குறிஞ்சிட்டு

October 2024

  1. 31 Oct 2024

    ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை கடந்து விடுவதே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான நகர்வு..

  2. 30 Oct 2024

    நேசிப்பது என்பது தவம்... நேசிக்கப்படுவது என்பது வரம்... தவம் பலருக்கு வாய்க்கிறது... வரம் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது....!!

  3. 29 Oct 2024

    வலிகளை தாங்க நினைத்தால், வலித்துக் கொண்டே தான் இருக்கும்.... வலிகளை தாண்ட நினைத்தால் , வழிகள் பிறக்கும்..!!

  4. 28 Oct 2024

  5. 27 Oct 2024

    கனவுகளை கண்களில் சுமந்தால் கண்ணீர் மட்டுமே மிச்சமாகும்.. நெஞ்சில் சுமந்தால், நனவாகும் நாள் கண்களில் தெரியும்...

  6. 26 Oct 2024

    வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எதுவும் கற்றுக் கொள்ளாமல் வாழ்பவர்களுக்கும் சேர்த்து, காலம், பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கு எல்லோர்க்கும் எல்லாமும் தெரிவதில்லை..

  7. 25 Oct 2024

    "யார் என்ன சொல்வார்கள்?" என்று நாம் நினைக்கும் ஒவ்வொரு நொடியும்... நம் அழகான வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறோம்.

  8. 24 Oct 2024

    கோபம், திமிர் ரெண்டும் கண்டிப்பா இருக்கணும்... இல்லனா, கோமாளிகள் லிஸ்டில் நாமும் இருப்போம்...

  9. 23 Oct 2024

    அனுபவசாலிகளிடம் அறிவுரை கேட்கலாம்... கற்றதை விட, பட்டது அதிகமாக இருக்கும்... அவர்கள் பெற்றதை விட, இழந்தது அதிகமாக இருக்கும்..

  10. 22 Oct 2024

    உயரத்தில், மிக உயரத்தில், நாம் பறக்கும்போது, பறக்கத் தெரியாதவர்களுக்கு சிறியதாகவே தெரிவோம்... உண்மைதானே?? உயரப் பறப்போம்.. ஒரு நாள்....

  11. 21 Oct 2024

    நமக்கான விடியல் விடியும் வரை, நமக்கான ரோஜா பூக்கும் வரை, நமக்காக பிறர் கைகள் உயரும் வரை , நெஞ்சில் தீ வளர்ப்போம் .... உறவில் நேசம் வளர்ப்போம் ....

  12. 20 Oct 2024

    நமக்கான போராட்டத்தை, நாம்தான் முன்னெடுக்க வேண்டும்.... வென்றெடுக்க வேண்டும்... போராட்டம் வாழ்க்கையின் ஒரு அங்கம்..

  13. 19 Oct 2024

    இல்லாதவன் தானே என்ன செய்வான் என்று நினைக்காதீர்கள்.... இல்லாதவனுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை... எனவே, அவன் எதுவும் செய்வான்....

  14. 18 Oct 2024

    அவசியம் இல்லாதவரிடம் உண்மைகளை சொல்லாதீா்கள்... அவசியமானவா்களிடம் பொய்களைச் சொல்லாதீா்கள்.. இரண்டுமே உங்களை காயப்படுத்தும்…

  15. 17 Oct 2024

    சப்தமாக வாசிக்க இயலாத, கடந்தகாலம் எனும் ஒரு பக்கம், எல்லோர் வாழ்விலும் இருக்கத்தான் செய்யும்..

  16. 16 Oct 2024

    விறகு கடை காரனுக்கு வீணை கூட கிலோ கணக்கில் தான்... நாம் யார் என்பதை விட யார் பார்வையில் யாராக இருக்கிறோம் என்பது முக்கியம்...

  17. 15 Oct 2024

    மழையில் குடை பிடித்து நடக்கும் போது, மழை சொல்லும் கவிதையை இழந்து விடுகிறோம்... நனைந்து பாருங்கள்.. மழை கவிதை புரியும் ...

  18. 14 Oct 2024

    உறவுகளை தக்க வைக்க விரும்பினால், உள்ளத்தில் உள்ளதை, உள்ளபடி, பேசக்கூடாது....

  19. 13 Oct 2024

    எதுவுமே தொலைந்து போய்விடவில்லை.. சற்று இடம்மாறிப் போயிருக்கிறது. அவ்வளவே..... அதை காணாதவரை தொலைந்ததாய் கைவிரித்துக் கொள்கிறோம்... கண்டதும் மீண்டும் மனம் மகிழ்கிறோம்...

  20. 12 Oct 2024

    பழைய நினைவுகள் சுகமானவை தான். ஆனால், வெளியே போய் புது நினைவுகளை உருவாக்குங்கள். அவை இன்னும் சுவையாய் இருக்கும்...

  21. 11 Oct 2024

    நாளை என்ன செய்ய வேண்டும் என யோசிக்கலாம்... ஆனால் நாளை என்ன நடக்குமோ என யோசிக்காதீர்கள்... அது நமது நிம்மதியைக் கெடுத்து விடும்....

  22. 10 Oct 2024

    செல்வ செழிப்பில் தன்னிலை மறப்பவனை, வறுமையில் சுற்றமும் மறக்கும்...

  23. 9 Oct 2024

    Farewell to Ratan Tata.. நிரந்தரமாய் வைத்து மகிழ எதுவும் இல்லை... இருப்பதை எல்லாம் ஒரு நாள் இழந்து தான் ஆக வேண்டும்... பேரன்பைத் தவிர...

  24. 8 Oct 2024

    வாழ்க்கை பயணம், வரைபடத்தோடு தரப்படுவதில்லை.. பாதைகளை நாமேதான் தேடிக் கண்டுபிடித்து போக வேண்டும்.. நாம் போக போக வழியும் தானாய் கிடைக்கும்...

  25. 7 Oct 2024

    என்னை கேட்க ஆள் இல்லை என்ற பதில், இளமையில் திமிராகவும் , முதுமையில் பரிதாபமாகவும் இருக்கும்!! சரிதானுங்களே??

  26. 6 Oct 2024

    எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டது தான் இந்த வாழ்க்கை.... எதையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பது சிறப்பு...

  27. 5 Oct 2024

    கருத்துச் சொல்வதை விட, கடந்து செல்வதற்கு அதிகம் பக்குவம் தேவைப்படுவதால் , பக்குவம் அடைந்தவர்கள், தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை…

  28. 4 Oct 2024

    எனக்கு ஆணையிடாதீர்கள், வழிநடத்துங்கள்.. என்பதுதான் இன்றைய இளைஞர்களின் ஆகச்சிறந்த எதிர்பார்ப்பு...

  29. 3 Oct 2024

    பட்டுப்போனாலும் , இன்னும் துளிர்க்குமென நம்புவதே, இந்த வாழ்வின் சுவாரசியம் .........

  30. 2 Oct 2024

    அவமானங்களை சகித்து சாதிப்பவன், ஒருநாள், அடையாளமாக உயர்ந்து நிற்பான்...

  31. 1 Oct 2024

    அமைதியை போதித்த மகாத்மாவின் பிறந்த நாளில், ஆதிக்க வல்லரசின் ஒரு விரல் நசுக்கப்பட்டு இருப்பது, மகிழ்ச்சியை அளிக்கிறது... பாலை வனத்திலும் ஒரு நாள், ஒரு பூ பூக்கும் தானே!!!