அன்னம்

11 December 2025

Next →

திருக்குறளும் சேட் ஜிபிடியும்

வணக்கம்.. மேடையில என்னோட அமர்ந்திருக்கும் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட இருக்கும் பின் முதல் வணக்கம். என் சக பயணி உற்ற தோழியாய் இன்று வரை என்னோடு பயணிக்கும் என் துணைவிக்கும் என் உரையைக் கேட்க வந்திருக்கும் இளம் தோழிகள் அனைவருக்கும் என் வணக்கம்..

இந்த நிகழ்வு ஒரு உரையாடலாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏதோ ஒரு பேராசிரியர் உங்களுக்கு வகுப்பு எடுப்பது போன்ற உணர்வை தரக்கூடாது என்றும் நான் விரும்புகிறேன். இது ஒரு டயலாக் Dialogue..ஆக இருக்க வேண்டும். இந்த டயலாக் என்பது சாக்ரடீஸ் காலத்தில் இருந்து இருக்கிறது. சாக்ரடீஸ் நம்பியதும் அதைத்தான். தன்னுடைய கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் போதிக்கப்பட வேண்டியவை அல்ல என்பதிலும் அவர் மிகத் தெளிவாக இருந்தார். அதனால் தான் இந்த கருத்துக்களை நான் உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன் அதை ஒற்றி... ஆகவே தயவு செய்து என்னோடு சேர்ந்து உரையாடுங்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறளை வெறும் 10 வருடங்களில் தோன்றிய Chat GPT உடன் சேர்ந்து  ஒப்பு நோக்குவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற வேலையா? இல்லை என்றாலும் கூட திருக்குறளை ஒரு திசை காட்டும் கருவி என்று வைத்துக் கொண்டால் சேட் ஜி பி டி அதை வெளிப்படுத்தும் ஒரு சக்தியாக இருக்கக்கூடும்..

Chat GPT இன் அடிப்படை திருக்குறளை அடிநாதமாகக் கொண்டிருப்பது தான் அதனால் தான் இந்த தலைப்பை நான் தேர்வு செய்தேன் அந்த திருக்குறள் எல்லோருக்கும் பரிச்சயமான” கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்பதுதான்..

திருக்குறள்

அனுபவம் மற்றும் நெறிமுறைகள்: திருவள்ளுவர் தனது வாழ்க்கை அனுபவம், சமூக நெறிமுறைகள், மற்றும் மற்றும் மனித மாண்புகளை கட்டமைக்கும் குரல்களை இயற்றினார்.மனித இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு குறள்களை இயற்றினார்.

காலத்தால் மாற்றமடையாதது: திருக்குறளின் கொள்கைகள் காலத்தால் மாற்றமடையாதவை. எடுத்துக்காட்டாக,

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் ( குறள் 216) எனும் குறள் இன்றும் பொருத்தமானது.

நேற்றைய செய்தித்தாள்களில் இந்தியாவில் கடந்த வருடம் மிகவும் அதிகமாக தர்மம் செய்தவர்கள் பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.. அதில் ஹச் சி எல் நிறுவனர் திரு சிவ நாடார் அவர்கள் முதல் இடத்தை பெற்றிருந்தார். சென்ற வருடத்தில் அவர் கொடுத்த நன்கொடை 2500 கோடி ரூபாய்..  இதைத்தான் வாழும் நெறிமுறையாக வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.

சேட் ஜி பி டி..

கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக..

தரவுகளின் அடிப்படை: சேட் ஜி பி டி இணையத்தில் உள்ள பெரும் அளவிலான தரவுகளை பயிற்றுவித்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

தொழில்நுட்பம்: இது ஒரு இயந்திரக் கற்றல் மாதிரி. மனித அறிவை போலவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் மனித அறிவை முழுமையாக பிரதிபலிக்காது.

