March 2025
31 Mar 2025
புத்தகத்தை கையில் எடுத்து வைத்து பார்த்த, பத்து நிமிடங்களில், தூக்கம் வந்துவிடுகிறது .. தாலாட்டு பாட புத்தகம் எங்கிருந்து கற்றுக் கொண்டது, தெரியவில்லை ..
30 Mar 2025
தேவைகளும் எதிர்பார்ப்புகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் என்பதை உணர்ந்து விட்டால், ஏமாற்றமும் வருத்தமும் இருக்காது....
29 Mar 2025
எந்தக் குளத்தில் மீன் நீந்துமோ , அதே குளத்து நீரில், அதே மீன் கொதிக்கும், குழம்பில், காலம் மாறினால்....
28 Mar 2025
பொய் சொல்லும் போது மொழியும், சரியாய் இருக்கனும்... முழியும் சரியாய் இருக்கனும்....
27 Mar 2025
நடிப்பது கூட பெரிதல்ல... எல்லோருக்கும் நல்லவராக நடிப்பது தான் பெரிது...
26 Mar 2025
உடையாத வரை ரசிக்கலாம்.. உடைந்த பிறகு, சகித்துக் கொள்ளலாமே தவிர, ரசிக்க முடியாது.. கண்ணாடியும், சில உறவுகளும்...
25 Mar 2025
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும் தான் தெரியும்... எங்கு வெளிச்சம் தேவை என்பதை, நாம் தான் முடிவு செய்ய வேண்டும்... காலை வணக்கம்...
24 Mar 2025
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும் தான் தெரியும்... எங்கு வெளிச்சம் தேவை என்பதை, நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...
23 Mar 2025
சிரித்துக்கொண்டே கடந்து விடுங்கள், சில தருணங்களை.... விவாதமும் வேண்டாம், விளக்கமும் வேண்டாம்..
22 Mar 2025
வலுவான யாருக்கும் கிடைப்பது எல்லாம் மிச்சம்... வலுவற்றவனுக்கு கிடைத்தால் தான் மிச்சம்.
21 Mar 2025
ஒவ்வொரு அறிவுரையின் உள்ளும், ஒரு சுய தம்பட்டம் ஒளிந்திருக்கும்...
20 Mar 2025
மறுக்கப்பட்ட அன்பை, மனிதன் உலகில் எங்குமே தேடி கண்டடைய முடியாது.... தேடித் தேடியே அழிய வேண்டும் என்பது விதி..
19 Mar 2025
சொற்களை சரியாக பயன்படுத்துபவர்கள் உறவுகளில் , பெரியதாக விரிசல் விழுவதில்லை...
18 Mar 2025
நாம் திறமையானவர்கள் தான்.. ஆனால், இந்த உலகத்தை திறமையாக ஏமாற்றுகிறவர்களுக்கு மட்டுமே, பெயரும்.. புகழும்... சரிதானே??
17 Mar 2025
உங்களைப் பற்றிய, பிறரது எண்ணம் என்பது, அவர்களின் பிரச்சனை,.. உங்களுடையது அல்ல... பின் ஏன் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டும்??
16 Mar 2025
வருங்காலத்தினர், படிப்பறிவில்லாத முட்டாள்களாக, இருக்க மாட்டார்கள்... மாறாக படித்ததை புரிந்து கொள்ள கூட முடியாத, அடி முட்டாளாகத்தான் இருப்பார்கள்...
15 Mar 2025
வெறுப்பவர்களுக்கு தண்டனையையும், நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் தர வேண்டுமெனில், எப்போதும் முகத்தில் புன்னகை இருக்கட்டும்....
14 Mar 2025
யானையாக மாற விரும்பும் பூனை, முதலில், எலிகளைப் பிடிப்பதை நிறுத்த வேண்டும்..
13 Mar 2025
பட்டினி போட்டு யாரையும் பணிய வைக்க முடியாது... பட்டினியாய் கிடந்தாலும் தன்மானம் மிக்கவன், தக்க பாடம் புகட்டுவான் எதிரிகளுக்கு....
12 Mar 2025
கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், வாய் இருந்தும் ஊமையாய், இருக்கத்தான் வேண்டி இருக்கிறது, சில நேரங்களில் ... சில உறவுகளை தக்க வைத்துக் கொள்ள...
11 Mar 2025
சந்தேகத்திற்குப் பிறகு வரும் நம்பிக்கை ஆழமானது... நம்பிக்கைக்குப் பிறகு வரும் சந்தேகம் ஆபத்தானது...
10 Mar 2025
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!! காலை வணக்கம்.....
9 Mar 2025
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!!
8 Mar 2025
தான் வாழ்வதற்கான ஒரு காரணத்தைக் கொண்டுள்ள ஒருவரால், தன் வாழ்வில் , தான் எதிர்கொள்ளக்கூடிய அனைத்தையும் தாங்கிக் கொண்டு, வாழ முடியும்.
7 Mar 2025
நமக்கான ஆறுதலை யாரிடமும் தேடக்கூடாது.. அவர்களுக்கு அது வெறும் கதை .. அவ்வளவே...
6 Mar 2025
விசுவாசம் ஒரு விலை உயர்ந்த பரிசு... அதை மலிவான மக்களிடம் எதிர்பார்க்காதீர்கள்...
5 Mar 2025
சரித்திரம் சொல்லும் நாம் வாழ்ந்த விதத்தை.. தன்னம்பிக்கை சொல்லும் நாம் வாழும் விதத்தை..
4 Mar 2025
வெற்றி என்பது, பணத்தை சம்பாதிப்பதுமட்டும் அல்ல... மகிழ்ச்சியை தொலைக்காமல் இருப்பதும் தான்...
3 Mar 2025
வற்புறுத்தலில் வராது, அன்பும் பாசமும்... தானாய் பிறக்கவேண்டும், விடிகாலை பூக்கும் மலர் போல்...
2 Mar 2025
தோட்டத்து மலர்கள் மண்ணின் சுமை அல்ல.. அவை உங்கள் இதயசுமை.. என்றோ இறக்கி வைத்த இதயசுமை, இன்று மலர்களாய்.. அவ்வளவே...
1 Mar 2025
கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்.. எல்லா காயங்களுக்கும் நியாயம் தேடிக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது..