குறிஞ்சிட்டு

July 2024

  1. 31 Jul 2024

    ஆசையை தவிர்த்து தேவையை நாடுங்கள்.. இல்லையெனில், ஆசைக்காய், தேவையை இழக்கும் நிலை வரும்... காலை வணக்கம்...

  2. 30 Jul 2024

    வாழ்க்கையில் அன்பை தருபவர்களை விட, அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்... அன்பும் ஒருநாள் தோற்று போகும் .. காலை வணக்கம்..

  3. 29 Jul 2024

    அமைதியாக இருப்பவர்கள் எல்லோரும் விவரம் தெரியாதவர்கள் அல்ல.... எதற்கும் பயந்தவர்களும் அல்ல... அனுசரிக்க தெரிந்தவர்கள்.. அவ்வளவுதான் வாழ்க்கை.... காலை வணக்கம்....

  4. 28 Jul 2024

    எது பிடித்திருக்கிறதோ அதை அளவோடு நேசியுங்கள். அப்போது, எதை இழந்தாலும் வலிகள் பெரியதாய் இருக்காது.. காலை வணக்கம்...

  5. 27 Jul 2024

    பழசெல்லாம் மறந்துடணும்கறது, கஷ்டப்பட்டதுக்கு பொருந்தலாம். காயப்பட்டதுக்கு பொருந்தாது... காலை வணக்கம்..

  6. 26 Jul 2024

    எங்கெல்லாம் உங்கள் அன்பை உங்களால் உணர முடிகிறதோ, அங்கெல்லாம், உங்களுக்காய் ஒரு உறவு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்... காலை வணக்கம்..

  7. 25 Jul 2024

    மனம் ஒரு குடையை போன்றது... நாம் தான் விரிக்க வேண்டும்... அது தன் வேலையை செய்ய... காலை வணக்கம்...

  8. 24 Jul 2024

    புலிகளை வழி நடத்தும் எலியின் தலைமையை விட, எலிகளை வழி நடத்தும் புலியின் படை மோசமானது... வீரம் மிக்கது ... தலைமை என்பது வீரத்தை வெளி கொணர்வது... காலை வணக்கம்...

  9. 23 Jul 2024

    வாழ்க்கையே ஒரு வித்தியாசமான அனுபவம்... சிலருக்கு புடிச்ச மாதிரி இருக்கும்..... பலருக்கு புடிச்சு இழுக்குற மாதிரி இருக்கும்..!! காலை வணக்கம்..

  10. 22 Jul 2024

    அளவோடு சிந்தித்தால் சிந்தனைவாதி... அளவுக்கு மீறி சிந்தித்தால்?? சிந்தனையே வியாதி. சரியாங்க? காலை வணக்கம் ..

  11. 21 Jul 2024

    அத்தனைக்கும் ஆசைப்படுவது ஒன்றும் தவறில்லை.. கிடைத்தால் மகிழ்ச்சி... கிடைக்க?? முயற்சி!! வேறென்ன?? காலை வணக்கம்..

  12. 20 Jul 2024

    யாருடன் நம் கோபங்கள் எளிதில் பொய்த்து போகிறதோ, அவர்களுடன் தான், நம் அன்பு, உண்மையாகவும், நிலையானதாகவும் இருக்கும்.!! காலை வணக்கம்...

  13. 19 Jul 2024

    ஒரு சிலருடன் பேசும்போதுதான் உதடுமட்டும் அல்ல மனமும் சேர்ந்து விரியும்... அந்த ஒருவர் நீங்களாக இருங்கள்... காலை வணக்கம்..

  14. 18 Jul 2024

    சொல்லாத வார்த்தை சுமை.! கேட்காத வார்த்தை சுகம்.! எங்கு??? சாவிலும் காதலிலும்!!! காலை வணக்கம் ...

  15. 17 Jul 2024

    ஆறுதலாக பேசுகிறார்கள் என்பதற்காக அத்தனையும் சொல்லி விடாதீர்கள்... அவர்களின் கவனம் உங்கள் முழு கதையும் தெரிந்து கொள்வதாகக் கூட இருக்கலாம்... காலை வணக்கம்..

  16. 16 Jul 2024

    நம் கனவை நனவாக்க, உடனே செய்தாக வேண்டிய செயல் என்னவென்றால், உறக்கத்திலிருந்து விழித்தெழுவதுதான். காலை வணக்கம்.

