குறிஞ்சிட்டு

July 2026

  1. 30 Jul 2026

    தன் உலகம் வெறுமையான பின்பு , யார் அதை வண்ணமாக நிறப்புகிறார்களோ , அவர்களே அப்போதைய தேவதைகள். …. காலை வணக்கம் …..

  2. 29 Jul 2026

    யாரோடும் நின்று போவதில்லை இந்த உலகம்.. எவர் வாயிலும் இல்லை இவ்வுலகத்தின் இறுதிச்சொல்.. உண்மையில் எந்த பாதையும் எங்கும் முடிவதில்லை.. காலை வணக்கம்....

  3. 28 Jul 2026

    நாம் வீழ்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பலர் முன் , நாம் வீழ்ந்து விடக் கூடாதென்று, கை கொடுத்துத் தூக்கி விடும் ஒரு சிலர் கிடைப்பது வரம் …. உங்களுக்கும் அந்த வரம் கிடைக்கட்டும்… காலை வணக்கம்….

  4. 27 Jul 2026

    அறுந்த செருப்புக்குதான் தெரியும் , அது நடந்து வந்த தூரம்… காலை வணக்கம்…

  5. 26 Jul 2026

    மன அவமானம், ஏமாற்றம், துரோகம், தோல்வி இவை எல்லாமே நம்மை தரையோடு சாய்க்க பார்க்கும் புயல்கள் தான். …. காலம் சோதிக்கும்போது கால் நடுங்குவது இயல்பு…. காலை வணக்கம்…..

  6. 25 Jul 2026

    குடை கொண்டு செல்லாதவனிடத்தில், எப்போதும் மழை பற்றிய புகார் இருக்கும்….. என்னிடம் இல்லை…. வயதின் முதிர்ச்சி, அறிவின் வளர்ச்சி… காலை வனக்கம்…

  7. 22 Jul 2026

    கட்டிவைத்தல் அல்ல .. பறந்து திரும்பி வந்தால் , ஏந்திக் கொள்ளும் பக்குவம் வரும் வரையில் , அன்பு அழகே.. காலை வணக்கம்…

  8. 21 Jul 2026

    பற்றவைக்கும் போதே சிலதும், பாதியில் எரிந்து சிலதும், முழுதும் வாழ்ந்து எரிந்து சிலதும், என தீர்கின்றன ஒரே தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகள், நம் வாழ்வை போல... சரிதானே ? காலை வணக்கம்...

  9. 20 Jul 2026

    அவமானம் காயம் அல்ல .. ஒரு கண்ணாடி ! நாம் நின்ற இடத்தையும், நம்மை அங்கு நிறுத்திய அவர்களையும், துல்லியமாய் காட்டும் கண்ணாடி! காலை வணக்கம்.....

  10. 19 Jul 2026

    கடந்த காலத்திற்கும் , நிகழ்காலத்திற்குமான போரில் , எதிர்காலம் தொலைந்து விடுகிறது… காலை வணக்கம்….

  11. 18 Jul 2026

    பல தவறுகளிலிருந்து, எல்லா வகையான பாடங்களையும் கற்றுக்கொண்ட மனிதன் , கற்றுக் கொள்ள முடியாத ஒன்று, தவறுகளை உருவாக்குவதை எப்படி நிறுத்துவது என்பதைதான்..... காலை வணக்கம்....

  12. 17 Jul 2026

    தோல்வி என்பது , இன்னும் புத்திசாலித்தனமாக , மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு... காலை வணக்கம்…

  13. 16 Jul 2026

    வெள்ளாட்டு மந்தைகளுடன் சேர்த்து, வெயிலையும், மேய்த்துவிட்டுத்தான் திரும்புகிறான் , மேய்ப்பன்… -கூடல் தாரிக்- காலை வணக்கம்…

  14. 15 Jul 2026

    காற்றில் பறக்க ஊஞ்சல் எதற்கு , கனவுகள் கண்ணில் மிச்சம் இருக்க? காலை வணக்கம்….

