April 2025
30 Apr 2025
முட்டாள் பழி வாங்க துடிப்பான்... புத்திசாலி, மன்னித்து விடுவான்... அதிபுத்திசாலி, அந்த இடத்தில் இருந்து, விலகி விடுவான்..
29 Apr 2025
உயிர் வாழ்வதற்கு, வலிமையும் தேவையில்லை.. அறிவும் தேவையில்லை... மாற்றத்தை உணர்ந்து, சூழலுக்கு ஏற்ப, மாறிக் கொள்வது மட்டுமே போதும்....
28 Apr 2025
கடந்து போன நாட்களுக்கு கல்லறை கட்ட தெரிந்தவருக்கு மட்டுமே, தொடர்ந்து வரும் நாட்களுக்கு தோரணம் கட்ட முடியும்...
27 Apr 2025
நல்ல மனிதர்களை சந்திக்கும் ஒவ்வொரு நாளும், நல்ல நாளே....
26 Apr 2025
ஆற்று நீருக்கு தெரியும் கடல் சேர்வது எப்படி என்று.. நமக்குத் தான் தெரிவதில்லை, வாழ்க்கையை கடப்பது எப்படி என்பது... ஆறு போல, தன் போக்கில் சென்றால், கடல் கலப்பதும், கரை சேர்வதும் இலகுவானது தான்....
25 Apr 2025
யாருடனும் வாதாட விரும்புவதில்லை... ஏனெனில், யாரும் உலகில் தோற்றுப்போக விரும்புவதில்லை.....
24 Apr 2025
அர்த்தமற்றதை விதைத்து கொண்டிருப்பதை விட, சுவடற்று மறைவதே மேல்....
23 Apr 2025
வாழ்க்கையைப் பற்றி, யார் சொல்லிக் கொடுத்தாலும், புரியாது.... ஒரு நாள், வாழ்க்கையே சொல்லிக் கொடுக்கும்... அப்பொழுது, எல்லாம் புரியும்...
22 Apr 2025
வாழ்க்கைக்கான அர்த்தத்தை நாம் உருவாக்குவதில்லை.... வாழ்ந்து கழிப்பதன் மூலம், நாம் அதை வெறுமனே கண்டுபிடிக்கிறோம்.....
21 Apr 2025
இப்போதெல்லாம் குரைக்காத நாய்களை கூட பார்க்க முடிகிறது... ஆனால் குறை சொல்லாத வாய்களை பார்க்க முடிவதே இல்லை...
20 Apr 2025
பல புள்ளிகளை இணைத்தால் தான் கோலம் ... பல தோல்விகளை இணைத்தால் தான், வெற்றி ..
19 Apr 2025
வாழ்க்கையில் மாற்றம் எங்கிருந்தும் வராது.. நாம் தான் அதை மாற்ற வேண்டும்.. அதற்கு முதலில் நாம் மாற வேண்டும்...
18 Apr 2025
கடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள்... இன்னும் நடந்து செல்ல, நல்ல நாட்கள் நிறைய உண்டு ..
17 Apr 2025
சகுனிகள் நிறைந்த உலகில், சத்தியத்தை மட்டும் வைத்து, ஒன்றும் செய்ய முடியாது... கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது...
16 Apr 2025
கிடைத்த வாழ்வை வாழ்பவனே மனிதன்.. விட்டு, விலகி, ஓடித் தொலைபவனல்ல....
15 Apr 2025
பேசியவர்கள் பேசாமல் போனால், அவர்கள் பேசியதை எல்லாம், பேசிப் பேசியே, கொல்லும் , நினைவுகள்....
14 Apr 2025
பணிவை கோழைத்தனம் என்றும், துணிவை தலைக்கனம் என்றும், பலர் தவறாய் எண்ணிக் கொள்கின்றனர்....
13 Apr 2025
சில நேரங்களில், முட்டாளாவது, அறிவுக் குறைபாட்டினால் அல்ல ..... வலிந்து, திணிக்கும் அன்பின் மிகுதியால்....
12 Apr 2025
காலம் எதையும் மறக்கடிப்பதில்லை... மாறாக, ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை மட்டுமே அளிக்கிறது ....
11 Apr 2025
சில உறவுகளை தொலைக்க நாம் விரும்புவதில்லை... அவர்கள் தானாக விலகிச் சென்றாலும் விட்டு விடுவதில் தவறில்லை....
10 Apr 2025
அனுபவம் என்பது, தவறுகளை திருத்திக் கொள்வது... ஆணவம் என்பது, தவறுகளை நியாயப்படுத்துவது...
9 Apr 2025
வாழத் தெரியாதவன் சொல்கின்ற போதனைகளை மெச்சும் உலகம், வாழ்வில் கிடந்துழல்பவர்களின் பெருமைமிகு செயல்களை, அறியாது..
8 Apr 2025
முட்டாள் புத்திசாலியாவது எப்போது? பேசாமலிருக்கும் போது...... இன்று ஒரு சிலர், ஏன் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள் என்பதை பார்த்தால், இது புரியும்.
7 Apr 2025
வாழ்க்கையின் முன்பகுதியில் வெற்றி பெற, சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை..... பின்பகுதியில் வெற்றி பெற, பொறுமையும் தன்னடக்கமும் தேவை....
6 Apr 2025
நேர்மை என்பது ஓர் போதை... பழகிவிட்டால் விட்டுவிடுவது சிரமம்... காலை வணக்கம்.....
5 Apr 2025
தேர்ந்தெடுக்கும் பாதைகள் தான் தீர்மானிக்கின்றன.. வாழ்வின் இருளையும், வெளிச்சத்தையும்...
4 Apr 2025
3 Apr 2025
இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்... வெறுத்துப் போகும் அளவிற்கு அல்ல.... வெற்றி பெறும் அளவிற்கு....
2 Apr 2025
சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? உணவு இருப்பவனுக்கு பசிக்கிற நேரம்..... எதுவும் இல்லாதவனுக்கு, உணவு கிடைக்கிற நேரமே சரியான நேரம்....
1 Apr 2025
ஒருவரை சந்திப்பது என்பது நிகழ்வு.. மீண்டும் சந்திக்க வேண்டும் என்பது துணிவு... அவரை தக்க வைத்து, அவருடன் தொடர்ந்து பயணிப்பது என்பது மகிழ்வு...