குறிஞ்சிட்டு

August 2026

  1. 26 Aug 2026

    செருப்பில் அடிக்கப்படும் ஆணிக்கு வலிக்கும்.. அடிவாங்கும் செருப்புக்கும் வலிக்கும்.. அடிக்கிற சுத்தியலுக்கும் வலிக்கும்.. வலி இன்றி வாழ்க்கை தான் என்ன? காலை வணக்கம் ..

  2. 25 Aug 2026

    அமைதியா இரு என்பது என் குரலை இழப்பது அல்ல... என்னை இழப்பது.... குரல்வளை நசுக்கப்பட்ட பின் நான் நானாய் இருப்பது எப்படி?? காலை வணக்கம் ..

  3. 23 Aug 2026

    வாழ்க்கை எப்போதும் எதிர்பார்த்தபடி நடக்காது... ஆனால் அது , தேவையானதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்… காலை வணக்கம்..

  4. 22 Aug 2026

    நான் எப்படி இருக்க வேண்டும், என்பனதையும் , நீங்களே தீர்மானித்துவிட்டால், என் வாழ்க்கை யார் வாழ...? காலை வணக்கம்…

  5. 21 Aug 2026

    தேவையான இடங்களில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்.. இல்லையேல், வார்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்..... காலை வணக்கம்…

  6. 20 Aug 2026

    தோல்விகளும், துரோகங்களும் கடைசியாக கற்று கொடுப்பது , நாமும் சுய நலமாக இருந்திருக்கலாம் என்பதே.. காலை வணக்கம்…

  7. 18 Aug 2026

    கண்களால் அழுவது , சில நேரங்களில் பாசாங்கு போல் தோன்றும் …. மனதால் அழுது விட்டுப் போங்கள் … உங்கள் அழுகை உங்களுக்கு மட்டுமேயான ஆறுதல்… காலை வணக்கம்…

  8. 16 Aug 2026

    கம்பீரம் என்பதுஉயரமாக நிற்பதில் இல்லை ... தலை குனியாமல், நிலை குலையாமல், நேர்மையாக வாழ்வதில் உள்ளது.... காலை வணக்கம்......

  9. 15 Aug 2026

    வயசு ஆக ஆக ஒரு விஷயம் புரியுது… நம்மள புரிஞ்சுக்கிறவங்க வேணும்னு நினைக்கிறதை விட, நம்ம நிம்மதியை கெடுக்காதவங்க இருந்தாலே போதும்…. காலை வணக்கம்….

  10. 14 Aug 2026

    அழகு... பார்த்ததும் பிடிக்கும்... பழகிய பின் பிடிக்குமா என்பது தெரியாது... அன்பு... பார்த்ததும் பிடிக்குமா என்று தெரியாது... ஆனால் பழகப் பழக அதிகம் பிடிக்கும்... காலை வணக்கம்….

  11. 13 Aug 2026

    விடிகின்ற பொழுது, உழைப்புக்கு அழைப்பு …. மறைகின்ற பொழுது, உடலுக்கு அழைப்பு . ….. முறையாக இருந்தால் எல்லாம் அழகு.. காலை வணக்கம்…

  12. 12 Aug 2026

    கொடுவாளை கண்டு ஆடு பயப்படும்.. அய்யனார் பயப்பட மாட்டார்.. காலை வணக்கம்…

  13. 11 Aug 2026

    மதிப்பு கிடைக்கும் இடத்திற்கு போகணும்.. மதிப்பு கிடைக்காத இடத்திலிருந்து விலகனும்.. அதுதான் சுயமரியாதை.. காலை வணக்கம் ...

  14. 10 Aug 2026

    அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை. தன் மீது ஏறி சவாரி செய்யும் யாரையும் ஒரு முறையாவது கீழே தள்ளி விடும்.. காலை வணக்கம் ..

  15. 9 Aug 2026

    துரோகிகளை கொஞ்சம் இறக்கி வையுங்கள்... அன்பானவர்களுக்கு நிறைய இடம் தேவைப்படுகிறது .. உங்கள் இதயத்தில்.. காலை வணக்கம்…

  16. 8 Aug 2026

    யாருக்காகவும் நாம் இல்லை என்பது வாலிபத்தின் கோளாறு.... நமக்காக யாருமே இல்லை என்பது வயோதிகத்தின் கோளாறு... காலை வணக்கம்....

  17. 7 Aug 2026

    கடந்ததை நினைக்காமல் தற்சமய வாழ்க்கையை வாழவே முடியாது…. தற்சமய வாழ்வும் அப்படித்தான், நாளை கடந்ததாகும்…. ஆக, இப்போதைய வாழ்வு பத்திரம்…. காலை வணக்கம்….

  18. 6 Aug 2026

    பிரியங்களின் பகிர்தல்களோடு, அருந்தும் தேநீருக்கு அன்பின் அடர்த்தி கொஞ்சம் அதிகம்.. காலை வணக்கம்…

  19. 5 Aug 2026

    இன்று வியந்து பார்க்கும் அனைத்தும், நாளை வெறுமனே பார்க்க கூட தகுதியற்றவை ஆகி விடக் கூடும்…. காலை வணக்கம்….

  20. 4 Aug 2026

    ஒரு உறவு வேண்டாம் என்றால், பிடித்து தொங்காதீர்கள் விட்டு விடுங்கள் … பறிக்கப்பட்ட பூக்களை சில மணி நேரமே வாடாமல் வைக்க முடியும், நீரினாலும், சொட்டு கண்ணீரினானலும்…. காலை வணக்கம்….

  21. 3 Aug 2026

    விருப்பம் நிறைவேறாத போது கோபம் அதிகரிக்கிறது... விருப்பம் நிறைவேறினால் பேராசை அதிகரிக்கிறது... காலை வணக்கம்….

  22. 2 Aug 2026

    எது நிகழ்ந்தாலும் , அதை சரி செய்வதற்கு , அடுத்து ஒன்று நிகழும்…. காலை வணக்கம்….