மனித குல வரலாற்றில் அப்போதைக்கு அப்போது புதிய கண்டுபிடிப்புகளும் புதிய கொள்கைகளும் சித்தாந்தங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் அடிப்படையில் நம் இனம், மொழி, நாகரீகம், பண்பாடு சம்பந்தப்பட்டவைகளின் நீட்சியாக தான் இருக்கின்றன.

பறவையைக் கண்டான். விமானம் படைத்தான். ஆமையைக் கண்டான் திசைகளை கண்டான். கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரை கண்டான்.

பண்டைய வான சாஸ்திரங்கள்.. அரிஸ்டாட்டில் தொடங்கி கலீலியோ வரையிலான பூமி உருண்டையா தட்டையா என்கிற கேள்விகள். அபாகஸ் அடிப்படையாகக் கொண்டு உருவான கணிதம் அதன் தொடர்ச்சியான ஒன்று அல்லது சைபர் இரண்டை மட்டும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கணனி இவை அனைத்தும் மனித குல மேம்பாட்டிற்காக பண்டைய வாழ்வியலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள்..

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு…..( 392)

இன்னும் என்னவெல்லாம் செய்கிறான் இந்த மனிதன்.. அவனுடைய கண்டுபிடிப்புகளுக்கு உந்து சக்தியாக இருப்பது அல்லது ஆதார சக்தியாக இருப்பது நம்முடைய, வழிவழியாக கடைப்பிடித்து வந்த வாழ்க்கை நடைமுறைகளும், அவற்றை தொகுத்து வைத்திருக்கிற இலக்கியங்களுமே ஆகும். ஆக அடிப்படையில் இரண்டுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருந்தே ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் வெளிப்பாடுதான் இந்த ஒரு சிறிய உரை...

Chat ஜி பி டி பற்றி Gen Z (jee செஞ்சி)க்கு அதிகம்  சொல்ல தேவை இருக்காது. ஆனால் திருக்குறளைப் பற்றிச் சொல்ல வேண்டிய ஒரு அவசியம் என்று இருக்கிறது அது தமிழ் பண்பாட்டை, மொழியை, நாகரீகத்தை சொல்லும். கடந்த நூற்றாண்டு வரை மறைக்கப்பட்ட ஒரு பொக்கிஷம் அது.. அதை மீட்டெடுத்து இந்த உலகம் அறியு செய்ததில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்லின்டன் என்பவருக்கும், அதை 1812 இல் பதிப்பித்த சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த எல்லீஸ் என்பவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது . இதில் கந்தப்பன் என்கின்ற தமிழருக்கு பெரும் பங்கு இருக்கிறது காரணம் அன்றைய நாளில் அவை ஏறி ஊட்டுவதற்காக இவ்விடம் தரப்பட்டவை ஓலைச்சுவடிகளை கண்டு வியந்து இவர் தன்னுடைய அதிகாரியான ஆள்லிங்டன் என்பவரிடம் தருகிறார்.. ஓலைச்சுவடிகளை வேண்டுமென்றே எரித்த காலத்தில் தப்பி பிழைத்த நூல் இது அதுவே இது எவ்வளவு சிறந்த நூல் என்பதற்கு இந்த உதாரணம்..சற்றே குறைய எல்லா இந்திய மொழிகளிலும், 40-க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையைக் கொண்ட தங்கப் பேழை அது..

CHAT GPT என்பது கணினி உலகத்தில் மிக சமீபத்திய வரவு. இது செயற்கை நுண்ணறிவு, மொழி மாதிரியே கொண்டு இயங்கும் கணினி தொழில்நுட்பம். கணினிக்கும் அதை இயக்கும் நபருக்கும்  இடையே சற்றே ஏறக்குறைய ஒரு உரையாடலை நடத்தக்கூடியது.Chat bot என்று இதை அழைப்பது வழக்கம்.. பயனாளி என்ன நினைக்கக் கூடும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் இது செயல்படும்..

திருக்குறளும் சேட் ஜிபிடியும்: இரு யுகங்கள், இரு மொழிகள், ஒரு இலக்கு?

