குறிஞ்சிட்டு

February 2026

  1. 28 Feb 2026

    யாருமே ஓய்வெடுக்க விரும்பாத, சுடுகாட்டில் இருக்கும் மரமும், யாருக்காகவோ நிழல் தர, காத்துக் கொண்டிருக்கிறது தினமும்...

  2. 26 Feb 2026

  3. 25 Feb 2026

    சுற்றி இருக்கும் இருளை கண்டு மருள்பவனை விட, நாமே விளக்காய் மாறி ஒளி காட்டலாம் என்பவனே தலைவன்.... தோழர் நல்லகண்ணு மரணித்த காலை..

  4. 24 Feb 2026

    எண்ணங்கள் ஏற்படுத்தும் விந்தை... அழுத நாட்களை இப்போது எண்ணி சிரிப்பதும், சிரித்திருந்த நாள்களை எண்ணி அழுவதும் ..

  5. 23 Feb 2026

    முதல் முறை யோசித்தால் தான் யோசனை... பல முறை யோசித்தால் அதற்கு பெயர் குழப்பம்...

  6. 22 Feb 2026

    தான் தான் சரி , தன் முடிவு தான் சரி , என முடிவெடுத்தவர்களிடம், சரியானதைக் கொண்டு செல்வது நேர விரயம்...

  7. 21 Feb 2026

  8. 20 Feb 2026

    கண்டு கொள்ளாமல் விட்டால் காடு..சரியாக கவனித்து பராமரித்து வந்தால் அது வனம்.. நம் மனம் காடா,வனமா?

  9. 19 Feb 2026

    சரிந்த பிறகும் அழகாய்ப் பெருக நீராக இருக்க வேண்டும்..

  10. 18 Feb 2026

    வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை… யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என , உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது….

  11. 17 Feb 2026

    எப்படியெல்லாமோ வாழ வேண்டுமென ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் , எப்படியாவது வாழ்ந்தால் போதும், என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது வாழ்க்கை...

  12. 16 Feb 2026

    பார்க்கும் பார்வை சரியாக இருந்தால் , போகும் பாதை தெளிவாகத் தெரியும் …

  13. 15 Feb 2026

    நீங்கள் ஒருவரை பற்றி புறம் பேசும்போது, கேட்பவர் இருவரை பற்றியும் தெரிந்துகொள்கிறார்….

  14. 14 Feb 2026

    ஒருவர் கூறுவதைக் காது கொடுத்து கேட்க இயலாதவன், பேசுவதற்குத் தகுதியற்றவன்….

  15. 13 Feb 2026

    நான் தேடும் மனிதர்களில் என்னை தேடும் மனிதர்களும் இருப்பார்கள் தானே !ஒரு பூ வண்டை தேடுவது போல !

  16. 12 Feb 2026

    தனித்து விடப்பட்டவனால் உருவாக்கப்படும் சாம்ராஜ்யம் , நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்டமானதாக உருவெடுக்கும்...

  17. 11 Feb 2026

    நமக்குத் தெரிந்த ஒவ்வொருவருக்குள்ளும் , நமக்குத் தெரியாத ஒருவன் இருக்கிறான் , அரூபியாக….

  18. 10 Feb 2026

    மெளனம் , நாம் கற்றுக் கொள்வது….. பேச்சு , நாம் கற்றுக் கொடுப்பது…

  19. 9 Feb 2026

    மனநிம்மதிக்கு சிறந்த மருந்து மௌனத்தை தவிர வேறு எதுவும் இல்லை..

  20. 8 Feb 2026

    எந்த சகுனியும் போருக்கு அழைக்க மாட்டான்…. மாறாக சூதுக்குதான் அழைப்பான்..

  21. 7 Feb 2026

    நாளை என்ன செய்வது என்பது பற்றி கவலை பட்டவன் , நேற்று இரவு செத்துப் போனான்..

  22. 6 Feb 2026

    சாவதற்கு பல வழிகள் இருந்தால் , வாழ்வதற்கு ஒரு வழி இல்லாமலா போகும் ?? வாழ்ந்து காட்டுவோம்..

  23. 5 Feb 2026

    வெறுப்புகள் துளித்துளியாகத்தான் சேரும்…..

  24. 4 Feb 2026

    ஆமை சொன்னது என்ன? நகர்ந்து கொண்டே இரு. நாட்கள் நெடிதாகினும் இலக்கை அடையும்...

  25. 3 Feb 2026

    ஒரு மனிதனின் திமிர் ,பிடிவாதம் ,நேர்மை , எல்லாம் பசியின் முன் , பறந்து போகும் ….

  26. 2 Feb 2026

    வாழ்க்கையில், மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பினால், அதற்கு, செய்வதற்கு ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்... நேசிப்பதற்கு, ஒருவர் இருக்க வேண்டும்…

  27. 1 Feb 2026

    பணம் வரும் போகும்.. கஷ்டம் வரும் போகும்... ஆனால் தொப்பை வரும், போகாது.... முடி போனா வராது.. இதுதான் வாழ்க்கை....