  17. 15 Jul 2024

    நல்ல முடிவுகள், அனுபவத்தில் இருந்து தான் பெறப்படுகின்றன.. சரி ... அனுபவம்?? தவறான முடிவுகளில் இருந்துதான் பெறப்படுகிறது... காலை வணக்கம்...

  18. 14 Jul 2024

    நிற்பது எதுவும் நிலைப்பதில்லை.. ஓடும் வரையே வாழ்வு... நிற்பது என்பது சாவு.... ஓடிக்கொண்டே இருப்போம் நிற்கும் வரை.... காலை வணக்கம்...

  19. 13 Jul 2024

    மற்றவர்களின் எல்லா தேவையைகளையும் பூர்த்தி செய்த பின் தான், நமக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்கும் என்றால், அந்தப் பெயர் வேண்டாமே ... காலை வணக்கம்

  20. 12 Jul 2024

    சில காயங்கள் மருந்தால் சரியாகும்.. சில காயங்கள் , மறந்தால் சரியாகும்... காலை வணக்கம்...

  21. 11 Jul 2024

    பிறர் முதுகுக்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே காரியம், தட்டிக் கொடுப்பது மட்டும் தான்.. பிரிது ஒன்றும் செய்யற்க... காலை வணக்கம்..

  22. 10 Jul 2024

    நாளை அனுபவிக்கலாம் என்று ,ஒத்தி போடும் ,பேதைகள் நாம்... நாளை என்பது நிச்சயமற்றது... இன்றைய பொழுது இனிமையாகட்டும்.. காலை வணக்கம்...

  23. 9 Jul 2024

    மீன் குஞ்சு தன் சின்ன இறகால் அசைத்துப் பார்க்கிறது பெரும் கடலை... முடியும் தானே? காலை வணக்கம்..

  24. 8 Jul 2024

    கண்காணிக்க எவரும் இல்லாதபோதும், கடைபிடிக்கப்படும் நேர்மையே, உண்மையான ஒழுக்கம்.. காலை வணக்கம்...

  25. 7 Jul 2024

    இந்த வாழ்க்கை இன்னும் சலிக்காமல் இருக்க காரணம், யாரோ ஒருவர் இன்னும், நம்மை நேசித்துக் கொண்டிருப்பது தான்.. காலை வணக்கம்...

  26. 6 Jul 2024

    பூக்கள் ஏன் பொறாமை கொள்வதில்லை? நாய்களுக்கு நன்றி உணர்வை சொல்லிக் கொடுத்தது யார்? வலிமையான யானை, எளிமையான பூனையிடம் ஏன் சண்டையிட்டுக் கொள்வதில்லை??? யோசிப்போமா? காலை வணக்கம்...

  27. 5 Jul 2024

    பேச்சுத் தடுமாறும் போது பேசாமல் இருப்பதே நல்லது... நதி எப்பொழுதும் ஆர்பரித்துக் கொண்டா ஓடுகிறது??? காலை வணக்கம்....

  28. 3 Jul 2024

    உலகில் வென்றவர்கள் பட்டியலை விட, தோற்றவர்கள், தோற்று கொண்டிருப்பவர்கள் பட்டியலே அதிகம்..... தோல்வி என்பது வெற்றியின் கருவறை.. உரு பெற்றவுடன் பிறப்பு வருவதுபோல் , தோல்விகள் நிறைந்ததே வெற்றி.... காலை வணக்கம்....

  29. 2 Jul 2024

    கண்ணுக்குத் தெரியாத சொர்க்கம், ஒரு சில வார்த்தைகளில் இருந்தும், ஒரு சிறு புன்னகையில் இருந்தும் பிறக்கும்... உங்களிடம் இருக்கும் அந்த சொர்க்கத்தை அடுத்தவருக்கு கொடுத்து மகிழுங்கள், சொற்களாகவும் சிறு புன்னகையாகவும்... காலை வணக்கம்...

  30. 1 Jul 2024

    ஆன்மா அமைதி பெற வேண்டுமானால், மனதை வெற்றி கொள்ள வேண்டும்.... அதற்கு இதயம் அன்பால் சூழப்பட்டிருக்க வேண்டும். காலை வணக்கம்....