மனித அறிவின் பயணத்தில், ஒவ்வொரு யுகமும் தனக்கென ஒரு தனித்த வடிவமைப்பையும், வெளிப்பாட்டு மொழியையும் கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மண்ணில் முளைத்தெழுந்த திருக்குறள் என்ற நூல், மனிதனின் தனிப்பட்ட, சமூக, அரசியல் வாழ்வை அனைத்து அடிப்படைகளிலும் வழிநடத்த ஒரு 'மனிதக் குறியாக்கம்' (Human Algorithm) ஆகும்.  The process or set of rules to be followed in calculations or other problem-solving operations, especially by a computer

 இன்று, டிஜிட்டல் யுகத்தில், சேட் ஜிபிடி போன்ற பெரும் மொழி மாதிரிகள், தரவுகளைக் கற்றல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மனிதனுடன் உரையாடல் மூலம் அறிவைப் பகிரும் ஒரு 'துணைக் கருவியாக' (AI Tool) உள்ளது. இவ்விரண்டிற்கும் இடையேயான ஒப்பீடு, தொழில்நுட்பத்தின் மாற்றத்தையும், மனிதனின் அடிப்படைத் தேவைகள் மாறாமல் இருப்பதையும் ஒரேசமயத்தில் வெளிப்படுத்துகிறது.

திருக்குறள்: திருக்குறளின் அறிவு, முழுக்க முழுக்க மனித அனுபவத்தின் சாரத்தில் இருந்து வெளிப்படுகிறது. வள்ளுவப் பெருந்தகை, மனித வாழ்க்கையின் நுண்ணிய நெளிவு சுளிவுகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கண்காணிப்பில் இருந்து சுத்திகரித்து, 1330 குறட்பாக்களாக, 'செல்லும்' மற்றும் 'செல்லாத' வாழ்க்கை நெறிகளை வகுத்துத் தருகிறார். இது ஒரு செயல்முறை அறிவியல் (Processed Wisdom and evolving wisdom).

சேட் ஜிபிடி: சேட் ஜிபிடியின் அறிவு, இணையத்தில் உள்ள அகன்ற தரவுகளின் கூட்டத்தில் இருந்து பெறப்படுகிறது. இது புத்தகங்கள், கட்டுரைகள், வலைப்பக்கங்கள், கோடிக்கணக்கான மனித உரையாடல்கள் என்பவற்றை உள்ளடக்கியது. இது தரவுகளைக் கற்று, முறைமைகளை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் பதில்களை உருவாக்குகிறது. இது ஒரு தரவு-ஆதரவு அறிவு (Data-Driven Intelligence).

ஆனால் இவை அனைத்தும் திருவள்ளுவர் கூறிய அறம் பொருள் இன்பம் இவற்றை உள்ளடக்கி இயங்குகிறதா அல்லது இயங்க வைக்க முடியுமா என்பதுதான் ஆகப்பெரும் கேள்வியாக நம் மனதில் தோன்றுகிறது. அதை பற்றி தான் இங்கு சற்று நேரம் நாம் விவாதிக்கப் போகிறோம்.

அறம் என்பது நெறி, நல்வழி, சமநிலை போன்றவற்றை போதிப்பது. ஆனால் சேட் ஜி பி டி அதை செய்கிறதா இல்லை என்று தானே கூற வேண்டும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதாக தான் சேட் ஜி பி டி உருவாக்கப் பட்டிருக்கிறதே அன்றி

அதில் அறம் இருக்கிறதா என்பதை பல நேரங்களில் பார்ப்பதில்லை. பகுத்தறிவு என்பது அதற்கு கிடையாது..

அறத்தோடு செய்யும் செயல் மனித குலத்திற்கு உயர்வு என்று வள்ளுவன் சொன்னாலும் அது சேட் ஜி பி டி க்கு  கிடையாது.

அதற்கு "சரி" & "தவறு" என்கிற தனித்த உணர்வு கிடையாது.

அதை யார் எவ்வாறு பயிற்றுகிறார்களோ அப்படித்தான் பதில் சொல்லும் .அதனால்:“Ethical AI என்று ஒன்றை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” உலகம் இன்று கேட்கிறது உண்மையாகவே வந்துவிட்டது.

இந்த Ethical AI உருவாக்குவதில் Gen Z  உடைய பங்கு மிகவும் அதிகம் என்பதாலும் அதை சாதிக்க போகிற நாளைய தலைமுறை நீங்கள் என்பதாலும் இந்த உரையாடல் மிகவும் அவசியமாக தெரிகிறது. இங்கு அமர்ந்திருக்கும் பலரும் நாளை அதற்குத் தேவையான கோடு Code எழுதுபவராக கூட மாற வாய்ப்பு இருக்கிறது ஆதலால் உங்களுடன் இதைப் பற்றி விவாதிப்பது நலம் பயக்கும் என்பதும் என் எண்ணம்.

திருக்குறளில் பல்வேறு இடங்களில் பகுத்தறிவு சம்பந்தப்பட்ட, மூடநம்பிக்கையின் அடிப்படையில் இயங்க கூடாது என்பது பற்றி குறிப்புகள் இருக்கின்றன. நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு திருக்குறள் “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”. ஆனால் சேட் ஜி பி டி செய்யாது... காரணம் சேட் ஜி பி டி யின் பதில்கள் வெறுமனே உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் இருக்கும்..

அதுபோன்றே குறள் 355 படியுங்கள்.. “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.”. இந்த பகுத்தறிவு  சேட் ஜி பி டி உள்ளதா? இல்லை . அதற்கு பகுத்தறிவு என்கிற ஆறாம் அறிவு கிடையாது.. நாளை இப்படி அது இயங்குமா இயங்கலாம் உங்களைப் போன்ற Gen Z  தருகிற உள்ளிட்டு தரவுகளை பொறுத்தது .

அதைப் போன்று Chat GPT ஒரு சில நேரங்களில் தனி மனித அழிவிற்கும் வழி சொல்கிறது.. Juliana என்கிற ஒரு பதின்மர் பருவ பெண்,  தற்கொலை செய்ய உதவ முடியுமா என்று சேட் ஜி பி டி போன்ற ஒரு Chatbot  இடம் கேட்க அது உதவி செய்து அந்தப் பெண் மரணித்தார் என்பதை பிபிசி ஒரு செய்தி குறிப்பில், சென்ற வாரம், சொல்லியது..

அப்படி எனில் அது தவறு. இதைத்தான் நாம் சேட் ஜி பி டி கு பகுத்தறிவு இல்லை என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் சேட் ஜி பி டி முறையாக திருவள்ளுவனை பின்பற்றி பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் சேட் ஜி பி டி என்ன சொல்லி இருக்கும் அந்தப் பெண்ணிடம்?

தோழி என்னுடைய குறள் 625 படிக்கவும்.. நான் சொன்னது

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். அதாவது,துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

----

அதே நேரத்தில்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்." (குறள் 198)

பயன் தரும் அரிய உண்மைகளை ஆராய்ந்து அறியும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களை  பேச மாட்டார்கள். இது, அறிவை பயனுள்ள சிந்தனைக்கும் செயலுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குறளுக்கு ஏற்றவாறு தானே சார்ஜ் பிடி செயல்படுகிறது உங்களுக்கு தெரியாத உண்மைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது ஆக வள்ளுவனோடு ஒத்து போகிறதா இல்லையா?

மற்றவர்களின் உள்ளக் குறிப்பை, அதாவது மன எண்ணங்களை, ஆராய்ந்து அறிவது பகுத்தறிவின் முக்கியமான ஒரு பயன்பாடாகும். குறிப்பறிதல் என்பது உள்ளுணர்வு ( intiution)அல்ல; நுண்ணிய கவனிப்பு (Observation) மற்றும் விமர்சனப் பகுப்பாய்வு (Critical Analysis) ஆகும்.

வள்ளுவனோடு ஒத்து போகிறதா இல்லையா? .

