May 2026
31 May 2026
உங்களிடம் சொன்னால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும், உங்களிடம் சொன்னால் நான் சரியாயிகிடுவேன் என்று பகிரப்படும் துயரங்களிலும் , நிறைந்துள்ளது உண்மையான அன்பு...
30 May 2026
மீதமிருக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை இருந்தால், காலம் , எவருக்கும் துயரைத் தொடர்ந்து வழங்குவதில்லை.
29 May 2026
நம்மை சுலபமாய் மறந்து விடுபவர்களுக்காக, நம்மை சுலபமாய் புறக்கணித்து விடுபவர்களுக்காக, நம்மை சுலபமாய் நிராகரித்து விடுபவர்களுக்காக, நாம் ஏன் நம் பாதையில் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்..???
28 May 2026
ஒவ்வொரு நாளும் பலவிதமான வேஷம் போடும் மனிதர்களின் நடுவில் , உண்மை முகம் தெரியாமலே நாமும் நகர்ந்து கொண்டிருக்கிறோம்...
27 May 2026
கிடைக்கும் போதெல்லாம் , நிலைக்குமா என்ற பயத்தைத் தந்து விடுகிறது , ஆறுதலான அன்பு...
26 May 2026
வலி மனிதர்களை மாற்றுகிறது... சிலர் முரட்டுத்தனமாக மாறுகிறார்கள்,.. சிலர் அமைதியாகி விடுகிறார்கள்... சிலர் ஞானிகளாக மாறுகிறார்கள்...
25 May 2026
ஒருவர் விட்டு கொடுத்தால் ? அன்பு…. இருவரும் விட்டு கொடுத்தால் ? உறவு ….
24 May 2026
நாமே பள்ளத்தில் விழுந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. …. அடுத்தவர் விழுவதைப் பார்த்துக் கூடக் கற்றுக் கொள்ளலாம்….
23 May 2026
மன்னித்துவிடுங்கள்… ஆனால், மறந்துவிடுவது அவசியமில்லை…..
22 May 2026
யாரேனும் ஒருவர் , நம்மை நெருங்குகிறபோதும், விலகுகிறபோதும் தான், நமக்கொரு வாழ்க்கை இருக்கிறதென்றே நினைவுக்கு வருகிறது....
21 May 2026
கஷ்டப்படுத்த ஒரு வார்த்தை போதும்.. ஆறுதல் சொல்லத்தான் ஆயிரம் வார்த்தைகள் தேவை..
20 May 2026
பசித்த வயிறும், வறண்ட தலையும் சோர்ந்த நடையும், உடைந்த மனமும் சொல்லாததையா, சொல்லிவிடப் போகிறது கடந்த வாழ்வு …
19 May 2026
எதிரி முன்னாடி வீழ்ந்தா கூட பரவால்ல .. ஆனா துரோகி முன்னாடி மட்டும் கெத்தா வாழ்ந்து காட்டிடனும் …
18 May 2026
ஆகச் சிறந்த வாழ்க்கை என்பது , எப்போதும் வரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதல்ல….
17 May 2026
இழந்ததை திரும்பப்பெறும் போது , மனம் கூத்தாடும் … ஏதாவது ஒன்றை தொலைத்து விடுங்கள் … பரவாயில்லை..
16 May 2026
கேட்டு கேட்டு தான் பெற முடியும் எனில், அது கிடைக்காமல் இருப்பதே மேலானது... அன்போ, அரவணைப்போ,நமக்கான நேரமோ, எதுவாயினும்...
15 May 2026
சில உறவுகளை , வாசலிலேயே நிறுத்தி வையுங்கள் … இதயம் வரை இழுத்துச் சென்றால், நிம்மதி இழப்பீர்கள்...
14 May 2026
மற்றவருக்கு பிடித்த மாதிரி வாழ்வதை விட பல மடங்கு கடினமானது, நமக்கு பிடித்த மாதிரி நாம் வாழ்வது என்பதே...
13 May 2026
எல்லாவற்றையும் ஜெயித்து எதனுடன் வாழ???
12 May 2026
நீண்ட மவுனத்தை உடைக்கும் அந்த முதல் வார்த்தை முக்கியமானது...
11 May 2026
யாரு என்ன நினைச்சா எனக்கென்னன்னு எப்ப தோணுதோ, அப்போதான் , நம் வாழ்க்கையை நாம் வாழ ஆரம்பிக்கிறோம்….
10 May 2026
மத்தவங்க வாழ்க்கையும், அவர்களின் சூழ்நிலையும் தெரியாம, நாம தான் அறிவாளின்னு அறிவுரை சொல்லிட்டு திரிய கூடாது…
9 May 2026
நிராகரிப்பினால் கிடைக்கும் வலி என்னவென்று , உங்களுக்கு நடக்கும் வரை அதை உணர முடியாது….
8 May 2026
பிடித்ததை , பிடித்தமானவர்களிடம் இருந்து தானே கேட்டு பெற முடியும்.. பிடித்து வைக்கவும் முடியும்..
7 May 2026
சுயமரியாதை எங்கள் வேரில் இருக்கிறது. கிளைகளை நீங்கள் வெட்டி ஆகப்போவதென்ன ?
6 May 2026
ஓய்வறியா சூரியனுக்கு ஒய்வு கொடுத்தவன் காலன்… இளைய சூரியனுக்கு ஒய்வு கொடுத்தது காலம்….. ஓய்வெடுங்கள் , சற்று.. அடுத்த கால் நூற்றாண்டுகாலம் எங்களை காக்க .. காலை வணக்கம்…மே. 06. 2026
5 May 2026
ரப்பர் மரங்களுக்கு இரணங்கள் புதிதல்ல …இருந்தாலும் , cult culture is dangerous for democracy…. Good morning….
4 May 2026
எதார்த்தமாய் சிரித்திடும் மனம் .... எதிர்பார்ப்பின்றி உதவி செய்யும் மனம்..... சூழ்நிலை அறிந்து ஆறுதல் கூறும் மனம்.... கோபத்தில் இருக்கும் போது சிரிக்க வைக்கும் மனம் .. என்றும் பேரழகு.... காலை வணக்கம்....
3 May 2026
எதார்த்தமாய் சிரித்திடும் மனம் .... எதிர்பார்ப்பின்றி உதவி செய்யும் மனம்..... சூழ்நிலை அறிந்து ஆறுதல் கூறும் மனம்.... கோபத்தில் இருக்கும் போது சிரிக்க வைக்கும் மனம் .. என்றும் பேரழகு....
2 May 2026
கருவறைக்கும் ,பிணை வரைக்கும் ,இடைப்பட்ட வாழ்க்கை மிகவும் நீளமானது... அது ஒரு கோப்பை மதுவிற்கும் ,உதட்டிற்கும் , இடைப்பட்ட தூரம் போன்று அல்ல...
1 May 2026
விதைக்கு ஆயிரம் கனவுகள் இருந்தாலும், அது விழுகின்ற இடத்தை பொறுத்து தான், அதன் கனவுகள் பலிக்கும்....