குறிஞ்சிட்டு

December 2024

  1. 31 Dec 2024

    வாழ்க்கையில் ஒருநாள் எல்லாம் மாறும்.. ஆனால் ஒரே நாளில் எதுவுமே மாறாது.. அந்த மாற்றங்கள் இன்றிலிருந்து தொடங்க வாழ்த்துக்கள்...

  2. 30 Dec 2024

    காயம் என்னவோ பழையது தான்... ஆனால் காரணங்கள் தான் புதிது புதிதாய், ஒவ்வொரு முறையும்.....

  3. 29 Dec 2024

    ஒரு பெரிய சிக்கல் வரும் போது, சிறிய சிக்கல் ஒரு பெரிய சிக்கலாகத் தெரியாது...

  4. 28 Dec 2024

    வார்த்தைகளும் ஊசி போன்றது தான்.. இணைக்கவும் செய்யும், பிரிக்கவும் செய்யும்...

  5. 27 Dec 2024

    பொய்யைச் சொல்லி உதட்டில் மலரும் சிரிப்பை விடவும் அழகானது, உண்மையைச் சொல்லி, கண்ணில் நீரை வரவழைப்பது...

  6. 26 Dec 2024

    எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று தெரிந்தும், ஏனோ எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிறோம்...

  7. 25 Dec 2024

    தன்னைத் தானே கேள்வி கேட்டு பழகிக் கொண்டால், வாழ்க்கைக்கான பல ஆயிரம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்....

  8. 24 Dec 2024

    மனது சந்தோஷமா இருக்கும்போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை.. இன்று போலவே, எப்பவுமே சந்தோஷமா இருங்க.. எதிர்காலத்தை எதிர்கொள்ள கஷ்டம் இருக்காது.. கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களுடன்,

  9. 23 Dec 2024

    ஆசைகள், மனிதனை வாழ விடுவதில்லை... மனிதன், ஆசைகளை சாக விடுவதில்லை....

  10. 22 Dec 2024

  11. 21 Dec 2024

    உதவி என்ற பெயரில், மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதாலே, பல பிரச்சினைகள் உருவாகிறது...

  12. 20 Dec 2024

    கைத்தட்டல்கள் வேறுவேறானவை.. சிலருக்கு சிம்மாசனத்தைத் தரும்... சிலருக்கு இறுதி வரை, சில்லறையை மட்டுமே தரும்....

  13. 19 Dec 2024

    எதிர்பார்ப்புகள் முடியும் இடத்தில் நிம்மதி தொடங்கும்!

  14. 18 Dec 2024

    கற்றுக்கொள்வதாக முடிவு எடுத்தால், முதலில், கவலைகளை மறக்க கற்றுக்கொள்ளுங்கள்...

  15. 17 Dec 2024

    எப்போதும் தோல்வி பயத்திலேயே இருந்து வருவதற்கு, ஒரு முறை தோல்வியை சந்திப்பது சால சிறந்தது..

  16. 16 Dec 2024

    சில முற்றுப் புள்ளிகள் முழு மனதுடன் வைக்கப்படுவதில்லை... ஒன்று காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்... அல்லது காயத்தின் கட்டாயமாக இருக்கலாம்....

  17. 15 Dec 2024

    அழகானவர்கள் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள்… அன்பானவர்கள் திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறார்கள்.... திரும்பவும் நினைக்க வைக்கிறார்கள்…

  18. 14 Dec 2024

    இழந்து நிற்பது கூட முட்டாள்தனம் அல்ல... இழந்ததையே நினைத்து, நினைத்து, இருப்பதையும் தொலைப்பது தான் முட்டாள்தனம்...

  19. 13 Dec 2024

    கிடைக்காத ஒன்றுதான் சிறந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தால், கையில் கிடைத்தது எதுவும் சிறந்ததாக தெரியாது....

  20. 12 Dec 2024

    பாறைக்கும், நீரோடைக்கும், இடையே நடக்கும், இடைவிடா போராட்டத்தில், நீரோடை தான் வெற்றி பெறுகிறது.. தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்..

  21. 11 Dec 2024

    மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனம், இழப்புக்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை... நல்லதோர் மாற்றத்திற்கு தயாராகுங்கள்...

  22. 10 Dec 2024

    இன்னமும் மீதமிருக்கிற அழகான விஷயங்களைப் பற்றி யோசிப்போம்... கடந்த காலத்தை அசை போட்டு பார்ப்பது, மூடத்தனம்.....

  23. 9 Dec 2024

    நல்லவராய் இருங்கள்... ஆனால் மிகவும் கவனமாய் இருங்கள்... உலகின் அத்தனை ஏமாற்று பேர்வழிகளும், நல்லவர்களைத் தான் தேடுகிறார்கள்... ஏமாற்ற!!!!

  24. 8 Dec 2024

    நிம்மதி என்பது, இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர, இல்லாததிலும், இழந்ததிலும்,தேடுவதல்ல!

  25. 7 Dec 2024

    பொய்களை, காரணம் கேட்காமல் நம்பி விடுகிறார்கள், உண்மையை நிரூபிக்க தான், ஆதாரங்கள் தேவைப்படுகிறது!

  26. 6 Dec 2024

    கசப்பைச் சுவைக்காதவனுக்கு, இனிப்பானது எதுவென்று தெரியாது... வெற்றி பெறுவதை விட, தோற்கும்போது எப்போதும் நிறைய கற்றுக்கொள்கிறோம்...

  27. 5 Dec 2024

    சோதனைகளில் உதவி யவர்கள் நன்றிக்குரியவர்கள்.... மறக்கலாகாது... துரோகிகள் நம் வெற்றிக்கு உரியவர்கள்.... நினைவு கொள்ள வேண்டும்...

  28. 4 Dec 2024

    ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது, மனதின் அமைதித்தன்மையைப் பொறுத்தது.... கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை....

  29. 3 Dec 2024

    நீந்த முடியாத மீனை, கடல், கரையில் தள்ளி சாகடித்து விடும்... எதிர்நீச்சல் மட்டுமே சாத்தியம்...

  30. 2 Dec 2024

    தொடக்கத்தைப் பற்றி கவலைப்படாமல், முடிவுகளை நோக்கி முன்னேறுவது, ஆகச் சிறந்த நற்செயல்...

  31. 1 Dec 2024

    விடை தேடிய பயணம் தான் வாழ்க்கை... சிலருக்கு விடை கிடைப்பதில்லை... பலருக்கு வினாவே புரிவதில்லை... வாழ்க்கை கடந்து விடுகிறது ...