ஆனால் அது வள்ளுவன் சொல்லும் நடுவுநிலைமைக்கு ஏற்ற இயங்குகிறதா என்றால் இல்லை என்று தானே சொல்ல வேண்டும். ஒரு உதாரணத்திற்கு கல்லூரி சிற்றுண்டி கதை.. இது அரசு கலைக் கல்லூரி இங்கு வரும் விருந்தினர்களுக்கு சிற்றுண்டி தருவதற்கான பொருளாதார வசதியை அரசு ஏற்படுத்தி தரவில்லை இந்த கல்லூரியை நிர்வகிப்பதில் சிக்கல் இல்லை தொடர்ந்து இதைப் போன்ற கூட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது Chat GPT க்கு தரப்பட்ட உள்ளீடு

ஆனால் இங்கு எனக்கு சிற்றுண்டி தரப்படுகிறது இன்றைய நிகழ்வில் என்ன நடந்தது என்று ஆறு அறிவு கொண்ட எனக்கு நன்றாக தெரியும் சிற்றுண்டி தரப்பட்டது என்பதை நான் உள்ளீடு செய்யாவிட்டால் இன்றைய நிகழ்வைப் பற்றி Chat GPT விவரிக்கின்ற போது சிற்றுண்டி தரப்படவில்லை என்பதாகத்தான் சொல்லும் இது நடுநிலைமையா இல்லை தானே?

திருக்குறள் ;

"யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு." (குறள் 127) (பேச வேண்டியதை மட்டுமே பேச வேண்டும்) சேட் ஜி பி டி தேவைக்கு மேல்  பேசாது..

தற்பொழுது இந்த Chat bot கலின் முக்கியத்துவம் எவ்வாறு உணரப்படும் என்பதை வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லி இருக்கிறார்.. இந்த திருக்குறளை கவனியுங்கள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

இப்போது வருகிற எல்லா கையடக்க தொலைபேசிகளிலும் சேட் ஜி பி டி அல்லது ஜெமினி போன்றவை இல்லை என்றால் அந்த கையடக்கத் தொலைபேசிகள் பொம்மையைப் போன்றதே.. தீர்க்கதரிசி இல்லையா?

இது பெண்கள் கலைக் கல்லூரி என்பதால் ஒரு சில செய்திகளை அதிகமாக சொல்லி என் உரையை முடிக்கலாம் என்று கருதுகிறேன்..

 

பெண்கள் நிறைந்திருக்கிற அவையில் இந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. Ms.ஆடா லவ்லேஸ் என்னும் பெண்மணி தான்1840ஆம் ஆண்டு ஒரு இயந்திரத்துக்காக உருவாக்கப்பட்ட முதல் அல்கொரிதத்தை வடிவமைத்ததால், உலகின் முதல் கணினி நிரலாளர் (Computer Programmer) என பரவலாக கருதப்படுகிறார். அவர் புகழ்பெற்ற கவிஞர் லார்ட் பய்ரனின் மகள் ஆவார்.

 

இது ஒரு அரசு விழா அரசு கலைக்கல்லூரியில் நடக்கிற அரசு விழா இங்கு அரசு சார்ந்த ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வது இனிமையானது..

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது. என்று சொன்னார் வள்ளுவர்

தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும் .

 

இந்த அரசு இந்த  தேவையை மனதில் கொண்டு பெண்களுடைய கல்வியில் எவ்வளவு அவர்களை முன்னேற்ற முடியுமோ அவ்வளவு முன்னேற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியாவிலேயே இங்குதான் ஆராய்ச்சி படிப்பு முடிகிற வரை இலவச கல்வி கொடுக்கப்படுகிறது GER 53% இன்றைய தமிழக முதல்வர் அவர்களும் படி, படி என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார் அந்த சிறப்பான படிப்பை அக கல்வியை, புற கல்வியை நீங்கள் எல்லோரும் பயின்று பின்னாளில் நீண்ட நெடிய புகழை பெற வேண்டும் என்று சொல்லி வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி உரை முடிக்கிறேன்..

நன்றி..