March 2026
31 Mar 2026
முதிர்ச்சி என்பது ,நடந்தவற்றை மறப்பது அல்ல….. நடந்தவை நினைவுக்கு வந்தாலும் , உடைந்து போகாமல் இருப்பது….
30 Mar 2026
எல்லா உயர்வுக்கும் ஒரு வீழ்ச்சி தேவைப்படுகிறது.. உயரங்களை பிரமிக்கத்தக்கதாக மாற்றுவது பள்ளத்தாக்குகளே..
29 Mar 2026
மரணம் முற்றுப்புள்ளி அல்ல...... சில நேரங்களில் ஆச்சரிய குறிகளையும், கேள்விக்குறிகளையும் கூட தன்னுள்ளே வைத்து சாகிறது.....
28 Mar 2026
எதையும் தீர்மானிக்காதீர்கள்... மகிழ்ச்சியாக இருப்பீர்கள்… எல்லாவற்றையும் மன்னியுங்கள்... நீங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்..
27 Mar 2026
சிரித்தாற் போலவே கடவுளின் இதழை வடிக்கும் சிற்பி, சிறிதேனும் மகிழ்ச்சியில் இருந்தானா அப்போது?
26 Mar 2026
பாதி கவலைகள் கற்பனையானவை.. மீதி கவலைகள் தற்காலிகமானவை.....
25 Mar 2026
எல்லா பயணங்களும், ஒருநாள், ஓரிடத்தில், நின்று போகும். … அது எப்படி , எங்கு , எப்போது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் ..
24 Mar 2026
துன்பங்களுக்கு மட்டும் முடிவே இல்லாத போது , மகிழ்ச்சி மட்டுமே சட்டென முடிந்து விடுகிறது…
23 Mar 2026
யார் இருந்தால் என்ன? யார் பறந்தால் என்ன? மரமாய் நின்றால் , மரணம் மிஞ்சும்…
22 Mar 2026
அளவுக்கு அதிகமாக அனுசரித்துப் போனால் , நமக்கான முக்கியத்துவம் குறையும். … சுயம் தொலையும்….
21 Mar 2026
மதிப்பற்றது என்று தெரிந்தும் , அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், நிம்மதியை இழக்க நேரிடும்…
20 Mar 2026
தன்னை தானே செதுக்கிக் கொள்ள உளிகள் தேவையில்லை …. சில வலிகள் இருந்தாலே போதும் ..
19 Mar 2026
தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் அனைத்துமே, உடைந்து போகக்கூடியவை தான்…. பரவாயில்லை, உடையும் வரை தக்க வைத்துக்கொள்ளுங்கள்….
18 Mar 2026
எல்லோருக்கும் முன்மாதிரியாய் இருக்காதீர்கள்.. எல்லோருக்கும் ஆலோசனைகளை வழங்காதீர்கள். திறந்த புத்தகமாய் அனுபவங்களை வாரி வழங்காதீர்கள். உபயோகப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு புதிய விலை கிடைக்காது..
17 Mar 2026
காலம் பேசாது , ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் ….
16 Mar 2026
அன்பென்பதை வலிந்து தேடிச் சென்று அடைய முடியாது …. அது தானாய் வந்து சேர வேண்டும் நம்மிடம் ….
15 Mar 2026
இன்னைக்கு என்ன சாப்பிடலாம்னு , நாமே முடிவு பண்ற மாதிரி வாழ்ந்திடணும்….. டாக்டர் முடிவு பண்ற மாதிரி இல்லை!!
14 Mar 2026
அதிகமாக இழுத்தால் அறுந்து விடும். உறவும்,கயிறும்..
13 Mar 2026
வாழ்க்கையை கொண்டாடுங்கள்…. அனுபவியுங்கள்…போராடுங்கள்… சவால்களை கட்டிப்பிடித்து உருளுங்கள். … வெற்றி திமிரோடு எழுங்கள்… வாய்ப்புகள் திரும்ப கிடைக்காது…
12 Mar 2026
பிரச்சனையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு, என்ன உதவி வேண்டும் உனக்கு என்று கேட்பவர்களை விட, அவனுக்கு நல்லா வேணும் என்று, சபிப்பவர்கள் தான் அதிகம் இவ்வுலகில்...
11 Mar 2026
தூரங்களை நிர்ணயிப்பது, சாலைகள் மட்டுமல்ல.... வார்த்தைகளும் தான்......
10 Mar 2026
மகிழ்ச்சியாக இருக்க மந்திரங்கள் தேவையில்லை. சில மறதியால் போதும். ….
9 Mar 2026
பிறர் நம்மை பற்றி புறங்கூறுவதை தடுக்க முடியாது… ஆனால் அலட்சியம் செய்ய முடியும் தானே?? செய்தால் நன்று..
8 Mar 2026
அன்பால் இழந்தது ஏராளமாக இருப்பினும், அன்பு செலுத்துவதை இழக்காதீர்கள்…
7 Mar 2026
வாழ்வென்பது யாதெனில் , முற்பகுதியில் தேடணும் … பிற்பகுதியில் , தேடியதை இழக்கணும்..
6 Mar 2026
சில நேரங்களில் மௌனங்களும் , பின் வருவதை முன்னுரைக்கும். …… மௌனத்தை புரிந்து கொண்டவர்களுக்கு, அது நன்றாக தெரியும்.. … பேசாதிருந்தும் பழகு..
5 Mar 2026
இந்த உலகம் கண்ணீருக்கு எந்த விலையும் கொடுக்காது….. துணிந்தவனும், தூக்கம் தொலைத்தவனும் தோற்றதாய், இங்கு எந்த வரலாறும் இல்லை…..
4 Mar 2026
பெரும் மன நிம்மதி என்பது , சில விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் இருப்பதில் உள்ளது ..
3 Mar 2026
குளம் கலங்க ஒரு கல் போதும் … மனம் கலங்க ஒரு சொல் போதும் .. கலங்கிய குளமும் கலைந்த மனமும் தானாய் தெளியும்… பொறுமை காக்க….
2 Mar 2026
இரண்டாவது நபருக்கு தெரிந்தால் ரகசியம்… நமக்கு மட்டுமே தெரிந்தால் அதுதான் மனச்சாட்சி ….
1 Mar 2026
அதிகமாக யோசிப்பதை நிறுத்தினாலே போதும், கவலைகள் காணாமல் போகும்…