October 2025
31 Oct 2025
தன் சுமையை, தானே சுமக்கும் போது, தோல் அறியும், சுமை வலியை....
30 Oct 2025
முடிந்ததையும் சரி, இழந்ததையும் சரி, எப்போதுமே நினைவிற்கு கொண்டு வராதீர்கள்..... நிம்மதி போய்விடும்...
29 Oct 2025
வேப்பமரத்து தென்றலைப்போல், தாலாட்டி , தூங்க வைப்பதில்லை, பனையும், தென்னையும்...
28 Oct 2025
ஒருவர் கையில் கிடைக்கும் வரை தான் நாம் பொக்கிஷம்... கிடைத்து விட்டால், அவர்களுக்கு நாம் குப்பை .....
27 Oct 2025
கரையில் நின்று கனவு காண்பதால், சிப்பி திறக்காது, முத்தும் கிடைக்காது...
26 Oct 2025
புண்பட்டவர்கள், பண்பட்டு தான் நடப்பார்கள்...
25 Oct 2025
நாய்களின் பிரார்த்தனை பலித்துவிட்டால், வானிலிருந்து, எலும்புகள் மழையாகப் பெய்யும்!!
24 Oct 2025
வார்த்தைகள் எவ்வளவு சத்தமிட்டாலும், மெளனங்கள், சத்தமில்லாமல் சாதிக்கும்....
23 Oct 2025
ப்ரியங்களின் பகிர்களோடு அருந்தும் தேநீருக்கு, கொஞ்சம் சுவையும் அதிகம்.. அன்பின் அடர்த்தியும் அதிகம்..
22 Oct 2025
எல்லா செயல்களுக்கும்,இன்னும் நேரமிருக்கிறது என்று சொல்லாதீர்கள்.... உங்களுக்கு நேரமிருக்கும் என்று யார் சொன்னது???
21 Oct 2025
யார் துரத்துவது என்று தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.... சற்று திரும்பிப் பார்த்தால்.... காலம்....
20 Oct 2025
புரட்டாசி மாச கசாப்பு கடை போல், வெறிச்சோடி கிடக்குது, மயான பூமி...
19 Oct 2025
சிறந்ததை தேடிக் கொண்டிருப்பவர்கள் , தேடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்... கிடைத்ததை, சிறந்ததாக நினைப்பவர்கள், சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...
18 Oct 2025
எல்லோருக்குமான மழை, இரவு முழுவதும்.. நனைய மறுத்தது மனது மட்டும்..
17 Oct 2025
என்ன பெரிதாய் கேட்டு விடப் போகிறேன்? செத்தபின்பு சிவலோகம் வைகுந்தம் வேண்டாம்.. வாழும் போது, வாய்விட்டு சிரிக்க சில நட்புகளை தவிர....
16 Oct 2025
பெரிதான ஆசை ஒன்றுமில்லை.... யானை காலில் மிதி படாத, கோழிக்குஞ்சாய் சாக வேண்டும் என்பதை தவிர...
15 Oct 2025
தயங்கி நிற்பவர்கள், ஒருபோதும், தகுதியான இடத்தைச் சென்று அடைவது இல்லை..
14 Oct 2025
வார்த்தை விதைகளை தூவிவிட்டால் போதும்.. பயிரோ,களையோ நிச்சயம் முளைத்து விடும்... பயிரா , களையா என்பது வார்த்தையை பொறுத்தது..
13 Oct 2025
அறிவாளியின் தலைமையின் கீழ் அணி திரளும் முட்டாள்கள், முட்டாள் தலைவரின் கீழ் அடி பணியும் அறிவாளிகளைவிட, மோசமானவர்கள்...
12 Oct 2025
வீதிக்குப்பையை கூட்டி வைத்து எரிக்கிறார்கள், தினந்தோறும் .. மனக் குப்பையை அகற்றத் தெரியாத மனிதர்கள் ..
11 Oct 2025
மிதித்த மறுநொடியே, பழிதீர்த்துக்கொள்ளும், முள்ளாய் இரு..... செருப்பாய் இருப்பதால் யாரும் உன்னை கொண்டாடி விடப்போவதில்லை....
10 Oct 2025
தவறு செய்பவருக்கு, கோபம், போலியாக இருக்கும்.... உண்மையாக இருப்பவருக்கு, கோபம் ,திமிராக இருக்கும்....
9 Oct 2025
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுமா தெரியாது...... ஆனால் ஏதாவது ஒரு அடி , இழுத்துச் செல்லும்.. பயணிப்போம்..
8 Oct 2025
மாறிவரும் உலகத்தில் நம்மை மாற்றிக் கொள்ளாதது, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, வாழ்வில்..
7 Oct 2025
வெற்றி என்பது கொடுத்துப் பெறுவதல்ல..... அது முயன்று அடைவது...
6 Oct 2025
கோபப்பட்டு வென்று விட்டால், கோபம் பெரிது என்று அர்த்தம் அல்ல.,.. அதை தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம்...
5 Oct 2025
"இல்லை" "முடியாது", "மாட்டேன்" என்பது எல்லாம், அடுத்தவர்களுக்கு திமிராக தெரியலாம். ...... ஆனால் அது தான் நாம் நாமாக இருப்பதற்கான அடையாளம்!!
4 Oct 2025
தேவை இல்லாதவர்களிடமும், தகுதி இல்லாதவர்களிடமும், நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே, சிறந்த புத்திசாலித்தனம்...
3 Oct 2025
என் இதய கதவுகள் எப்போதும் உனக்காக திறந்தே இருக்க, வாசக்கதவு மூடியதைப் பற்றி என்ன விசாரிப்பு??
2 Oct 2025
நான் பேசிய வார்த்தைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பாவேன்.... அன்றி, அதை நீங்கள் புரிந்து கொண்ட விதத்திற்கு ,நான் எப்படி பொறுப்பாவேன்??
1 Oct 2025
எதையும் முழுதாகப் புரிந்துகொண்டுவிடாதீர்கள்... அது ஒரு ஆபத்து.... புதிர்கள் இல்லாத வாழ்வில் சுவாரசியம் இல்லை தானே??