  15. 14 Jul 2026

    எல்லோரும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதற்காக, எல்லோரும் அப்படித்தான் வாழவேண்டும் என்ற அவசியமில்லை. ~ யாரோ~ காலை வணக்கம்….

  16. 13 Jul 2026

    அன்பு ,பாசம் ,நேசம் , காதல் எல்லாமே , ஒரு உண்மையான இதயத்தின் பேசு மொழி …. அதை களங்கமற்ற இதயம் மட்டுமே புரிந்து கொள்ளும் … உணர்ந்து கொள்ளும் … அந்த இதயம் உங்களிடம் இருக்க வாழ்த்துக்கள்…. காலை வணக்கம்….

  17. 12 Jul 2026

    ஏதுமற்று அமர்ந்திருக்கும்போது நீங்கள் காணும் வானம் பிரம்மாண்டம் .. உயர பறந்தால் அது உங்கள் கைவசம் .. பறந்து பாருங்கள் .. காலை வணக்கம்

  18. 11 Jul 2026

    முகம் தெரியாத விமானியை நம்பும் நாம், அறிமுகமில்லாத புகை வண்டி ஓட்டுநரை நம்பும் நாம், முன் பின் பார்த்திராத வாகன ஓட்டிகளை நம்பும் நாம், நம்மையே ஏன் நம்ப மாட்டோம் என்கிறோம்? யோசிப்போம்.. காலை வணக்கம்..

  19. 10 Jul 2026

    அன்பு என்பது கைபிடித்து நிறுத்துவது அல்ல ; பறவைக்கு வானத்தையும் ஆற்றிற்கு கடலையும் விட்டுக்கொடுப்பதுதான் . - தாவோயிசம்-

  20. 9 Jul 2026

    ஒரு குடையை விட்டுச்செல்வது போல , மனிதர்கள் எளிதாக உங்களை மறந்து போவார்கள்…. மறுபடியும் எப்போதாவது மழை பொழியும்போது, உங்களைத் தவறாமல் அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். காலை வணக்கம்…

  21. 8 Jul 2026

    ஒரு குடையை விட்டுச்செல்வது போல , மனிதர்கள் எளிதாக உங்களை மறந்து போவார்கள்…. மறுபடியும் எப்போதாவது மழை பொழியும்போது, உங்களைத் தவறாமல் அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

  22. 7 Jul 2026

    நடந்தால் எட்டி விடும் தூரம்தான், சோலை.. நடக்கத்தான் துணிவு வேண்டும் , சுகம் நுகர ..

  23. 6 Jul 2026

    நிஜ உலகில், சாமர்த்தியமானவர்கள் முன்னேறுவதில்லை… துணிச்சல்காரர்கள்தான் முன்னேறுகின்றனர்..

  24. 5 Jul 2026

    சிறை பிடித்து வைத்திருப்பதில் என்ன சிறப்பு ? கதவுகள் திறந்து பின்பும் , பறக்காமல் இருப்பதில் இருக்கிறது ஆக சிறந்த அன்பு…

  25. 4 Jul 2026

    உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவராக நீங்கள் இருந்தால், ஒருவிதத்தில் , நீங்களும் பிச்சைக்காரர்தான்….

  26. 3 Jul 2026

    நம்மைப் புரிந்து கொள்பவர்கள், நம்மைக் கொஞ்சம் அடிமைப்படுத்தி விடுகிறார்கள். ~ கலீல் ஜிப்ரான் ~

  27. 2 Jul 2026

    ஒரு மனிதனின் முதுகுக்கு பின்னால் செய்யக்கூடிய ஆகச் சிறந்த விஷயம் , தட்டிக் கொடுப்பது மட்டுமே......

  28. 1 Jul 2026

    நம்முடைய வாழ்க்கைல, சந்தோஷம் வரும் போது 'நல்லா வாழணும்'னு தோணும்….. ஆனா, கஷ்டங்கள் வரும் போது மட்டும் தான், 'எப்படி வாழணும்'னு தோனும்..