும், ஆறுதல் பெறவும்... அந்தத் தொடுதல் உங்களுடையதாக இருக்கட்டும்... காலை வணக்கம்...

  13. 17 Aug 2024

    எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள்... அதை அதை அப்படியே விட்டு விடுங்கள்... காலம் மாற்றிவிடும்... காலை வணக்கம்

  14. 16 Aug 2024

    முட்டாள் என்று நினைத்தால் கற்றுக்கொண்டே இருக்கலாம்... அறிவாளி என்று நினைத்தால் கற்றல் நின்றுவிடும்... கற்றல் தானே தெளிவை கொடுக்கும்?? காலை வணக்கம்...

  15. 14 Aug 2024

    நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மோடு இருந்துவிட்டால், நினைவின் மொழியும், பிரிவின் வலியும், தெரியாமலே போய்விடும் ... காலை வணக்கம்..

  16. 13 Aug 2024

    உங்களால், மற்றவரை ஏமாற்ற தெரியவில்லை என்பதை தான், உங்களுக்கு பிழைக்க தெரியவில்லை என்று இந்த உலகம் சொல்கிறது... காலை வணக்கம்...

  17. 12 Aug 2024

    தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.. தடம் பதித்து நடப்பவன், மாமனிதன் ... காலை வணக்கம்..

  18. 11 Aug 2024

    கடந்ததையும், நிகழ்ந்ததையும், மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தாதீர்.. மீண்டது எப்படி என்பதைப் பற்றி மட்டுமே எடுத்துச் சொல்லுங்கள், மானுடம் பயன் பெற.. காலை வணக்கம்....

  19. 10 Aug 2024

    அன்புடன் பேசுங்கள்... அது உங்களை மேலும் அழகாக்கும். காலை வணக்கம்...

  20. 9 Aug 2024

    நல்ல மாணவன் ஒரு ஆசிரியரை சுமக்கிறான்.. நல்ல தாய் ஒரு தலைமுறையை சுமக்கிறாள்.. காலை வணக்கம்

  21. 8 Aug 2024

    வெளியே காட்டிய கோபம், மன்னிப்புக்கு வழி தேடும்... உள்ளே அடக்கிய கோபம் , பழிக்கு வழி தேடும். காலை வணக்கம்...

  22. 7 Aug 2024

    எதையும் ஏற்றுக்கொள்ளும் வரை தான் வலியும் வேதனையும்... எதிர் கொண்டு வாழ்ந்தால் எல்லாமே, எதார்த்தம் தான்.. காலை வணக்கம்....

  23. 6 Aug 2024

    தோற்றாலும், மகிழ்ச்சியாய் இருக்கும் மனப்பக்குவம் போதும், அடுத்த முயற்சியை தொடர. காலை வணக்கம்....

  24. 5 Aug 2024

    கண்கள் நோவதை இமைகள் அறியும், கண்ணீர் சொல்லும்... இதயம் நோவதை யாரோ அறிவர்? எவரோ சொல்வர்?. காலை வணக்கம்...

  25. 4 Aug 2024

    பலவீனமாக இருப்பவர்கள், பிறரை மன்னிக்க மாட்டார்கள்... மன்னிப்பது என்பது மனவலிமை உடையோரின் குணம்... காலை வணக்கம்...

  26. 3 Aug 2024

    உதாசீனமோ புறக்கணிப்போ.. உணர்ந்தப் பின்பு, அவ்வளவு எளிதாக மறுமுறை தேடிச் செல்ல மனம் வருவதில்லை.. மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள மனம் துணிவதும் இல்லை..!! காலை வணக்கம்.....

  27. 2 Aug 2024

    கோபம் தேவைப்படும் போது ஒரு கேடயமாக இருக்கலாமே தவிர, ஒருபோதும் அது ஆயுதமாக இருக்க கூடாது.... காலை வணக்கம் ....

  28. 1 Aug 2024

    தானாய் கிடைத்த பொக்கிஷங்களை தொலைத்து விட்டு, குப்பைகளைக் கிளறிகொண்டிருக்கும் கோமாளிகள் நிறைந்த உலகமிது... காலை வணக்கம்..